பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

மன அமைதி வேண்டுமா?

23 ஆகஸ்ட், 2012  

உலகில் அனைவரும் மன அமைதியை விரும்புகிறோம். மன அமைதிக்காக ஒவ்வொருவரும் பல்வேறு வகையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். என்னுடைய மன அமைதிக்கு நான் என்ன செய்கிறேன் என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் தெரிவிக்கிறேன். உங்கள் அனுபவத்தில் நீங்கள் என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.  

சுவாமி சிவானந்தா மன அமைதிக்கு கூறும் வழியை கீழே படித்து பாருங்கள். எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது. எத்தனை தடவை மந்திரங்கள் ஜபி்க்கப்பட்டன. எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு மறை நூல்கள் வாசிக்கப்பட்டன போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்வீக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை. உங்கள் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து, எத்தகைய வார்த்தைகளை நீங்கள் உங்கள் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறீர்களோ அவற்றைப் பொறுத்து, உங்கள் வாழ்வை நீங்கள் யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருக்கிறானோ அவர்களுடன் நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே தெய்வீக அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன என்று நான் திட்டவட்டமாக உங்களுக்கு கூறுகிறேன்

நல்லாரோக்கியமும் பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் இன்றியமையாதவை என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவை இரண்டும் இருப்பினும், பலரும் தொடர்ந்து மன அமைதியின்றி அல்லல்படுகின்றனர். நீங்கள் இந்த வகையைச் சோ்ந்தவர்களா? ஆமாம் என்று நீங்கள் பதில் சொன்னால் மேலும் இதைப் படியுங்கள். உங்களது தொல்லைகள் பெரும்பாலும் நீங்களாகவே உண்டாக்கிக் கொண்டது என்பதால், அவை தவிர்க்கப்படக்கூடியவையே. எப்படி என்று நாம் பார்ப்போம். நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் உறுவானேன்?. யாரையும், எதையும், குறை கூறாதீர்கள். பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படியே நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள்ளே இலங்கும் கடவுள் அவர்களை அப்படிச் செய்ய தூண்டுகிறார். உங்கள் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல விதியாகும். வேலை அதுவே ஒரு தியானம் உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்.

 மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் எல்லாவற்றிற்கும் மேலாக கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில், உங்களையும் கவனிப்பது அவர்தானே! இந்த உண்மையை மறக்கக்கூடாது. நான் திரும்பவும் கூறுகின்றேன். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறை கூறாதிர்கள். குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர். எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை. ஏதாவது நிகழ்ந்தது என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்றுதான் பொருள். நீங்கள் அதைக் கண்டனம் செய்தால் கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை , கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் எனறுதானே அர்த்தம். அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி கிட்டும். கடவுள் பொருள்களை முழுமையாகப் பார்க்கிறார். மனிதன் பொருள்களைப் பகுதியாகப் பார்க்கிறான். மனிதன் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திலிருந்து பிரிந்து, நிகழ்ச்சிகளை நிகழ்காலத்தில் மட்டுமே பார்க்கிறான். கடவுளுக்கோ முன் நடந்ததும், பின் நடக்க வேண்டுவதும் தெரியும். அதனால்தான் கடவுள் ஒற்றுமையைக் காண்கிறார்.  

மனிதன் வேற்றுமையைக் காண்கிறான். கடவுள் புரணமான நியாயத்தைக் காணும் அதே தருணத்தில் மனிதனொ அதைக் காண்பதில்லை. நீங்கள் உங்களை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துப் பாருங்கள். நீங்களே கடவுள் என உணருங்கள். பிரபஞ்சம் முழுவதும் உங்களது படைப்பே என்றும், அனைத்தும் உங்கள் விருப்பத்தாலேயே நிகழ்கின்றன என்றும் உணருங்கள். உடனேயே உங்களுக்குள் அபரிமிதமான அமைதியும் ஆற்றலும் ஊற்றெடுப்பதை நீங்கள் உணர்வீர்கள். பிறர் நம்மை திட்டும்போது பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும் காரணமின்றி துன்புறுத்துவதாகவும் நீங்கள் கூறுகின்றீர்கள். அது உண்மையாக இருந்தாலும் கூட அதற்காக அலட்டிக்கொள்ளாதீர்கள். நிலைமையைப் பொறுமையுடன் சமாளியுங்கள். இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள். யாராவது உங்களை திட்டினால் கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக இருங்கள். பிறர் அவர்கள் விருப்பம் போல் நினைக்கட்டும். அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும். இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையவராக விளங்குங்கள். எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். நான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்த அனைவரிடமும் அனைத்திடத்தும் கடவுளைக் காணக் கற்றுக் கொண்டால்தான் இது சாத்தியமாகும். கடவுள் அப்படி விரும்புகிறார். எனவே அது அப்படி இருக்கட்டும். பிறர் உங்களை நிந்திக்கையில் நீங்கள் மௌனமான இருங்கள். கலக்கம் அடையாதீர்கள். பழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் அடக்கத்திலும் தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். அதுவே ஒரு தவம். ஆன்மீகத்தில் நீங்கள் உயர்வடைவீர்கள். உங்களைத் திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தைக் காட்டுவதைவிட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்றுநோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள், மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சிய வாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்க ஒரே வழி இதுதான். உள்மளே பகைமையை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும். உங்களுக்குத் தூக்கம் போய்விடும். உங்கள் ரத்தத்தை நீங்கள் நஞ்சாக்குகின்றீர்கள். ரத்தக் கொதிப்பும் படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும்.  

பழிச்சொல்லோ , அவதூறோ உங்களுக்கு கடந்த காலத்தில் எப்பொழுதோ செய்யப்பட்டது. அது முடிந்து போன விஷயம். சிந்திய பால் அது. அதையே மீண்டும் மீண்டும் நினைத்து அந்த அவதூறு அல்லது பழிச்சொல்லின் துன்பத்தை ஏன் நீங்கள் நீட்டிக்கிறீர்கள். பகைமை மற்றும் வெறுப்பு எனும் ஆறுகின்ற காயத்தை நீங்கள் குத்திக் குத்தி மீண்டும் ஏன் புண்ணாக்குகிறீர்கள். இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா? இந்தச்சிறிய விஷயங்களில் நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிப்பது என்பது தகாத ஒன்று. ஏனெனில் மனித வாழ்வு மிகவும் சுருங்கியது. இன்றிருப்பார் நாளை இல்லை. இந்த தீய வழக்கத்தை விடுங்கள். உங்களுக்கு விருப்பமான வேலை ஒன்றில் புரணமாக மனதை லயிக்கச் செய்வதே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுது போக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது ஒன்றைப்பெற்றோம் ஒன்றைச் செய்தோம் என்ற மனதிருப்தி உங்களுக்குக் கிட்டும். மனிதன் வெறும் உணவால் மட்டுமே வாழ முடியாது என்ற பழமொழியை நினைத்துப் பாருங்கள். பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால், அதிக வருமானத்துடன் கூடிய ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள்

  புகழ் மனிதனுக்குத் தேவையா? உலகப் புகழ் , உலகப் பெருமையை விரும்பாதீர்கள். மானஸீக மற்றும் பௌதீக அமைதியின்மைக்கு இதுதான் முக்கிய காரணமாகும். பிறர் உங்களை மதிக்க வேண்டும் என ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்.? அந்த மற்றவன் பெரும்பாலும் முட்டாள் ஜனங்களே. இந்த உலகில் பெரும் வெற்றி அடைந்த மகா புருஷர்கள் பிறரின் அங்கீகரிப்பை, சமூக மரியாதையை எதிர்பார்த்தவர்களல்ல என்பதை நினைவில் வையுங்கள். மற்றவர்களது மதிப்பிற்காக நாம் ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக்கொள்ள வேண்டும்? அதற்குப் பதிலாக கடவுளது ஆசீர்வாதத்திற்காக, ஞானம் மிக்க மகான்களது ஆசிகளுக்காக நாட்டம் கொள்ளுங்கள். இதுவே செய்யத் தகுந்தது. முயலவேண்டியது

 பொதுமக்களின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பெரும்பாலும் பொதுமக்களின் கருத்து தவறாக உள்ளது. ஒழுக்க நியதிகள், நன்னெறிகள், மறைநூல் வாக்கியங்கள், அறிஞர்கள் மற்றும் மகான்களது கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வாழ்வில் தவறவே மாட்டீர்கள். நம் விதிதான் நமக்கு பொறாமை அடிக்கடி மன அமைதியைக் குலைக்கிறது.

