பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

வசிய திலதம்


. பல்வேறு வசிய முறைகள் நம் சித்தர்களின் பாடல்களில் காணக்கிடக்கின்றன. குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே பிரச்னைகள் ஏற்பட்டு குடும்பம் பிரியாமல் இருப்பதற்காக ஆண், பெண் வசியங்கள் செய்யும் முறை சொல்லப்பட்டுள்ளது. மேலும் அரசர்களிடம் அல்லது மேலதிகாரிகளிடம் நமக்கு ஒரு காரியம் சாதகமாக நடைபெறுவதற்கும் சில வசிய முறைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இதை தவறான முறையில் திருமணமான ஆண்களோ, பெண்களோ கள்ள உறவிற்கு பயன்படுத்தினால் தானும் கெட்டு, பிற குடும்பத்தையும் சீரழித்த பாவத்திற்குள்ளாவர். எனவே நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்

 ஒரு வசியதிலதம் செய்யும்முறையை சித்தர் பாடல்களில் கண்டேன். சித்தர் பெயர் நினைவில்லை.  
சுறுதியுடன் உள்ளங்கால் உள்ளங்கையில் துடைத்ததொரு அழுக்குடனே சவாது கூட்டி  
கருதிமன துரிமையுடன் ஒன்றாய் சேர்த்து கருவான தங்கமென்ற சிமிழில் வைத்து 
 பருதிமதி சுடரொளியைத் தியானம் செய்து பத்திகொண்டு 
 புருவமதில் திலதம் போடே போடப்பா சிம்மெனவே திலதம் போட்டு புரணமாய் நீ இருக்க புதுமை கேளு நாடப்பா 
 உனது முகம் கண்டபோது நன்மையுடன் பூரணமாய் வசியமாவார் தேடப்பா இவ்வசியம் நல்ல வித்தை சிவசிவா வேதியன் சொல் முறைதானப்பா பத்திகொண்ட புத்தியினால் பணிந்து பாரே  

இப்பாடலில் உள்ளங்கை, உள்ளங்கால் அழுக்குடன் ஜவ்வாது சேர்த்து தங்கச்சிமிழில் வைத்து சுரியபகவானை தியானம் செய்து திலகமிட்டுக்கொண்டால் நம்மைப் பார்ப்பவர்கள் அனைவரும் வசியமாவர் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு வசியம்  
ஆமென்ற வசியமொன்று சொல்லக்கேளு ஆதிமுதலான கொடியருகு வாங்கி ஓம் என்று கண்டித்து மதுவில் போட்டு உரிமையுடன் மண்டலம் சென்றெடுத்துப்பாரு  
நாமென்ற நீரதுவும் நன்றாய் வத்தி நடுவான கொடியதுவும் பதமாய் நிற்கும் தாமென்ற தன்பதமாய் வந்த மூலம் தருவான மூலமதின் தன்மை கேளே தன்மையுடன் வெள்ளியுடன் செம்பு சேர்த்து தருவான தங்கமது மூன்றுமொன்றாய் உண்மையுடன் தானுருக்கி தகடுதட்டி உறுதியுள்ள மூலம் அதை வைத்துருட்டி செம்மைபெற ரவி வளையம் போலே செய்து தெரியாமல் பொருந்தினவாய் சேர்த்துக்கொண்டு நன்மை பெற சத்குருவை தியானம் செய்து நலமாக ஞாயிறு முன் வைத்துப் போற்றே வைத்ததொரு ரவி வளையம் வளவி தன்னை வலது கையில் தான் பூட்டி மனதாய் நின்றால் மைதொடுத்த விழியாளும் மன்னர் தானும் மகத்தான மிருகமுதல் வசியமாகும். மெய்த்ததொரு இம்முறைதான் அதீத வித்தை வேதாந்த வேதியர்தாம் சொன்ன மார்க்கம் உய்த்ததொரு வித்தைதனி உலகத்தோர்க்கு உறையாதே உறைத்ததினால் உறுதிபோமே.  

இப்பாடலில் கொடியருகு வேரை ஓம் என்று சொல்லி தேனில் போட்டு ஒரு மண்டலம் (நாற்பது நாட்கள்) சென்ற பின் எடுத்து வெள்ளி, செம்பு, தங்கம் மூன்றையும் சமமாய் உருக்கி தகடுதட்டி அதனுள் இந்த வேரை வைத்து வேர் வெளியே தெரியாத வண்ணம் வளையம் செய்து சத்குருவைத் தியானம் செய்து சுரியன் முன் வைத்து வணங்க வேண்டும். இந்த வளையத்தை (காப்பு) வலது கையில் அணிந்து கொண்டால் பெண்களும், அரசரும், மிருகங்களும் வசியமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக