பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

பைபிள் வேதபுத்தகமா?


பைபிள் வேதபுத்தகம் அல்ல. அது 40க்கும் மேற்பட்ட நபர்கள்; பல வருடங்கள் , பல நூல்களில் இருந்து தொகுத்து உருவாக்கப்பட்ட நூல். குறிப்பாக யூதர்களின் நூல்கள். ஆதியாகமம், எண்ணாகமம், லேவியராகமம் போன்றவை யுதர்களின் புத்தகங்களிலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டவை. அதைத் தொகுத்தவர்கள்; பாமர மக்கள். பைபிளில் கூறப்பட்டு உள்ளவை உண்மையான வரலாறு அல்ல. அது ஒரு கற்பனை நூல். ஆபாசக்கதைகள், வன்முறைக் கட்டளைகள், முரண்பாடுகள் நிறைந்தது.  
                 அதுவும் ஏசு பிறந்த பாலஸ்தீனத்தில் பெத்லகேம் ஊரிலிருந்து மத்தியதரைக்கடலைத் தாண்டி 3000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ரோமாபுரியில் ஏசு இறந்த 400 ஆண்டுகளுக்கு பின், ஏசுவின் தாய்மொழியான அரமைக் மொழியில் எழுதப்படாமல் புதியஏற்பாடு கிரேக்க மொழியிலும், பழையஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் எழுதப்பட்டது. பைபிளைத் திருத்தக்கூடாது என்று கடைசி அதிகாரத்தில் எழுதி வைத்துக்கொண்டே ஏராளமான முறை திருத்தப்பட்டது. ஜேம்ஸ் என்ற அரசன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. யாராலும் 5 தலைமுறைக்கு முந்தைய பரம்பரையினரின் பெயர்களைக் கூறமுடியாது. ஆனால் மத்தேயுவும் லூக்காவும் ஏசுவின் பரம்பரையை ஆதாம் வரை முரண்பாடாக எழுதியுள்ளனர். மாபியா கும்பலால் உருவாக்கப்பட்ட நூல் என்று மகரிஷி  மகேஷ் யோகி கூறுகிறார். மதமாற்றம் செய்வதற்காக பிராடு பவுல் எழுதிய கடிதங்களை எல்லாம் வேதவசனமாக சேர்த்து வைத்திருக்கின்றனர். பைபிளில் நல்ல வசனங்களைவிட கெட்ட வசனங்களே அதிகம் இருக்கின்றன. கொலை செய்யாதிருப்பாயாக என்ற ஒரு நல்ல வசனத்தை ஒரு இடத்தில் காட்டினால் கொலைசெய்யச் சொல்லும் வசனங்கள் 100ஐ காட்ட முடியும்.

யோவானின் வெளிப்படுத்தின சுவிசேஷம் முழுக்க அபத்தம். அதன்படி வரலாற்றில் எதுவும் நடைபெறவில்லை.  யோவான் கனவு கண்டு உளறியதை உண்மை என நம்புகின்றனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக