பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ஏசு பிறக்கவே இல்லை


பா.பிரகாஷ் அவர்களின் பதிவு
படிக்கும் முன்:  _இது ஒரு கருத்து பெட்டகம். பொய்யை தோலுரித்துக் காட்டும் பதிவு. ஒவ்வொரு உண்மையான  தமிழனும் இந்த மண்ணிற்கு உரிய  பண்பாட்டை, கலாச்சாரத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனில் படித்து, பின் தெளிந்து பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பதிவு. மறக்காமல் குழந்தைகளுக்கு புரிய வைத்து விடுங்கள்._ 🙏
இனி உள்ளே செல்லுங்கள்👇🏿

 *உலகின் மிகப்பெரும் கட்டுக்கதை ஏசுவின் கதை.* இந்த கதை உலகின் பெரும்பாலான மக்களை இன்றைய விஞ்ஞான யுகத்திலும் கூட முட்டாளாக்கி கொண்டிருப்பது தான் ஆச்சரியத்திலும் பெரும் ஆச்சரியம்.

ஏசு என்ற ஒருவர் இருந்தார் என்று வெள்ளை கிறிசவர்களின் கதைகள் சொல்கின்றன. 

 *மேத்யு, மார்க், ஜான், லூக்* ஆகிய நால்வர் தந்த செய்திகளை வைத்தே ஏசு என்று ஒருவர் இருந்தார் என்று கூறும் புதிய ஏற்பாடு மூலம் இந்த‌ உலகத்துக்கு தெரிய வந்தன. ஆனால் அதைக் கூறிய  அந்த நால்வரை குறித்த விவரங்கள் எதுவுமே இல்லை. 

இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதருக்கும், 
*இந்த நால்வர்கள் யார் ? எப்போது ? எங்கே ? இதை எழுதினார்கள் என்று தெரியாது.*

இந்த நால்வரின் மூலமாக உலகுக்கு தெரிய வந்த செய்திகள் 
(அதாவது நற்செய்தி எனும் காஸ்பெல்) ஒன்றோடு ஒன்று முரன்படுகின்றன. இருப்பதிலேயே *மார்க்* அவர்களின் செய்திதான் பழமையானது என பைபிள் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அது சிறியதாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதுதான். *மேத்யு* , மற்றும் *லூக்கின்* செய்திகள் இந்த மார்க் அவர்களின் செய்தியின் விரிவாக்கமே என்றும், அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் *மார்க்கின் செய்தியில், கன்னி மேரியின் பிறப்பை குறித்தோ, ஏசுவின் மலை பிரசங்கம் குறித்தோ, மற்றும் ஏசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான‌ முக்கியமான தகவல்களோ இல்லை*

. இந்த தகவல்கள் மேத்யு மற்றும் லூக்கின் செய்திகளிலேயே சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்து இந்த அடிப்படையான மார்க்கின் செய்திகள், *அதற்கு முன் இருந்த "ஒரிஜினல் மார்க்" எனும் ஆவனத்தில் இருந்து  விரிவுபடுத்தப்பட்டவை.* 
 
   அந்த உண்மையான ஒரிஜினல் மார்க் எனும் ஆவனம் சர்சுகள் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே அழிந்துவிட்டது என்பது உண்மை. ஆக அனைத்துக்கும் ஆதாரமாய் இருக்கும் அந்த *ஒரிஜினல் மார்க் யாரால், எப்போது, எதைப் பற்றி, என்ன தகவலோடு எழுதப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.-* ஜானின் செய்திகளோ சரித்திர முக்கியத்துவம் இல்லாத ஆவனங்கள் என்று கிறிசவ அறிஞர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டவை. அது   ஏசு என்பவருக்கு  கிரேக்க   தத்துவங்களின் தன்மைகளை கலந்து, இறைத்தன்மையோடு அவர் இருந்திருக்க கூடிய புரிவுகளை கொண்ட அறிக்கை மட்டுமே என்கிறார்கள். ஆக மேத்யு, மார்க் மற்றும் லூக்கின் செய்திகள் வெறும் தோராயமாக‌ எழுதப்பட்ட (Synoptic Gospels) என்று சொல்கிறார்கள். 

இந்த மூவரின் செய்திகளுக்கும், ஜானின் செய்திகளும் எண்ண ரீதியில் எதிர்மறையாய் உள்ளன. ஆக,  இந்த முதல் மூன்று செய்திகளுக்கும் மற்றும் நான்காவது செய்திகளுக்கும் இடையே. இரு வேறு விதமான ஏசு காணப்படுவதை எல்லா விமர்சகர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.

 ஆனால் இவை இரண்டு முரண்பாடுகள் மட்டும் அல்ல, உண்மையில் மூன்று உள்ளன. 

மார்க்கின் கூற்றுப்படி _யேசு ஒரு மனிதர்_ . 

மேத்யு மற்றும் லூக்கின் கூற்றுப்படி _அவர் ஒரு தேவன்._ 

ஜானின் கூற்றுப்படி _அவர் ஒரு இறைவன்_ .

ஏசு எனும் ஒருவர் இருந்தார் என்பதற்கு சாட்சியாய், ஆதாரமாய் உள்ள இந்த செய்திகள் அவர் இறந்ததாய் சொல்லப்படுகிற காலத்தில் இருந்து, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு இருந்ததாய் எந்த விதமான சிறு ஆதாரங்களும் இல்லை. கிறிசவ ஆய்வாளர்களுக்கு  இந்த செய்திகள், எப்போது, எங்கே புனையப்பட்டன, என்பதை சொல்ல முடியவில்லை.

 கிறிசவ அறிஞர்கள் சில‌ அனுமானங்களோடு, மார்க்கின் முதல் செய்தி  ஏசு பிறந்ததாய் சொல்லப்படுவதற்கு பின் எழுபது ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது என்றும், லூக்கின் செய்திகள் 110 ஆண்டுகள் கழித்து என்றும், மேத்யுவின் செய்திகள் 130 ஆண்டுகள் கழித்து என்றும், ஜானின் செய்திகள் 140 ஆண்டுகள் கழித்து என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் முதல் முதலில் இரினியஸ் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் ஆதார பூர்வமாக இந்த மேத்யு, மார்க், மற்றும் லூக்கின் செய்திகளை மேற்கோள் காட்டி 
 *பொது ஆண்டு 190 ல்* ்.வால்டர் ஆர் கேஸ்ஸல்ஸ் (Walter R. Cassels) எனும் அறிஞர்  குறிப்பிடுகிறார். ஏசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு அவர் இறந்த பிறகு கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு எந்தவிதமான செய்திகளும் இல்லை. *ஒருவர் உயிரோடு இருக்கும் போது எழுதப்படாமல், கிட்டதட்ட நூற்று ஐம்பது ஆண்டுகள் கழித்து அவரை குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளதை எப்படி ஆதாரமாக கொள்ள முடியும் ?*

 இன்று ஒரு மனிதன் நூற்றி ஐம்பது வருடம் முன்பு வாழ்ந்தான் என்பதை எந்த ஆவண‌ங்களும், ஆதாரமும் இல்லாமல் எழுதினால் அதைக் கூட ஒத்துக் கொள்ளாத உலகம் 1700 வருடங்களுக்கு முன்பு கடவுள் போல ஒருவன் வாழ்ந்தான் என்பதை எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சொன்னால் அது உண்மை என்று ஒத்துக் கொள்ள முடியுமா ? 
    
           சரி. ஏசு என்று சொல்லப்படுபவர் கதைப்படி யூதர். அவரின் சீடர்கள் யூத மீணவர்கள். அவரின் மொழி அன்றைய பாலஸ்தீனத்தில் பேசப்பட்ட அராமைக் மொழியாக‌தான் இருக்க வேண்டும். ஆனால் அவரின் செய்திகள் (காஸ்பெல்கள்) கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளன.* அவைகள் எந்த மொழியிலிருந்தும் மொழிப்பெயர்க்க பட்டவையும் அல்ல. ஆக அயல்நாட்டு மொழியில், அயல்நாட்டு செய்தியாளர்களால், அறியப்படாத மனிதர்களால், அவர் இறந்ததாக சொல்லப்படுகிற காலத்தில் இருந்து பல தலைமுறைகள் கழித்து எழுதப்பட்டவைதான் ஏசு என்பவர் இருந்தார் என்பதற்கு ஆதாரமாய் இருக்கிறது.

 *அத்தனை ஆதாரங்களும் உள்ள மகாபாரத்தை மித் (myth ) என்கிறார்கள் . இந்த ஆதாரமில்லாத யேசு கதையை சரித்திரம் என்கிறார்கள்,* வெள்ளைக்கார துரைமார்களும் அவரின் உள்ளூர் ஏஜண்ட்களும். கோடிக்கணக்கில் செலவழித்து பிரச்சாரம் செய்வதாலும், திரும்ப திரும்ப ஒன்றை சொல்வதாலும், எந்த கட்டுக் கதையையும் நம்ப வைத்து விடலாம் என்பதற்கு இது ஒரு சான்று. 
எண்ணிக்கைகளில் பலவிதமாய் இப்படி சுழன்றுக் கொண்டிருந்த இந்த இறைசெய்திகள் எனப்படும் காஸ்பெல்கள் ஆரம்ப கட்டங்க‌ளில் பெரும்பாலும் பித்தலாட்டங்களோடும் ஏமாற்றுத்தனத்தோடும் வந்து கொண்டிருந்தன. காஸ்பெல் ஆப் பால் எனத் தொடங்கி அவை பலவிதமாய் சந்தைக்கு வந்தன [ Gospel of Paul, Gospel of Bartholomew, the Gospel of Judas Iscariot,  the Gospel of the Egyptians,  the Gospel or Recollections of Peter,  the Oracles or Sayings of Christ] 

*பல ஏமாற்றுக்காரர்கள் இறைசெய்திகள், நற்செய்திகள் என்கிற பெயரில் எழுதி கிறிசவ கதாப்பாத்திரங்களை அதில் சேர்த்தனர்.* 

        பல சிறந்த கிறிஸ்துவ அறிஞர்களும்* -- *போதகர்களும், பொய் சொல்வதும்,* *ஏமாற்றுவதும்,   கிறிசவத்தை பரப்புவதற்காக செய்யப்பட்டால் தவறில்லை என்று நினைத்தார்கள்.* 
*ஏமாற்று வேளையும், பொய்களும் மதத்தை பிரச்சாரப் படுத்த அனுமதிக்கப்பட்டது* என்று  டீன் மில்மான் என்கிற கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர் சொல்கிறார், . 

 _பேராசிரியார் ராபர்ட்ஸன் ஸ்மித்_ சொல்கிறார்  _"ஒரு பெரும் இலக்கிய உருவாக்கமே இந்த சித்தாந்தத்தை நிறுவுவதற்கு ஏற்பட்டது!"_ என்று.  இப்படி பல விதமான போலியான இறைச்செய்திகள் வெள்ளமென வந்துக் கொண்டிருந்த வேளையில், அவற்றை போதகர்கள் பொறுக்கி எடுத்து தொகுத்து குறிப்பிட்ட சில‌வற்றை இறைவனின் செய்திகள் என்று அழைக்க தொடங்கினர். 
யேசு கிறிஸ்து உண்மையெனும் போது, எதற்காக போலியான ஆவண‌ங்களை அவர்கள் தயார் செய்து, அவர் இருந்தார் என்று நிரூபிக்க வேண்டும் ? ஒரு மனிதர் உண்மையில் வாழ்ந்திருந்தால் அவருடைய வாழ்க்கையை நிரூபிக்க போலி ஆவண‌ங்கள் அவசியமா ? ஆரம்பகால போலி ஆவண‌ங்களே கிறிசவத்தின் இயலாமைக்கு மிகப்பெரும் சாட்சியாக உள்ளன.
 *ஏசு வாழ்ந்திருந்தால் அவர் பிறந்திருக்க வேண்டும்.* 

*அவர் எங்கே பிறந்தார்?*

 ஹெரோத் என்பவர் அரசராய் இருக்கும் போது அவர் பிறந்தார் என்று மேத்யு சொல்கிறார். அவர் *சைரினியஸ் சிரியாவின் கவர்னராக இருந்தபோது ஏசு பிறந்தார் என்று லூக் சொல்கிறார்.* ஆனால் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இருவருமே ஏசு பிறந்ததாக சொல்லப்படும் அந்த குறிப்பிட்ட காலத்தில் அப்பதவிகளில் இல்லை. உண்மை என்னவென்றால் ஆராம்ப கால *கிறிசவர்களுக்கு ஏசு எப்போது பிறந்தார் என்பதை குறித்து சுத்தமாக தெரியவில்லை.* 
  
      கிறிசவர்கள் 133 வகையான கருத்துக்களை தங்களுடைய பல பிரிவுகளின் மூலமாக ஏசு இந்த பூமியில் தோன்றியதை குறித்து வைத்துள்ளனர் என்று *என்சைக்ளோ பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது* . 

    நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள், *133 விதமான வருடங்கள் !! என்ன ஒரு துல்லியமான கணக்கு பாருங்கள்.* 

அடுத்து *ஏசு எங்கே பிறந்தார் ?* 

அவர் நற்செய்திகளின் படி ஜீசஸ் ஆப் நஸ்ரத் என்று அழைக்கப்படுகிறார். *புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் அவரின் சொந்த ஊர் நஸ்ரத் என்று சொல்கிறார்கள்* . மேத்யு என்பவர் ஏசு பிறந்ததற்கான முரன்பாடான காரணங்களை முன் வைக்கிறார். லூக் என்பவரோ, அகஸ்தஸ் சீசரின் இராஜ்யத்தில், அவரின் பதிவேட்டில் கையெழுத்து போடுவதற்காக ஏசுவின் தந்தையும், தாயும் செல்லும் போது ஏசு பிறந்ததாக  சொல்கிறார். *ஆனால் ரோமின் சரித்திரத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.* அப்படியே பதிவு நடைப்பெற்றது என்று வைத்துக் கொண்டாலும், ரோம வழக்கப்படி குடும்பத் தலைவர் மாத்திரமே தங்கள் விவரங்களை தந்தால் போதுமானது. ஆனால் இங்கு ஜோசப் தன்னுடைய நஸ்ரத் வீட்டை விட்டு இரண்டு மாகானங்களை கடந்து தன் கர்ப்பினி மனைவியோடு இந்த பதிவுக்காக சென்றார் என்பது *கட்டுக்கதையே தவிர சரித்திரம் அல்ல.*


 *நஸ்ரத் என்ற நகரம் இருந்ததா?* 

 ஏசு பழைய ஏற்பாட்டின்படி (Book of Micah) பெத்லகாமில் பிறப்பார் என்று குறிப்பிடப் பட்டிருந்த‌தால், அப்படி அதை காட்டுவதற்காகதான் இந்த கட்டுக்கதை தேவைப்பட்டது. 
ஏசு நஸ்ரத் நகரத்தவர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் வல்லுனர்கள் அப்படி ஒரு நகரம் இருந்ததை மறுக்கிறார்கள்.

 *என்சைக்ளோபீடியா பைப்ளிக்கா* எனப்படும் மதவல்லுனர்களால் எழுதப்பட்ட புத்தகமே, *ஏசு இருந்ததாக சொல்லப்படுகிற காலத்தில் அப்படி ஒரு நகரம் இருந்ததை அருதியிட்டு சொல்ல முடியாது என்று சொல்கிறது.* [The Encyclopaedia Biblica, We cannot perhaps venture to assert positively that there was a city of Nazareth in Jesus time.] 

   இதன்மூலம் *ஏசுவை பற்றிய செய்திகள் மட்டும் கற்பனை அல்ல அவர் வாழ்ந்த நகரமே ஒரு கற்பனைதான்* என்று தெரிகிறது. முதலில் தோன்றிய ஆர்சி போப்பின் ஆட்கள் பைபிளைப்பற்றி மக்கள் அறியாவண்ணம் வைத்திருந்தனர்.
 
      *பொது ஆண்டு 1600* வாக்கில் மார்ட்டின்லுதர் அதில் காணப்பட்ட அசிங்கியங்கள் பலவற்றை நீக்கியும் இல்லாத சிலவற்றை சேர்த்தும் யூதர்களின் கதைகளை கோர்த்து *பைபிள்* என பிரசுரித்தார். ஏசு மாட்டு தொழுவத்தில் பிறந்ததாக உள்ளதும் தவறு. *ஏசு ஒரு கட்டுக்கதை* . இதை வைத்து  தான் ஐரோப்பியர் பிற நாடுகளை குறிப்பாக ஆபிரிக்கா நாடுகளை பிடித்தனர்.

         அடுத்து அவர் பிறந்த பிறகு அவர் முப்பது வயதாகும் வரை எங்கு சென்றார் என்று ஒரு சிறு நிகழ்வு கூட இல்லை. அவரின் பண்ணிரெண்டாம் வயதில் ஒரு சிறு நிகழ்வை மட்டும் லூக் குறிப்பிடுகிறார். மற்ற செய்தியாளர்களுக்கு அதுவும் தெரியவில்லை. இது ஏன் ?      

      *ஒரு இறைவனாக சித்தரிக்கப்பட்டவரின் முதல் முப்பது ஆண்டு காலம் யாருக்குமே தெரியவில்லை என்றால் என்ன* *கொடுமை இது?* . 

         மனித குலத்தை அழிவிலிருந்தும், பாவத்திலிருந்தும் காக்க வந்த ரட்சகரின் முதல் *30 ஆண்டு காலம் என்ன ஆயிற்று* என்றே தெரியவில்லை என்றால் இது பெரும் பாதக‌ம் அல்லவா ?

       உண்மை என்னவென்றால் இப்படி ஒருவரை சித்தரித்துள்ள விசுவாசிகளுக்கு அவரின் குழந்தைப் பருவம் மற்றும் இளமை பருவம் குறித்து சித்தரிக்கும் தேவை இல்லை. அதனால் அவர்களுக்கு உபயோகம் இல்லை. 
சரி அவரின் கடைசி வருடங்கள் மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ளதே அதுவாவது உண்மையா ?
*ஏசுவின் முப்பது வயது வரை அவரை குறித்த எந்த ஒரு விபரமும் இல்லை* என்பதை  பார்த்தோம், சரி வளர்ந்த பிறகாவது ஏசு என்கிற அந்த பாத்திரம் முரன்பாடு இல்லாமல் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏசு பல முறை ஜெருசலத்தில் இருப்பதாக கூறுவதை பைபிளில் காண‌லாம். அவர் அங்கு உள்ள கோவிலில் போதனை செய்வதும் தெரிகிறது. அவரை, 12 சீடர்களும், பல ஆர்வம் கொண்ட பெண்களும், ஆண்களும் பின்பற்றுகிறார்கள். அவரை அங்குள்ள பலர் பாராட்டி பேசுகிறார்கள். மற்றொரு பக்கம் அவரோடு விவாதம் செய்யும் போதகர்கள் அவரின் உயிரை எடுக்க முனைகிறார்கள். இவை எல்லாம், அவர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்தவர் என்பதை தானே காட்டுகிறது. சொல்லப்போனால் அவர்தான் ஜெருசலத்தில்லேயே அனைவருக்கும் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும். பின் எதற்காக போதகர்கள் அவரை காட்டி கொடுப்பதற்காக அவரின் சீடருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் ? யாரும் தெரியாத ஒருவரை காட்டி கொடுப்பதற்குதான் லஞ்சம் கொடுக்க வேண்டும் அல்லவா ? தினமும் தெருவில் தோன்றும் ஒரு மனிதரை, தினமும் கோவிலில் போதனை செய்யும் ஒரு மனிதரை, மக்களுக்கு முன் தொடர்ச்சியாக தோன்றும் ஒருவரை எப்போதோ கைது செய்திருக்கலாமே ? ஆக சீடர் காட்டிக் கொடுத்தது உண்மை என்றால்,  ஏசு பொது மக்களின் முன் ஜெருசலத்தில் தோன்றி கொண்டிருந்த‌து பொய்யாக இருக்க வேண்டும்.
அடுத்து ரோமாபுரியை எடுத்துக்கொள்ளுங்கள். ரோமாபுரியின் நாகரீகம் மிக பண்பட்டதாக அச்சமயத்தில் இருந்ததாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். *ரோமானிய‌ர்கள் உலக புகழ் பெற்ற‌ பெரும் வழக்கறிஞர்கள்.  நீதிமன்றங்கள் மிக சிறப்பாக அங்கே* *வடிவமைக்கப் பட்டிருந்தன* . எந்த மனிதனும் தவறுகள்  இழைக்காமல், காரணம் இல்லாமல் தண்டிக்கப்படவில்லை. இருந்தும் ஏசு கதையில் என்ன நடக்கிறது ?  ஒரு தவறும் செய்யாத ஒரு அப்பாவியை ரோம நீதிபதி குற்றமற்றவன் என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் கூட்டத்தில் இருப்பவர்கள் அவனை கொல் !! என்று கூச்சலிடுகிறார்கள். பின்னர் எந்த நீதிபதி அந்த மனிதனை குற்றமற்றவன், எந்த பாவமும் 4 என்று நினைத்தாரோ, அவரே, அந்த மனித‌னை கொல்வதற்கு பணிக்கிறார். (பழைய தமிழ் திரைப்படம் உங்களுக்கு ஞாபகம் வரலாம், வில்லன் ஹீரோவை பயங்கரமாய் கொடுமை படுத்தினால் தான் பார்ப்பவர்களுக்கு பரிதாபம் எழும் ) இதுதான் நாகரீகம் அடைந்த ரோமாபுரியின் நிலையா ? என்ன தவறான சித்தரிப்பு இது ?

        ஏசு பல கண்கட்டு வித்தைகளை (அற்புதங்கள்) புரிந்ததாக சொல்கிறார்கள். அவர் பல பார்வை இல்லாதவரை தொட்டு அவர்களுக்கு பார்வையை கொடுத்தாராம், பல இறந்தவர்களை உயிர் பெற்று எழ செய்தாராம். பின் எதற்காக அவரை சிலுவையில் அறைந்தார்கள் ? இறந்தவர்களையே உயிர்பித்த அவரை, ஏன் அவர்கள் சிலுவையில் அறைய  வேண்டும் ? நாகரீகம்  கொண்ட யூதர்கள் தங்களுக்கு பலவாறு உதவிய ஏசுவின் மேல் எதற்காக கொலை வெறியோடு அலைய வேண்டும் ? அதுவும் மன்னிப்பதை போதித்த, தொழுநோயாளிகளை கழுவிய, இறந்தவரை எழுப்பிய ஒரு மனிதரை ? படிப்பவரின் உணர்ச்சிகளை உயரத்திற்கு எழுப்பவதற்காக எழுதப்பட்ட வரிகளாய் தெரிகிறதே தவிர, நிஜமாய் இருப்பதாய் தெரியவில்லையே?  ரோமானிய வரலாறு என்பது  2300 வருடங்களுக்கு முந்தைய தேதி,   மாதம், வருடம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு சரித்திர சான்றுகளை கொண்டது. *ஆனால் ஏசு பிறந்த தேதியோ, மாதமோ, வருடமோ, மற்றும் அவரை சிலுவையில் ஏற்றிய தேதியோ, மாதமோ, வருடமோ,  மற்று எந்த குறிப்புகளோ எந்த வரலாற்று பதிவுகளிலும் இல்லை.  அவருக்கு 12 சீடர்கள் இருந்ததாக பைபிள் கூறுவதை நினைவு கூர்க. அவர்களில் ஒருவர் கூடவா இந்தப் பெரும் வரலாற்று குறிப்பு நிகழ்ச்சியை பதிவு செய்யாமல் விட்டு விட்டார்கள்?* 

 உணர்ச்சிகளை தூண்டி, மக்களை அழவைத்து, மதத்தை பெருக்குவதுதான் இவர்களுக்கு கை வந்த கலையாயிற்றே ?
கன்னிப் பெண்ணுக்கு பிறந்தவர், ஐயாயிரம் மக்களை ஐந்து ரொட்டி துண்டு மற்றும் இரண்டு மீன்களால் பசியாற்றியவர். தண்ணீரில் நடப்பவர், இறந்த பிறகு உயிர்த்தெழுந்தவர் என்று சொல்லப்பட்டுள்ள கதைகள் இந்த உலகத்தின் மற்ற கட்டுக்கதைகளுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல.
ஜெர்மானிய பேராசிரியரான, *ஆர்தர் ட்ரூவ்ஸ்* , ஏசு ஒரு மாயை மற்றும் கற்பனை என்கிறார். ஆழமான  அவர் *பைபிள் கதைகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, இந்த புத்தகம் நிச்சயமாய் சரித்திரம் அல்ல* என்கிறார். 

 *ஜான் எம் ராபர்ஸன்* என்னும் ஆங்கில அறிஞரும் *ஏசு எனும் மனிதர் வாழ்ந்ததே இல்லை* என்று அறுதியிட்டு சொல்கிறார்..
அடுத்து *பால்* (Paul) எனும் போதகரை பற்றியும் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் *பால் என்பதே ஒரு கற்பனை பாத்திரம்* என்று பலர் உறுதியாக சொல்கிறார்கள். பால்  ஏசுவுக்கும் , நற்செய்திகளில் சொல்லப்பட்ட ஏசுவுக்கும் பலவிதமான முரண்பாடுகள் இருக்கின்றன. பாலின் ஏசு, அற்புதங்கள் எல்லாம் செய்யவில்லை, போதனை எதுவும் செய்யவில்லை என்று பல முரன்பாடுகள்.

        மேலும் சுவிசேஷங்களை எழுதியதாக கூறப்படும் மத்தேயு, மார்க், லூக்கா போன்றோர் அவர்கள் கைப்பட எழுதவில்லை என்பதை நிச்சயமாக கூறலாம். ஏனெனில் அவர்கள் எழுதியிருந்தால் நானும் மார்க், மத்தேயு ஆகியோர் இந்த இடத்திற்கு  இந்த நாளில் சென்றோம். அப்போது ஏசு இப்படி சொன்னார், இப்படி செய்தார் என்று தன்மையில் எழுதியிருப்பார்கள்.  இதுபோல் எந்த சுவிசேஷகரும் எழுதவில்லை. மூன்றாவது நபர் எழுதியது போல்தான் எழுதப்பட்டுள்ளது. 

"கிறிசவத்தின் சரித்திரம்"  எனும் புத்தகத்தில் *டியன் மில்மான்* எழுதுகிறார், " *ஏசு பிறந்தால்தானே இறப்பதற்கு* '? என்று.

 ஜெர்மனியின் மிகச்சிறந்த கிறிசவ மத சரித்திர ஆய்வாளரான *Dr. மொஷிம் (Mosheim)* சொல்கிறார். ஆரம்பகால கிறிசவத்தின் *ஏசு, ஒரு மனிதரல்ல, ஒரு கற்பனை, ஒரு மாயை,* அற்புதங்களுக்கு இடையில் தோன்றிய ஒரு தோற்றம், நிஜத்தன்மையில் அல்ல, வெறும் மாயை. 

 *பிஷ்ஷப் வெஸ்காட்* எழுதுகிறார். "கிறிச வத்தின் ஆதாரமே அற்புதங்களில் தான் இருக்கிறது. அற்புதங்கள் இயலாததாகவோ, பயங்கரமானதாகவோ, சாத்தியமில்லாததாகவோ இருக்க வேண்டும். ஆக அற்புதங்கள் இல்லை என்றால் ஏசு இல்லை" என்கிறார்.

இப்படி பல அறிஞர்களின், ஆற்றல் மிக்க மனிதர்களின் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் பக்கங்கள் போதாது. உங்களுக்கு படிப்பதற்கு பொறுமையும் இருக்காது. 
சில கிறிசவர்கள் சொல்வார்கள்,  அவர் மிகத் தெளிவானவர் அவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது என்று. அது தவறு. ஏசுவின் செய்திக‌ளில் அவர் ஒரு *செயற்கையானவர்* என்பது தெளிவாக தெரிகிறது. அவர் எதிரிகளை நேசிக்கச் சொன்னார் அதோடு நண்பர்களை வெறுக்கச் சொன்னார். அவர் மன்னிப்பதை போதித்தார், அதே சமயம் மனிதர்களை விஷப்பாம்புகள் என்றார். அவர் தன்னை உலகத்திற்கே தீர்ப்புசொல்லும் நீதிபதி என்றார். ஆனால் அவர் யாரை குறித்து தீர்ப்பளிக்க கூடாது என்றும் சொல்கிறார். தானும் தன் தந்தையும் ஒன்று என்கிறார், ஆனால் வலி தாங்க முடியாமல் *"தந்தையே ஏன் என்னை கைவிட்டாய்? "* என்கிறார். (My God, my God, why hast Thou forsaken me?)

 *ஒருவேளை 19 நூற்றாண்டுகளுக்கு முன் அன்றைய பாலஸ்தீனத்தில்  ஏசு  என்கிற பெயரில் அதிகம் வெளியே அறியப்படாத ஒரு நல்ல மனிதன் வாழ்ந்திருக்கலாம்.* சீடர்களால் அவர் சூழப்பட்டிருக்கலாம். ஒரு கொடுமையான சாவுக்கு அவர் ஆளாகியிருக்காலாம். *ஆனால் அந்த மனிதன் வாழ்ந்திருந்த காலத்தின் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை* என்பது நிச்சியமான உண்மை. அதோடு, இன்று சித்தரிக்கப் பட்டுள்ள ஏசுவுக்கும் அவருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. என்று, *இந்த உலகத்திற்கு ஏசு என்பது ஒரு மாயை என்ப‌து தெரிய வருமோ, என்று, அது உண்மை அல்ல என்று புரிய வருமோ, அன்றுதான் உலகம் முழுதும் அந்த மாய மனிதனை குறித்து, அடுத்தவருக்கு பரப்ப வேண்டும் என்கிற பலருடைய பித்தம் அடங்கும்.* அந்த மாய மனிதனின் இரத்தத்தின் பெயரால், என்று சொல்லி சொல்லி, உலகம் முழுதும் இந்த மதம் குடித்த இரத்தம் போதும். 
அன்புக்கு மதம் இல்லை, மொழி இல்லை இனம் இல்லை. நல்ல மனித தன்மை இருந்தாலே போதும்.



 *ஆதாரம் :* 

1) Did Jesus Christ Really Live? (ca. 1922) by Marshall J. Gauvin

2) The Christ Conspiracy: The Greatest Story Ever Sold by Acharya S (Jul 1, 1999) ISBN 0932813747 pages 106-107

3) Gerald OCollins, The Hidden Story of Jesus 

ஆகிய புத்தகங்களை தழுவியது.


ஏசு பிறக்கவே இல்லைன்னு ஹென்னத் ஹம்ப்ரே என்பவா் தன் வலைதளத்தில் கூறுகிறார். www.jesusneverexisted.com அதை நிரூபிக்கற மாதிரி ஜோசப் இடமுருகு என்பவா் தன் அனுபவங்களையும் ஆராய்ச்சிகளையும் இங்கே சொல்கிறார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக