பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

நசரேய விரதம்


இந்து மதத்தில் எத்தனையோ விரதங்கள் இருக்கின்றன. அந்த விரதங்களை எப்பொழுது எப்படி இருக்க வேண்டும். அதனால் என்ன பலன் கிடைக்கும் என்று விவரமாகக் கூறுகிறது. ஆனால் இந்த நசரேய விரதம் பற்றி கேள்விப்பட்டதில்லையே என்று நினைப்பீர்கள். இது இந்துக்களின் விரதம் இல்லை. கிறி்ஸ்தவர்களின் விரதம். எனக்குத் தெரிந்து எந்த கிறிஸ்தவ கோஷ்டியோ, பாதிரிகளோ, கன்னியாஸ்திரியோ, கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இதற்கான பலனும் என்ன என்பது கர்த்தருக்கே வெளிச்சம். இருந்தாலும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் கிறிஸ்தவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிதது கர்த்தரின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்.

 எண்ணாகமம் 6-1 முதல் 21 வரை கர்த்தர் மோசேயை நோக்கி நீ இஸ்ரவேல் புத்திரர்களுக்கு சொல்ல வேண்டியது என்ன என்றால், புருஷனாகிலும் ஸ்திரியாகிலும் கர்த்தருக்கெனறு விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால் அப்படிப்பட்டவன் திராட்சைரசத்தையும், மதுபானத்தையும், விலக்கக்கடவன்.. அவன் திராட்சைரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும்் திராட்சைரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும், தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.  

அவன் நசரேயன் விரதம் காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது. அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன். அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.  

அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால் , மரணமடைந்த தன் தகப்பனாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. அவன் நசரேயனாயிலுக்கும் நாளெல்லாம் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருப்பான். அவனண்டையில் ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரை சிரைத்துக்கொண்டு எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடார வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டு வரக்கடவன். அப்பொழுது ஆசாரியன் ஒன்றை பாவ நிவாரண பலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகன பலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்தி செய்து அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக

 அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியை குற்ற நிவாரண பலியாகக் கொண்டு வரக்கடவன். அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும். நசரேயனுக்குரிய பிரமாணமாவது . அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடார வாசலிலே வந்து சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரண பலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாக செலுத்தக்கடவன். அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகன பலியையும் செலுத்தி ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங் கூடக் கர்த்தருக்கு சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக

 அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே , பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின் கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன். நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நநிதியில் அசைவாட்டக்கடவன். அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும். அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சை ரசம் குடிக்கலாம்.

நசரேய விரதம் எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்று பாா்த்தீர்களா? இந்த விரதத்தால் என்ன பலன்? இதை எந்த கிறிஸ்தவரும் ஏன் அனுஷ்டிப்பதில்லை.. பழைய ஏற்பாட்டு வசனங்களை எல்லாம் (வசனம் நன்றாக இருந்தால்) உலகமக்களுக்காக சொன்னது போல் விளம்பரம் செய்யும்கிறிஸ்தவர்கள் இந்த அற்புத விரதத்தை ஏன் விளம்பரம் செய்வதில்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக