பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2016

பாவ மன்னிப்பு


ஒரு சமயம் என் நண்பர் அப்பாதுரை என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது பைபிளை பற்றி பிரசங்கம் செய்கிறவர்கள் பைபிள் படி நடப்பது இல்லை. எல்லா அயோக்ய தனங்களும் செய்துகொண்டு பிரசங்கம் மட்டும் அற்புதமாக செய்கிறார்கள் என்றேன். அதற்கு அவர் பைபிள் என்ன சொல்கிறது என்று தான் பார்க்கவேண்டுமே தவிர தனி மனிதரை பார்க்க கூடாது. மனிதன் தவறு செய்கிறவன் என்றார்.

                      என்னை பொறுத்தவரை நம் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இரண்டும் மாறுபட்டால் அவன் வார்த்தைகளில் நம்பிக்கை வராது. ஆனால் கிறிஸ்தவர்கள் எல்லாரும் சொல்லும் செயலும் வேறாகத்தான் வாழ்கிறார்கள். நான் பிறருடைய பாவங்களை மன்னிப்பது போல் என் பாவங்களை மன்னியும் என்று கர்த்தரிடம் வேண்டுகிறார்கள். ஆனால் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்வதில் முதல் ஆளாக இருகிறார்கள்.  

          தூத்துக்குடியில் புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் செப்டிக் tank சுத்தம் செய்ய சென்ற முருகன் என்ற துப்புரவு தொழிலாளி அங்கே கிலோகணக்கில் காண்டம் கிடந்தது என்றார். சர்ச் கட்டுவதற்காக அரசாங்கம் கொடுத்த ஒன்றரை லட்ச ரூபாயை சாப்பிட்டு விட்டதாகவும் சுனாமிக்கு கொடுத்த பணத்தையும் ஏப்பம் விட்டுவிட்டதாக ரத்சன்யசேனைதலைவருக்கு எதிராக கிறிஸ்தவர்களே அவர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போஸ்டர் திருகுருங்குடியில் ஒட்டியிருந்தார்கள். மதுரையில் புதூரில் ஒரு சர்ச் உள்ளேயே பாதிரியார் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதை கையும் களவுமாக பிடித்துவிட்ட கிறிஸ்தவர்கள் அவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டனர்.  

ஆனால் பொதுவாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் கன்யாஸ்திரிகள் என்ன தவறு செய்தாலும் ஏசு பாவ மன்னிப்பு தருவற்கு முன்பாக கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பு தந்து விடுகிறார்கள். போலீசில் புகார் செய்ய மாட்டார்கள். அவரை வேறு ஊருக்கு மாற்றினால் அவர் திருந்தி விடுவாரா . ஒரு மாணவன் ஈவ் டீசிங் செய்தாலே சட்டப்படி தண்டனை உண்டு. ஆனால் இவர்களுக்கு மட்டும் தண்டனை கிடைக்காமல் தப்பிவிடுகின்றனர். எல்லா குற்றங்கள் செய்வதற்கும் லைசன்ஸ் பெற்றவர்களாகி விடுகின்றனர். இவர்களின் பாவ மன்னிப்பு பாவங்கள் செய்வதை தூண்டுமே தவிர குறைக்காது

              உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பா்களை வரவழைப்பானாக. அவா்கள் கர்த்தாின் நாமத்தினாலே அவனுக்குஎண்ணெய்பூசி ஜெபம் பண்ணக்கடவா்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை ரட்சிக்கும். கர்த்தர் அவனை எழுப்புவாா். அவன் பாவம் செய்தவனானால் அவன் பாவம் மன்னிக்கப்படும் யாக்கோபு 5-14,15.  இந்த வசனங்களின் மேல் கிறிஸ்தவா்களுக்கு நம்பிக்கை இருந்தால் மருத்துவமனைக்கோ மருத்துவா்களிடமோ செல்லக்கூடாது. விளம்பரத்துக்கு இந்த வசனங்களை பயன்படுத்துவரே தவிர பயன்பாட்டுக்கு உதவாது. டிஜிஎஸ் தினகரனே மருத்துவமனையில்தான் வைத்தியம் பாா்த்தாா். 

                    பாவங்கள் செய்யும் பாதிரிகள்தான் தன் மந்தையிலுள்ள ஆடுகளின் பாவங்களுக்கு மன்னிப்பு கொடுக்கிறார். பாவமன்னிப்பு அளிக்கிறேன் என்று சம்பாதித்தவர்களும் ஏராளம். இதுபோன்ற பிராடு பாதிரிகளை யும் முட்டாள் ஜனங்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

              இந்து மதத்தைப் பொறுத்தவரை அவரவர் செய்த பாவத்துக்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இளமையில் ஆட்டம்போட்டவா்கள் முதுமையில் படுக்கையில் கிடந்து உடல் புண்ணாகி அவஸ்தைப்பட்டு கடும் துன்பத்தை அனுபவித்து இறக்கிறார்கள். இந்து தெய்வங்கள் தயவு தாட்சண்யம் பாா்ப்பதில்லை. அவரவர் கர்ம பலன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். இதனால் இந்துக்கள் ஏதாவது துன்பங்கள் நோிட்டால் இந்த பாவத்தை செய்ததால் வந்ததோ என்று இறைவனிடம் சரணடைகிறார்கள். வேறு தவறுகள் செய்ய பயப்படுகிறார்கள். அப்படி சரணடைந்தவா்களுக்கு அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான கால அளவைக் குறைக்கிறார். ஆனால் கருத்தர்  கிறிஸ்தவா்களை மட்டும் மன்னித்து சொர்கத்தை அளிக்கிறார். இந்து மதத்தில் உள்ள நல்லவர்களையும் நரகத்துக்கு அனுப்புகிறார். இந்த நம்பிக்கையில்தான் கிறிஸ்தவ பாதிரிகள் மனசாட்சியே இல்லாமல்  பாவங்கள் செய்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக