பின்பற்றுபவர்கள்

இந்து மதம்


        இந்துக்களைப் போல ஏமாளிகள் உலகில் இல்லை. கிறிஸ்தவ, முஸ்லீம் கும்பல்களின் நோக்கம் தெரியாமல் அவர்களுடைய செயல்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். நன்கொடை கொடுக்கின்றனர். குரானையோ, முகமதுவையோ அல்லாவையோ இழிவு படுத்தி ஒரு போஸ்டர் கூட ஒட்ட முடியாது. ஆனால் ராமருக்கு செருப்பு மாலை போட்டு தி.கவினர் கொண்டாடும்போது அதையும் வேடிக்கை பார்த்து அவர்களுக்கு ஆதரவாகவும் பேசும் இந்துக்கள் ஏராளமாக இருக்கின்றனர். தன்னுடைய மதத்தை இழிவுபடுத்தும் அரசியல்வாதி, நடிகர்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தாலே தமிழ்நாட்டில் பகுத்தறிவு பிசுபிசுத்து முகவரியில்லாமல் போயிருக்கும். இந்த பகுத்தறிவு அறிவாளி நடிகர்கள் இந்து மதத்தை விமரிசனம் செய்வது போல் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை விமரிசனம் செய்ய முடியாது. பகுத்தறிவு என்ற பெயரில் இந்துமதத்தையே கேவலப்படுத்தும் கருணாநிதியை ஆரம்ப காலத்திலேயே வளரவிடாமல் (ஓட்டுபோடாமல்) தடுத்திருந்தால் இவர் கோடீஸ்வரனாகி இருக்கமாட்டார். வை.கோ ஒரு மதம் மாறி. இவரையும் நம் இந்துக்கள்தான் பெரிய ஆளாக உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.
 
இந்து மதத்தின் பலமும் பலவீனமும் பிற மதத்தவரை மதம் மாற்ற வேண்டும் என்று முயற்சிக்காத பரந்த மனப்பான்மைதான். நம் பரந்த மனப்பான்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆபிரகாமிய மதங்கள் இந்து மதத்தை அழிக்க முயன்று வருகின்றன. சமண மதத்தின் வருகையின் பின் தீண்டாமை என்னும் நோய் இந்து மதத்தைப் பீடித்தது. இந்த நோய் இப்போது ஓரளவு குணமாகி வருகிறது.  இந்து மதத்தில் குறைகள் என்று அவற்றை நிவர்த்தி செய்து நம் கலாச்சாரத்தைக் காக்க வேண்டியது நம் கடமை.