பின்பற்றுபவர்கள்

புதன், 3 ஏப்ரல், 2019

ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்போம்

       தாமிரம் பிளாஸ்டிக் போன்று ஒதுக்கி வைக்கக்கூடிய பொருள் அல்ல. தாமிரம் இல்லாவிட்டால் எதுவுமே இயங்காது. செல்போனிலிருந்து மிக்சி பேன் வரை அனைத்தின் ஆதாரம் தாமிரம்தான். நமது போராளிகள் கூவுவது போல் ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட வேண்டுமா என்று ஆராய்ந்து பார்ப்போம்.


            முதலில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் யார் என்று பார்த்தால் அது தேசவிரோத நக்ஸல்களும் மைனாரிட்டிகளும் தான். இந்த போராட்டம் ஆரம்பமான இடமே சர்ச்சிலிருந்து பாதிரிகளின் தலைமையில்தான். இவர்களுக்கு ஏதாவது போராட்டம் நடத்தி நாட்டின் வளர்ச்சியை தடுப்பது ஒன்றே குறி. அதுவும் அவர்களுக்கு எதிரான அரசாக இருப்பதால் தங்களை  இதுபோன்ற போராட்டங்கள் மூலம் வலிமைப்படுத்தி நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைப்பதுவே நோக்கம். இவர்களின் உண்மை முகம் தெரியாமல் அப்பாவி மக்களும் கலந்துகொண்டார்கள் என்பதுதான் உண்மை.

             எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை ஒன்று உண்டு.  மூலிகைகளின் புகை, நறுமணப்புகைகள்தான் நலம் தருமே  தவிர மற்றவை உடல்நலத்திற்கு ஏற்றவை அல்ல. தூத்துக்குடியில் தெர்மல், டாக், தாரங்கதாரா, ஸ்பிக், பெயிண்ட் தொழிற்சாலை என எண்ணற்ற நிறுவனங்களிலிருந்து உடல்நலத்திற்கு கேடான வாயுக்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை எதிர்த்து இதுவரை யாரும் போராடவில்லை. காரணம் என்ன என்று சிந்தியுங்கள். 

             ஸ்டெர்லைட் புகையால்தான் கேன்சர், தோல்நோய்கள் வருகின்றன என்று ஒருபீதியை சாமானிய மக்களிடையே பரவவிட்டுவிட்டனர். இதனால் சாமானிய மக்களும்  ஸ்டொ்லைட் நிறுவனத்தை மூடியே தீரவேண்டும் என்று நினைக்கின்றனா். ஆனால் உண்மையில் ஸ்டெர்லைட் புகையினால்தான் கேன்சர் வருகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஆலைகளே இல்லாத கிராம மக்களும் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனா். கேன்சர் மருத்துவமனைகளில் இருப்பவர்கள் தூத்துக்குடியை சோ்ந்தவர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா? அப்படியானால் காரணம் என்ன? 

             கேன்சருக்கான காரணம் தவறான உணவு மற்றும் ஆரோக்கியகுறைவான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதே என்பது சற்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும். எண்ணெய் பதார்த்தங்கள், பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டுள்ள உணவுகள், எண்ணெய்க்குளியல் செய்யாமை, ஒத்துக்கொள்ளாத உணவுகளை உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளன. எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு கூட கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நலத்தை எப்படி சரியான முறையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

              03.12.1984 அன்று போபாலில் யூனியன் காா்பைடு பூச்சி கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனா். 10000க்கும் மேற்பட்ட நபா்கள் உயிரிழந்தனா். அதன் பாதிப்பு பல ஆண்டுகள் ஆகியும் இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய மோசமான துயர சம்பவத்தில் அக்னிஹோத்ரம் என்னும் ஹோமம் செய்த சிலரின் குடும்பங்கள் மட்டும் எவ்வித பாதிப்புமின்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆராய்ந்த மேல்நாட்டவர்கள் காற்றைத் தூய்மைப்படுத்துவதில் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஹோம வழிபாடு அற்புதமாக காற்று மண்டலத்தை சுத்திகரிப்பததை கண்டறிந்து தற்போது தங்கள் நாடுகளில் செயல்படுத்தி வருகின்றனா். எனவே மக்கள் வீடுகளில் ஹோமம் (நாமே செய்யலாம்) வளர்ப்பதை பின்பற்றினாலேயே அத்தனை தொழிற்சாலைகளின் நஞ்சையும் எளிதாக நீக்க முடியும்.

             மேலும்  காற்று மண்டலத்தை சுத்தப்படுத்துவதில் மரங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆக்சிஜன் அதிகம் தருகின்ற ஆல், அரசு, அத்தி, புங்கு போன்ற வறண்ட நிலத்தில் வளரும் மரங்களையும் தாவரங்களையும் காடுகள் போல் அடர்த்தியாக வளர்த்தால் போதும். இவை காற்றிலுள்ள நஞ்சை நீக்கி காற்றுமண்டலத்தை சுத்தமாக்கி ஆரோக்கியம் தரும். புகைகளினால் எந்த பாதிப்புகளும் வராது. 

           இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது. இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காங்கிரஸ் கட்சியோ திமுகவோ ஆட்சியில் இருந்திருந்தால் நடந்திருக்குமா என்று சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக நடந்திருக்காது. ஏனெனில் இந்த கட்சிகள் மேற்படி நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்திருக்கும். இவை மைனாரிட்டி நல கட்சிகளாக இருப்பதால் மேற்படி தேசவிரோத அமைப்புகள் எந்த போராட்டமும் நடத்தியிருக்காது. மேலும் ஒரு வேளை ஸ்டெர்லைட் நிறுவனம் கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் மதத்தை சார்ந்த ஒருவரால் நடத்தப்பட்டிருந்தாலும் இந்த போராட்டங்கள் நடைபெற்றிருக்காது. அப்படியானால் இந்த போராட்டம் உண்மையில் மக்கள் நலனுக்காக நடத்தப்படுகிறதா? 

              சரி. இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் உண்மையில் மக்களின் நலனுக்காக போராடுவதாக இருந்தால் மண்வளத்தை, நீர்வளத்தை கெடுக்கும் சாயப்பட்டறை தொழிற்சாலைகள், சுற்றுச்சுழலை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலைகள், மீன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இவை எல்லாவற்றையும் விட மக்களை குடிக்க வைத்து விபத்துகளை ஏற்படுத்தி, கல்லீரல், குடல் கெட்டு, குடும்பத்தில் குடித்துவிட்டு கொலைவரை செல்லும் குடும்பச் சீரழிவுகளுக்கு காரணமாக இருக்கும் மதுபானத் தொழிற்சாலைகளை எதிர்த்து ஏன் போராடுவதில்லை? என்று சிந்தித்து பாருங்கள்.

             காப்பர் ஒரு தவிர்க்க முடியாத உலோகம். தற்போது இந்த ஆலையை மூடியதால் தாமிர உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதுபோல் இந்தியாவில் இருக்கும் அனைத்து தாமிர உருக்காலைகளையும் இதே காரணத்தை சொல்லி மூடிவிட்டால் தாமிரத்திற்கு எங்கு செல்வோம். பிறநாடுகளில் இறக்குமதி செய்யலாம் என்றால் அந்த நாடுகளில் உள்ள மக்கள் இந்த புகையால் பாதிக்கப்படாமல் வாழ்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. மற்றநாடுகளில் இந்த புகையால் பாதிப்பு ஏற்படவில்லை என்றால் இங்கும் ஏன் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது. இந்த ஆலையை மூடியதால் பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நியச்செலாவணி குறைந்துள்ளது. பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

                    ஏற்கனவே போராட்டங்கள் நடத்தி பணம் சம்பாதித்த கட்சிகள் மீண்டும் சம்பாதிக்க போராட்டத்தை கையில் எடுத்துள்ளன. எனவே ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தேசவிரோத சக்திகளின் சதிக்கு பலியாகக்கூடாது. 
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக