பின்பற்றுபவர்கள்

திங்கள், 8 அக்டோபர், 2018

பைபிளை எழுதியது யார்?

99 சதவீதம் கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியாது.

பழைய ஏற்பாடு என்பது யூதர்களின் நூல். அதை அப்படியே காப்பியடித்து யூதக்கடவுள் ஜெகோவா என்பதை கர்த்தர் என்று மாற்றி வைத்துக்கொண்டனர். யூதர்களின் வேத புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. தோரா, நெவிஇம், கேதுவிம். இந்த மூன்றின் அப்பட்டமான காப்பியே பழைய ஏற்பாடு. தோராவில் வரும் ஆதியாகமம், எண்ணாகமம், யாத்ராகமம் போன்றவற்றை கர்த்தர் சொல்லி மோசே எழுதினார் என்று நம்புகிறார்கள். மோசே எழுதி இருந்தால் அவர், ”கர்த்தர் என்னிடம் இப்படி சொன்னார்” என்று தன்மையில்தான் எழுதி இருப்பார். ஆனால் அப்படி எழுதப்படவில்லை. கர்த்தர் மோசேயிடம் சொன்னது என்னவென்றால் என்று மூன்றாவது நபரால் எழுதப்பட்டது போல்தான் இருக்கிறதே தவிர தன்மையில் கூறப்படவில்லை. அதனால் மோசே எழுதினார் என்பது தவறு. மேலும் பழைய ஏற்பாடு முழுக்க முரண்பாடுகளும் அபத்தங்களும் ஏராளமாக இருப்பதால் நிச்சயமாக ஞானிகள் எழுதவில்லை. பாமர மக்களே எழுதியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் யூதர்களின் புத்தகத்தில் இருந்து பல பகுதிகளை தேவையற்றவை என நீக்கியுள்னா். எனவே பைபிளின் தொடக்கமான ஆதாம் ஏவாள் கதையை எழுதியவர் யார் என்பது எவருக்கும் தெரியாது.

             பழைய ஏற்பாட்டை எழுத கிறிஸ்தவர்கள் அதிக சிரமம் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டை எழுத பல நூறு ஆண்டுகள் சிரமப்பட்டு தயாரித்துள்ளனா்.  ஏனென்றால் ஏசு பிறந்ததாக கூறப்படும் பெத்லகேமில் எழுதப்படவில்லை. ஏசு பேசியதாக கூறப்படும் அராமிக் மொழியில் எழுதப்படவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. 300 ஆண்டுகள் கழித்து பெத்லகேமில் இருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கிரேக்க நாட்டில் ஹீப்ரு மொழியில் எழுதுகிறார்கள். ஏசுவின் சீடர்களில் மற்ற சீடர்களை விட்டுவிட்டு  மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதியது போல் புனைந்து எழுத அதிக சிரமம் எடுத்துள்ளனா். பல்வேறு மதங்களிலிருந்து கருத்துக்களையும், சம்பவங்களையும் காப்பியடித்து ஏசு என்ற கற்பனை கதாபாத்திரத்தை தயாரித்துள்ளனர். ஏசுவுடன் நடந்த ஒரே சம்பவத்தை நான்கு பேரும் வெவ்வேறு விதமாக எழுதியுள்னா். ஏசு பிறந்தது முதல் இறந்தது வரை எந்த சம்பவத்தையும் நான்கு பேரும் ஒரே மாதிரி எழுதவில்லை. 40க்கும் மேற்பட்ட நபர்கள் தயாரித்துள்னா் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனா். மேலும் மத்தேயு அவரே எழுதியிருந்தால், ”நான் ஏசுவுடன்  இந்த இடத்திற்கு சென்றபோது என்னுடன் இந்த சீடர்கள் இருந்தனர். ஏசு இப்படி சொன்னார். அதற்கு நான்  இப்படி கூறினேன்” என்று தன்மையில் எழுதப்படவில்லை. இதுவும் மூன்றாவது நபரால் எழுதப்பட்டது போல்தான் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஏசுவுக்கு முந்தைய கால மக்கள் எழுதிய நூல்கள் கிடைத்திருக்கும்போது ஏசு ஏன் அவர் கைப்பட ஒரு வரி கூட எழுதவில்லை என்பதற்கு விளக்கமும் இல்லை. அவர் எழுதப்படிக்க தெரியாதவராக இருந்தார் என்றும் பைபிளில் இல்லை. ஏசுவை பார்த்திராத ஏசுவுக்கு சீடராக இல்லாத பவுல் தன் சக நண்பர்களுக்கும் சபைகளுக்கும் எழுதிய கடிதங்களை பைபிளில் சோ்த்துள்னா். 
                  எனவே பைபிளை எழுதியவர்கள் யார் என்பதை ஏசுவிடம் பேசி தீர்க்கதரிசனம் சொல்லும் கிறிஸ்தவர்கள் கர்த்தரிடம் கால் போட்டு கேட்டு சொல்வார்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக