பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

பாவிகளை ரட்சிக்க ஏசு ரத்தம் சிந்தினாரா?


பாவிகளை ரட்சிக்க ஏசு ரத்தம் சிந்தினார் என்று விளம்பரம் செய்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய ஜோக் இதுதான். தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் வாழும் பாவியை ரட்சிக்க 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு என்றால் என்ன என்பதையே அறியாத ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்த ஏசு கொலை செய்யப்பட்டு ரத்தம் சிந்தினார் என்பது அபத்தமாக இல்லை? ஒருவரின் பாவத்திற்காக மற்றொருவர் இறந்தார் என்பதை பாரதத்தில் உள்ள சிறுகுழுந்தை கூட நம்பாது என்கிறார் சுவாமி விவேகானந்தர். உலகிலுள்ள அத்தனை கோடி மக்களுக்காகவும் ஒரே ஒருவர் இறந்திருப்பார் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? நம்மைப் பொறுத்தவரை அவரவர் செய்த பாவங்களுக்கேற்ப இந்தப் பிறவியிலும் மறு பிறவியிலும் துன்பங்களை அனுபவிக்கிறோம். புண்ணியங்களுக்கேற்ப சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். ஏசு அவர் செய்த பாவத்திற்காகத்தான் துன்பப்பட்டிருப்பாரே ஒழிய நிச்சயமாக நமக்காக இல்லை. யூத தேவாலயங்களுக்கு சென்று அவர்களின் வழிபாட்டு முறையை குறைகூறி பிரசங்கம் செய்ததனால்தான் கொலை செய்யபட்டாரே ஒழிய இன்று வாழும் மக்களுக்காக இல்லை. இன்று ஒரு சர்ச்சுக்குள் சென்று அவர்களின் வழிபாட்டு முறையைக் குறை சொல்ல அனுமதிப்பார்களா? நமக்கு பதில் வேறொருவர் சாப்பிட்டால் நம் வயிறு நிறையுமா? இதை நம்பும் முன்னாள் நாடார்களை என்னென்று சொல்வது!

பிறவிகளிலேயே மானிட பிறப்பு உயர்ந்தது. மனிதர்களில் யாரும் பாவிகள் இல்லை.
மானிடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்.
மானிடர் ஆக்கை வடிவு சதாசிவம்.
மானிடர் ஆக்கை வடிவு சிதம்பரம்.
மானிடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே என்கிறார் திருமூலர்.

ஒவ்வொருவரும் இறைவனின் வடிவங்கள். ஒவ்வொருவரிடமும் இறைசக்தி உள்ளது. ஒருவர் பல்லாலும், ஒருவர் தலைமுடியாலும் கார், பஸ், விமானம் போன்றவற்றை இழுத்துக்காட்டுகிறார்கள். இதுபோன்ற சக்தி அவர்களிடம் மட்டுமா இருக்கிறது? அனைவரிடமும் உள்ளது. அந்த சக்தியை உணர்ந்து பயன்படுத்துவதில்தான் மனிதனிடம் வேறுபாடு உள்ளது. கிறிஸ்தவ மதத்தில் ஆத்ம சக்தியை உயர்த்துவதற்கு வழிமுறைகள் இல்லை. உரிய குருநாதரும் அதற்கான முயற்சியும் இருந்தால் அனைவரும் அற்புதங்களை செய்து காட்ட முடியும். அளப்பரிய ஆற்றல்களின் பங்குதாரராகிய நம்மை பாவிகள் என்று அழைப்பதுதான் மிகப்பெரிய பாவம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பாவத்தை அறிக்கை செய்தால் ஏசு மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவர்கள் அஞ்சாமல் குற்றங்களை செய்து பாவிகளாக வாழ்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக