பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 மே, 2020

தோள்சீலைப் போராட்டம் உண்மை வரலாறு


கி.பி.1798 ராமவர்மா் குலசேகரப் பெருமாள் வரை வேணாட்டை (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) ஆண்ட மன்னர்கள் நாடார்கள்.

சேர நாட்டை ஆண்ட மன்னர்கள் பெருமாள் என்று அழைக்கப்படுவார்கள் அவர்கள் அனைவருமே நாடார்கள்.

மக்கள் தாயமாக இருந்த நடைமுறை கேடுகெட்ட மருமக்கள் தாயமாக மாறியதால் நாடார்களுக்கு அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டது.

மலையாளப்பகுதி முழுவதுமே மார்புச்சேலை போடுகிற பழக்கம் கிடையாது. ஆனால் அங்கே உள்ள நாடார்கள் மாராப்பை போடும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

மருமக்க தாயத்தால் அதிகாரத்துக்கு வந்த நாயர்கள் நாடார்களை தோள் சீலை போடக்கூடாது என்று வற்புறுத்தினர்.

அந்த சமயத்தில் அய்யா வைகுண்டர் தொடங்கிய தர்மபதிகளுக்கு பெண்கள் தோள் சீலை அணிந்தும், ஆண்கள் தலைப்பாகை உடுத்தியும் வரவேண்டும் என்ற தன்மான நடைமுறையை ஏற்படுத்தினார்.

அங்கே உள்ள கிறிஸ்தவ பெண்களுக்கு மீட் பாதிரியாரின் மனைவி இன்றைய பிளவுஸ் மாதிரியான குப்பாயத்தைத் தைத்துக் கொடுத்து, கிறிஸ்தவ மதத்துக்கு வந்தால் குப்பாயம் போடலாம் என்றாள்.

நாயர்கள் நாடார் பெண்கள் தோள் சீலை அணிவதை தடுக்க கலவரம் செய்த போது திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆங்கிலேய ரெசிடெண்ட் இருந்தான். அவன் மூலமாக இந்து நாடார் கிறிஸ்தவ நாடார் என்ற பிளவை ஏற்படுத்தி மத மாற்றத்தைத் தூண்ட சதி செய்தார்கள் கிறிஸ்தவ மிஷனரிகள்.

அப்போது இருந்த வெள்ளைக்கார ரெசிடெண்ட் மூலம் மதமாற்றத்துக்கான சதியே தோள் சீலை கலகம்.

இன்றும் நாடார்களை கேவலம் கெடுக்க அன்று நாடார்களை தோள் சீலை போட விடாது தடுத்தது இந்து மதமும் பிராமணர்களும் என்று கேவலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் கேவல புத்தி படைத்தவர்கள்.

நாடார் சமூகம் அப்படிப்பட்டவர்களை செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும்.
தோள்சீலைக் கழக முழு வரலாற்றை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://drive.google.com/file/d/14l6LzZQtdCW0qL7HcYkoxcTcOKZbAdrO/view?usp=sharing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக