பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

சங்கு ஊதுங்கள்


புதன், 3 ஆகஸ்ட், 2011  

சங்கின் மகிமையைப் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. அறிந்திருப்பவர்கள் வீடுகளில் எல்லாம் புஜை அறையில் கட்டாயம் வைத்திருப்பார்கள். அதிகாலை முதன் முதலாக விழித்துக் கொள்ளும் உயிரினம் சங்கு என்று சொல்வார்கள். சங்கிலிருந்துஓம்என்ற ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் சங்கின் சிறப்பே.  

சங்கை ஊதத் தெரியாவிட்டாலும் புஜை அறையில் சங்கு வைத்திருப்பது இதனால்தான். ஒரு ஆன்மீக நண்பர் அடிக்கடி சதுரகிரி செல்வது வழக்கம். ஆன்மீக பயணங்களின்போது எப்போதும் தன்னுடைய சங்கையும் கொண்டு செல்வார். அவர் தவசிப்பாறை குகையில் தியானம் செய்து கொண்டு இருந்த போது ஒரு வித்தியாசமான குறட்டை ஒலி போன்ற ஒரு சப்தம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று பார்த்தபோது தான் கொண்டு சென்றிருந்த பையில் உள்ள சங்கில் இருந்து வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்திருக்கிறார். இதை யாராவது சோதித்துப் பார்த்து கொள்ளலாம்.  

முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு புட்டும் கடைச்சங்கம் ஆம்போதது ஊதும் என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகளில் இருந்து குழந்தை பிறந்தவுடனும், திருமணத்தின் போதும், இறப்பின்போதும் சங்கு ஊதும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.  

கிருஷ்ணரின் கையில் இருக்கும் சங்கின் பெயர் பாஞ்ஜசன்யம் பீமனின் கையில் இருக்கும் சங்கின் பெயர் பௌந்தரம் ஒவ்வொருவரும் சங்கை வைத்திருந்திருக்கின்றனர். வெற்றியின் போதும் சங்கு ஊதி வெற்றியைக் கொண்டாடி இருக்கின்றனர். கோவில்களிலும் புஜை நடைபெறும்போது ஊதுவார்கள். சங்கில் நீர் நிரப்பி இறைவனுக்கு சங்காபிஷேகம் நடைபெற்று வருவதையும் அறிவோம்

 சங்கை உரைத்துப் புசினால் முகப்பருக்கள் மறையும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. சங்கில் பல வகைகள் இருந்தாலும் வலம்புரி சங்கும், வெண்மையான பால் சங்கும் நம் புஜை அறைக்கு ஏற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக சங்கு ஊதுவதால் வீட்டிற்குள் தீய சக்திகள் வராது என்பது தான் அதன் பலன்களிலேயே உயர்ந்தது. எனவே உங்கள் இல்லங்களில் தினசரி விளக்கேற்றி தீபாராதனை காட்டும் முன் சங்கு ஊதுங்கள். சங்கு ஊதுவது ஒரு சுவாசப்பயிற்சி. மூச்சை ஆழமாக இழுத்து, நிறுத்தி வைத்து ஊத வேண்டியதிருப்பதால் சுவாச கோளாறு உடையவர்களுக்கு நன்மை தரும். வராமல் தடுக்கும். வீடுகள் தோறும் சங்கொலி முழங்கட்டும். வாழ்வு சிறக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக