பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

துளசி தீர்த்தத்தின் மகிமை


வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012  

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். பெருமாளுக்கு பிடித்தது துளசி. இது போல் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மூலிகையை மரத்தை ஸ்தல விருக்ஷமாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். இவை யாவும் நம் ஆரோக்கியத்துக்காக நாம் எந்த வகையிலாவது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

 துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது.  

எனது நண்பரின் சித்தப்பாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு வடமலையான் மருத்துவமனை என்ற புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவருக்கு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்து விடவே இல்லை. மருத்துவர்கள் பல சோதனைகள் செய்து பார்த்தும் காய்ச்சல் விடவில்லை. மருத்துவமனையில் 40 நாட்கள் கடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் பிழைப்பாரா என்ற சந்தேகம் வந்துவிட்டது. எனவே ஒரு ஜோதிடரிடம் சென்று அவருடைய ஜாதகத்தைக் காட்டி அவருடைய ஆயுள் மற்றும் நோய் பற்றி ஆலோசனை கேட்டார்கள். ஜோதிடர் மிகவும் கெட்டிக்காரர். மிகவும் ஆராய்ந்து பார்த்துவிட்டு நான் நாளை மருத்துவமனைக்கு வருகிறேன். நான் தருவதை அவருக்கு குடிக்க கொடுங்கள். காய்ச்சல் விட்டுவிட்டால் தாமதிக்காமல் வீட்டுக்கு அழைத்து சென்றுவிடுங்கள் என்றிருக்கிறார். மறுநாள் அவர் மருத்துவமனைக்கு வந்து அவர் குடிப்பதற்கு ஏதோ கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் சொன்னது போலவே காய்ச்சல் விட்டுவிட்டது. அவரை உடனடியாக மருத்துவரிடம் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவித்து கூட்டிச்சென்றுவிட்டனர். அதன் பின் ஜோதிடரிடம் விபரம் கேட்டபோது அது துளசி தீர்த்தம்தான் என்றிருக்கிறார். . மருத்துவர்களுக்கே புரியாத நோய்க்கு தீர்வு ஜோதிடம் மூலம் கிடைத்திருக்கிறது. வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். நீங்களும் துளசி மாடம் வைத்து வளர்த்து பயன்பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக