பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

எண்ணெய்க்குளியல் பண்ணுங்க


30 ஆகஸ்ட், 2012  

நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக கண்டுபிடித்த எண்ணற்ற முறைகளில் எண்ணெய்க்குளியலும் ஒன்று. வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல் தவறாமல் செய்தால் மூட்டுவலி வராது. தலைமுடி அதிகம் உதிராது. நரைப்பது தாமதமாகும். உடல் சர்வீஸ் செய்து விட்டது போல் இருக்கும்.  

எண்ணெய்க்குளியல் எப்படி செய்யணும்னு பார்ப்போம். சனி நீராடு என்று சொல்லியிருக்கிறார்கள். ஆண்கள் சனி அல்லது புதன் கிழமையிலும் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையிலும் எண்ணெய்க்குளியல் செய்யலாம். எண்ணெய்க்குளியல் சுரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் செய்வது நல்லது. லேட்டானாலும் பரவாயில்லை. முதலில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை எடுத்துக்கோங்க. கரிசலாங்கண்ணித் தைலம் போன்றவற்றையும் உபயோகிக்கலாம். சிறு துண்டை இடுப்பில் கட்டிக்கோங்க. எண்ணெயை முதலில் தொப்புள் அல்லது உச்சந்தலையில் விடுங்க. அதன் பின் உடல் முழுவதும் குளிர புசுங்க. கஞ்சத்தனம் வேண்டாம். தாராளமா புசுங்க. மூட்டுவலி உள்ளவர்கள் வலி உள்ள இடங்களில் அதிகமாக எண்ணெய் விடுங்க. பின் குறைஞ்சது அரை மணிநேரம் அப்படியே உடலில் எண்ணெயை ஊறவிடுங்க. இப்போது உங்களால் உடல் குளிர்ச்சி அடைந்திருப்பதை உணர முடியும். போதுமான சுட்டில் வென்னீர் வைத்து மனைப் பலகையில் உட்கார்ந்து குளிங்க. அதாவது ஐந்து இஞ்ச் உயரம் உள்ள பலகை. இப்போ ப்ளாஸ்டிக்கில் வருகிறது. அதில் உட்கார்ந்து குளித்தால் முதலில் சிறுநீர் தாராளமாக பிரியுமுங்க. சிறுநீரக கோளாறுகள் வராதுங்க. சீயக்காய் அல்லது பயத்தமாவு தேய்ச்சு குளியுங்க. குளிக்குமுன் சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை மறக்காம சொல்லுங்க. ”கங்கேச யமுனேசைவ கிருஷ்ணா கோதாவரி சரஸ்வதி, நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிதிம்குருஅதாவது நீங்க குளிக்கிற நீர் புனித நதிகளின் நீராகிவிடும்

 குளிச்சு முடிச்சபின் காலை உணவாக வெந்தயக்களி சாப்பிடுங்க. சாப்பிட்டு முடிஞ்ச கொஞ்ச நேரத்துல கண்ணைக் கட்டிக்கொண்டு தூக்கம் வரும். கண்கள் குளிர்ந்து சுகமாக இருக்கும். உடனேயே போய் படுத்து தூங்கிடாதீங்க. ஏதாவது சிறு வேலைகளைச் செய்து கொண்டு பொழுதைப் போக்குங்க. மதிய உணவு மற்றும் இரவு உணவு மிக எளிய உணவாக இருக்கட்டும். ஆடு, கோழி அப்படின்னு அசைவத்தை வெட்டிராதீங்க. மாலை உணவை 7 மணிக்குள்ளே முடிச்சுட்டு ஒரு மணி நேரம் கழிச்சு தூங்கினீங்கன்னா அதுமாதிரி ஒரு சுகமான தூக்கம் இருக்காதுங்க. சொல்ல மறந்துட்டேன். கொஞ்சம் உடம்புக்கு தெம்பா இருக்குன்னு கலவியில ஈடுபட்டுடாதீங்க. நரம்புத் தளர்ச்சி ,ஜன்னி வரலாம். அதேபோல் அன்னைக்கு இளநீர் குடிச்சிராதீங்க.பலன்கள் மாறிவிடும். இதை எல்லாம் முகமதுவோ , ஏசுவோ கண்டுபிடிக்கலைங்க. நம்ம முன்னோர்கள்தான் கண்டுபிடிச்சிருக்காங்க. இதை செஞ்சா, இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக