பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2016

கர்த்தரால் கைவிடப்பட்டவர்கள்


கர்த்தரை நம்பினோா் கைவிடப்படாா் என்று கிறிஸ்தவா்கள் விளம்பரம் செய்கின்றனா். ஆனால் விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். அவரால் கைவிடப்பட்டு இறந்தவா்கள் ஏராளம்.

      என் நண்பர் மாணிக்கவாசகத்தின் தம்பி திடீரென்று கர்த்தரின் காட்சி கிடைத்து மதம் மாறினார். அவருடன் இருந்த அம்மா அப்பாவையும் மதம் மாற்றினார். கர்த்தரின் ஆசியினால் கார் வாங்கினார். காரில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் ஒரு பாதிரியாரையும் அழைத்து வந்தார். வழியில் விபத்தில் அவரும் அவர் மனைவியும் இறந்துவிட்டார்கள். குழந்தையும் பாதிரியாரும் பிழைத்துகொண்டனர்.  

       அருப்புகோட்டையை சேர்ந்தவர் கணேசன். இவர் மதம் மாறி ஏசு கணேசன் ஆகிவிட்டார். ஒரு சபையில் ஊழியம் செய்தார். சில காலங்களில் அவர்கள் கொடுத்த சம்பளம் போதவில்லை. கூட்டி கேட்டார். கொடுக்கவில்லை. நாமே ஒரு சபை நடத்தினால் என்ன என்று ஆரம்பித்தார். கர்த்தரை நம்பினவனோ செழிப்பான் என்று சுவரில் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கர்த்தர் இவரை செழிக்க வைக்கவில்லை. ஒரு நாள் தன் மனைவி மற்றும் குழந்தைகள் மேல் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துவிட்டார். தீ காயங்களுடன் இவர் மட்டும் பிழைத்துக்கொண்டார்.

            தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு சர்ச்சில் ஜெபம் செய்துவிட்டு ஒரு பாதிரியார் பைக்கில் வந்தார். போர்ட் டிரஸ்ட் அருகே ஒரு மாணவன் அவனுடைய அப்பா பைக்கை தெரியாமல் எடுத்துக்கொண்டு வேகமாக பாதிரியாருக்கு குறுக்கே வந்துவிட்டான். பிரேக் அடித்தார். பேலன்ஸ் தவறி விழுந்து பாவத்தின் சம்பளத்தை பெற்றுவிட்டார்.  

      ஒரு பெண்மணி ஆனந்த ஜோதி அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிகமாக பணியாற்றினார். கர்த்தரை நம்பி மதம் மாறினார். கணவரையும் மாற செய்தார். மதம் மாறுமுன் எடுக்கப்பட்ட போட்டோக்களில் மகாலட்சுமி போல் இருப்பார். மாறியபின் விதவை கோலத்தில் பூ, ட்டுநகை இல்லாமல் வெள்ளை சேலைதான் அணிவார். இவர் கணவருக்கு உடல் நலமில்லாமல் ஆனது. வைத்தியம் செய்வதற்கு பதிலாக ஜெபம் செய்தார். நோய் முற்றி சீரியஸ் ஆகிவிட்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவம் பார்த்தார்கள். கர்த்தர் கை விட்டுவிட்டார். இப்போதும் கர்த்தரை நம்பிக்கொண்டு இருக்கிறார்

                 ஒரு 13 வயது சிறுவன் மரத்தில் ஏறிவிளையாடும்போது தவறி விழுந்து வர்மத்தினால் பாதிக்கப்பட்டான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லாமல் தினசரி கூட்டம் கூட்டமாக வந்து ஜெபம் செய்தாா்கள். ஆனால் 10 நாட்களில் கர்த்தரால் கைவிடப்பட்டு இறந்துவிட்டான்.

                ஒரு பெந்தெகோஸ்தே சபையில் கணவன் மனைவி இருவரும் ஊழியர்கள். மனைவி ஜெபம் செய்துகொண்டிருக்க கணவன்  ஜீப்பு ஓட்ட சென்றிருந்தார். இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனா். ஒரு குழந்தை ஞானஸ்நானம் செய்யும் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. மற்ற குழந்தை அம்மாவிடம் சொல்லி அழைத்து வந்தது. தண்ணீருக்குள் விழுந்த குழந்தை இறந்துவிட்டது.

பாலாசீர் லாறி ஒருகாலத்தில் தினகரன்போல் ஊழியம் செய்து சம்பாதித்தாா். ஒரு விபத்தில் கருத்தர் கைவிட்டதால் பரலோகம் மிக சமீபத்தில் இருக்கிறது என்று அங்கு போய்விட்டார்.

                      இவை சில உதாரணங்கள்தான். ஏதோ கிறிஸ்தவர்கள் எல்லாம் நன்றாக இருப்பது போலவும் இந்துக்கள் குடும்பத்தில்தான் மரணமும் நோயும் கஷ்டங்களும் இருப்பது போலவும் விளம்பரம் செய்துகொண்டு இருகிறார்கள். இவர்களின் விளம்பரத்தை நம்பி நம் முட்டாள் மக்களும் அவர்கள் போடும் கூட்டத்திற்கு சென்று ஏமாந்து கொண்டு இருகிறார்கள். இந்துக்களை மதம் மாற்ற கோடி கோடி யாக செலவு செய்கிறார்கள். வெளிநாட்டு பணத்தை வாங்கிகொண்டு ஏராளமான மனித சக்தியையும் பணத்தையும் வீணாக்கி கொண்டு நம் கலாசாரத்தை சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் யாருக்கு லாபம். வெளிநாட்டவர்களுக்கு என்ன லாபம். இந்திய நாட்டின் கலாசாரத்தையும் ஒற்றுமையையும் குலைக்க வேண்டும். என்பதை தவிர வெளி நாட்டவர்களுக்கு வேறு என்ன நல்ல நோக்கம் இருக்கும்.


                 கர்த்தரை நம்பினால் கைவிடப்படார் என முட்டாள்தனமாக நம்பி ஏமாறாதீர்கள். உங்கள் கர்மவினை எந்த மதத்துக்கு போனாலும் விடாது, முழுமையாக ஈசனை சரணடையுங்கள். ஈசனை அடைய முயற்சியுங்கள்.

நீங்கள் இஸ்ரவேலர்களா


பைபிளில் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கு சொல்ல வேண்டியது என்ன என்றால் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரங்கள் ஆரம்பிகின்றன. இஸ்ரவேல் புத்திரர்களுக்கு மோசே மூலம் கர்த்தர் உத்தரவு பிறப்பிக்கிறார். உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் சொல்லவில்லை.  

             இஸ்ரவேல் யார். யாகோபு என்பவனின் பெயரை இஸ்ரவேல் என கர்த்தர் மாற்றுகிறார். இவனுக்கு இரண்டு மனைவி. அவர்களுக்கு இரண்டு வேலைக்காரிகள். இந்த கதையே ஆபாசமாக உள்ளது. முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. அவள் தன் வேலைக்காரி மூலம் பிள்ளை கொடுக்க சொல்கிறாள். அவனும் பிள்ளை கொடுக்கிறான். இரண்டாவது மனைவி சில குழந்தை பெற்றபின் அவளின் கற்பத்தை கர்த்தர் அடைத்து விடுகிறார். அவளும் அவள் வேலைகாரி மூலம் குழந்தை கொடுக்க சொல்கிறாள். அவளிடமும் உறவுகொண்டு பிள்ளை பிறக்கிறது. இவர்களின் வம்சம்தான் இஸ்ரவேல் வம்சம். இவர்களை தேனும் பாலும் ஓடுகிற நாட்டிற்கு கூட்டி போகிறேன் என்று வழியில் உள்ள கானானியர், எகிப்தியர், எப்பூசியர் என பல வம்சதவர்களை கொன்று கொள்ளை அடித்து வழிநடத்துகிறார் கருணை மயமான கர்த்தர். விரிவாக EVILBIBLE.COM.இல் பாருங்கள்

 புதிய ஏற்பாட்டிலும் இஸ்ரவேலர்களுக்கு ரட்சகராக ஏசு பிறந்தார். என்று உள்ளது. ஏசுவும் காணாமல் போன ஆட்டுக்குட்டியாகிய இஸ்ரவேலர்களுக்காகதான் அனுப்பபட்டிருகிரேன் என்கிறார். தன் சீடர்களை இஸ்ரவேலர்கள் தேசங்களுக்கு மட்டும் செல்லுங்கள். புற ஜாதியார் தேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்கிறார். ஆனால் பவுல்தான் உலகம் முழுவதும் ஏசுவுக்காக பொய் சொல்லியாவது பிரசங்கம் பண்ண சொல்கிறார். ஏசு சொன்னதை விட்டுவிட்டு பவுல் சொன்ன படி எல்லா பித்தலாட்டமும் செய்து கொண்டிருகின்றனர். மேற்படி இஸ்ரவேல் எனப்படுவர்கள் தற்போது இஸ்ரேல் நாட்டில் வாழும் யூதர்கள்தான். ஆனால் அவர்கள் ஏசுவை பின்பற்றவில்லை.  

யூதர்களை நெறிபடுத்த முயன்ற ஏசுவால் அதை நிறைவேற்ற முடியவில்லை. காசையோ அப்பத்தையோ பைகளில் வைத்து கொள்ளாமல் பறவை களைப் போல் உணவை சேர்த்து வைத்து கொள்ளாமல் வாழ் பண ஆசையே எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நபரைகூட அவரால் உருவாக்க முடியவில்லை.  

         பழைய ஏற்பாட்டு கர்த்தர் இந்த இஸ்ரவேலர்களைக் காப்பதற்காக பிற இன மக்களை லட்சம் லட்சமாக ஒழிக்க உதவி புாிகிறார். அந்த இனமக்களை உனக்கு ஒப்புக்கொடுத்தேன். அந்த மக்களில் ஆண்களையும் புருஷசம்போகத்தை அறிந்த பெண்களையும் கொல். மணமாகாத பெண்களை  பங்கிகட்டுக்கொள். கொள்ளை அடித்தவற்றை இரண்டாக பங்கிட்டு சண்டையிட்டவா்களுக்கும் சபைக்கும் பங்கிடு என்றெல்லாம் ஒரு கொள்ளையா் தலைவன் போல் செயல்பட்டதாக யூதர்கள் எழுதி வைத்துள்ளனா்.

          இங்குள்ள பாதிரிகள் இஸ்ரவேலர்கள் என்றால் தேவ ஜனங்கள் என்று புருடா விடுகிறார்கள். இங்குள்ள முட்டாள்களும் அதை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இங்குள்ள எந்த ஜாதியினரும் இஸ்ரவேலர்கள் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குலதெய்வம், சடங்குகள், சம்பிரதாயங்கள் உண்டு. ஏசுவுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமே கிடையாது. 

                       ஏசு செத்து 400 ஆண்டுகளுக்கு பின் பெத்லகேமிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஏசு பேசிய அராமிக் மொழியில் எழுதப்படாமல் ஹீப்ரு மொழியில் 40க்கும் மேற்பட்டவா்களால் புனையப்பட்ட கட்டுக்கதை ஏசு. பைபிளில் ஒருவசனம் கூட ஏசுவால் எழுதி வைக்கப்படவில்லை. ஏசு பிறப்பதற்கு முன் திருவள்ளுவா் எழுதிய நூல் இருக்கிறது. ஏசு அப்படி செய்தாா் இப்படி செய்தாா்னு அவருடைய சீடர்கள் எழுதியதாக புனையப்பட்டுள்ளது. சீடர்கள் ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக கப்சா விட்டுள்ளனா். ஒரு சீடர் ஏசு செத்தபிறகு தேவனுடைய வலது கையில் அமர்ந்ததாக கதைவிட்டுள்ளாா். மற்ற சீடர்கள் கண்ணுக்கு மட்டும் இந்த காட்சி கிடைக்கவில்லை போலும். 

                     எனவே இஸ்ரவேலர்கள் வணங்காத ஏசுவை வெளிநாட்டவா்கள் வணங்கட்டும். நாம் நம் குல தெய்வங்களை வணங்குவோம்.