 நீங்கள் எவர் மீதாவது பொறாமைப்படுகிறீர்களா? பொறாமை ஒரு வியாதி. உங்களது அலுவலகத்தில் ஒருவர் உங்கள் பதவி உயர்வைத் தடுத்தார் என்பதாலோ அல்லது உங்கள் வியாபாரத்தில் ஒருவர் போட்டியிட்டுக் குலைத்தார் என்று நீங்களாகக் கற்பனை செய்வது தவறு. திரும்பத் திரும்ப எண்ணுங்கள். உங்களது முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோ, அழக்கவோ முடியாது. உங்களது தொழிலும் உங்களது வாழ்க்கையும் உங்கள் முன் வினையால் உருவாக்கப்படுகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா! நிங்கள் முன்னேற வேண்டும் என்று விதி இருந்தால் உலகம் முழுவதும் ஒன்று திரண்டாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு மாறாக நடக்க வேண்டுமெனில் அப்பொழுதும் உலகம் முழுவதாலும் ஒன்றும் செய்ய இயலாது. ஒவ்வொரு மனிதனும் அவனது விதியினாலேயே ஆளப்படுகிறான். ஒருவரை சார்ந்திருப்பது போலத் தென்பட்டாலும் ஒருவரது வாழ்விலிருந்து அடுத்தவருடையது வேறுபட்டது ஆகும். இதை நினைவு கொள்ளுங்கள். இந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

 


ஒருபொழுதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள். அல்லு உங்கள் துன்பத்திற்கு பிறரைப் பழிக்காதீர்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் உங்களது ஒரு சுழ்நிலை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சுழ்நிலையை மாற்றுவதற்கு பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதை விட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள். இப்படி நீங்கள் செய்தால் வருடக்கணக்காக உங்களுக்குக் கெட்டதாகத் தென்பட்ட உங்களது சுழ்நிலை அதிசயிக்கத்தக்க விதத்தில் நல்ல விதத்தில் மாறத் தொடங்குவதைக் காண்பீர்கள். நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும்பொழுது சுழ்நிலையும் மென்மேலும் ஒத்த விதத்தில் வளர்ச்சி அடையும். எப்படி? என்று கேட்காதீர்கள். முயன்று பாருங்கள். அனுபவத்தில் தெரியும் நண்பரே. பொறுமை தரும் பலம் எது நடந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். எதைக் குணப்படுத்த முடியாதோ அதைப் பொறுத்தேயாக வேண்டும். மகிழ்ச்சியுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். காலை முதல் நடு இரவு வரை நூற்றுக்கணக்கான வசதிக் குறைவுகள், தொல்லைகள் மற்றும் துன்பங்களுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். பொறுமை , உள்பலம் மற்றும் இச்சாசக்தி உங்களிடம் அதிகரிக்கும். பிரதிகூலமானதை அனுகூலமானதாக நீங்கள் மாற்றி அமைப்பீர்கள். ஒருவரது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்றவரை அண்டி இருப்பதுதான் ஒருவரது அமைதியை இழப்பதற்கான முக்கியமான காரணமாகும். பராதீனம் ப்ராண சங்கடம். பிறரை அண்டி இருப்பது என்பது துன்பம் தருவதுதான். சுதந்திரம் ஆனந்தம் அளிக்கும். எனவே தன் காலில் நிற்க முயலுங்கள். முடிந்த மட்டும் முயலுங்கள். மனப்புர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் உங்களால் தன் காலில் நிற்க முடியும் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.உங்கள் உடைகளை நீங்களே துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறையை நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்கள். உங்கள் உணவை நீங்களே சமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கடிதங்களை நீங்களே டைப் அடித்துக்கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் தினமும் செய்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. தீராது என்ற நிலையில் இந்தச் சிறிய திறமைகள் உங்களுக்குப் பெரும் உதவியாக அமையும். பொறுப்புகளை என்ன செய்வது

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள், தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது. அதிகமான கவலைகள்தான் உங்களைச் சேரும். ஏனெனில் உங்களது கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து ஏற்கனவே உங்களிடம் இருந்த கொஞ்சம் அமைதியையும் இல்லாததாக்கிவிடும். இதைவிட உங்களால் முடிந்த மட்டும் திறமையுடன் உங்களது பொறுப்புகளை நிறைவேற்றப் பாருங்கள். ஆனால் ஒன்றை முக்கியமாக இங்கே மனதில் கொள்ள வேண்டும். நான் செய்கிறேன் என்ற ஆணவத்துடன் தினமும் மேலும் மேலும் புதிய பொறுப்புகளைக் கூட்டிக்கொண்டு போகக்கூடாது. சாதாரண நடைமுறை பாஷையில் இதுதான்வம்பை விலைக்கு வாங்குவதுஎனப் பொருள்படும். இதற்கு மாறாக உங்களது பொறுப்புகளுக்கேற்ப உங்கள் புறவேலைகளை மென்மேலும் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக நேரத்தை பிரார்த்தனை, சிந்தனை மற்றும் தியானத்தில் செலவிட விருப்பம் கொள்ளுங்கள். மனமே இல்லாததாகும்பொழுதுதான் புரண அமைதி கிட்டுகிறது. மனம் என்பது எண்ணங்களின் குவியலே. எண்ணங்கள் என்றால் சலனம். செயல் குறையக் குறைய எண்ணங்களும் குறையும். எவ்வளவுக்கெவ்வளவு எண்ணங்கள் குறைகின்றனவோ அந்த அளவு மன அமைதி அதிகரிக்கும். எண்ணமின்மைதான் புரண அமைதி நிலவும் மிக உயர்ந்தநிலையாகும். தியானம் என்னும் அற்புத மருந்து ஒழுங்கான தியான நேரத்தைக் கடைப்பிடியுங்கள். தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நிச்சலத்தன்மையை அது உருவாக்குகிறது. ஒரு மணி நேரம் நிங்கள் ஆழ்ந்து தியானித்தால்கூட அந்த தியானத்தின் மூலம் மனதில் ஏற்படுத்தப்பட்ட பதிவு மீதமுள்ள இருபத்து மூன்று மணி நேரமும் மனதில் தங்கி நிற்கிறது. முன்போல மனம் அலைந்து திரியாது, படிப்படியாக தினசரி தியானத்தின் கால அளவைக் கூட்டுங்கள். இது உங்கள் அன்றாட வேலையுடன் குறுக்கிடாது. ஏனெனில் தியானம் உங்களது பல்வேறு திறமைகளை அதிகரித்து குறைந்த நேரத்தில் வேலைகளை செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு அளிக்கிறது. பயனுள்ள வேலை எப்பொழுதும் ஏதாவது பயனுள்ள நன்மை பயக்கும் வேலையைச் செய்யுங்கள்.

 இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா? என்று அலைந்து திரிவதில் நேரத்தை வீணாக்காதீர்கள். இதனால் பயனற்ற மனப்போராட்டத்தில் நீங்கள் நாட்கள், வாரங்கள், ஏன் வருடங்களைக் கூட வீணாக்கி கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய் விடுவீர்கள். அதிகமாக திட்டங்களைத் தீட்ட வேண்டாம். திட்டம் போடுவது கடவுள்தான். எப்பொழுதும் ஏதாவது நல்லதைச் செய்து கொண்டிருங்கள். ஆககப்புர்வமான உங்கள் காரியத்தில் இடைவெளி எதுவும் இருக்க வேண்டாம். ஒருசில கவனக்குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களை கீழே தள்ளி விடும். காலமே வாழ்வு. நேரத்தைப் பொன்போலப் பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவிடுங்கள். நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள். ஜபம், மானசீகப் பிராத்த்தனை மற்றும் ஏதாவது பயனுள்ள நூல்களைப் படிப்பதில் ஈடுபடுங்கள். எல்லா தொல்லையும் மனதில்தான் ஆரம்பிக்கிறது. கடும் சொற்களும் தீய செயல்களும் மனதில்தான் உதிக்கின்றன. எனவே ஆரம்ப ஸ்தானத்தை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்வாகிய நதி ஸ்படிகம் போல தூய்மையாகப் பாயும். தோல்வி என்பது தோல்வி அல்ல செயல்களைச் செய்வதானது தன்னம்பிக்கையை அளிக்கும். ஆரம்பத்தில் நீங்கள் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. உங்கள் குறைகளைத் திருத்திக்கொண்டு அடுத்த முறை நீங்கள் வெற்றி அடையலாம். நாற்காலியில் அமர்ந்து கொண்டு கவலைப்படுவதால் எதுவும் நிகழப்போவதில்லை. அது உங்களை ஒரு நம்பிக்கை அற்றவராக ஆக்கிவிடும். 

 சிலர் சில நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கும்போதே மனஉறுதி குலைந்து நம்பிக்கையை இழக்கின்றனர். அதனால் விக்கினங்கள் உண்டாகின்றன. எந்த நல்ல காரியம் செய்யும்பொழுதும் விக்கினங்கள் ஏற்படுவது இயற்கையே. காரியம் செய்பவருடைய மனஉறுதியைச் சோதிப்பதற்காகவே அவை வருகின்றன. அவரது நம்பிக்கை, உறுதி மற்றும் மனத்தூய்மையை சோதிக்கவே அவை வருகின்றன. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்ற உங்களது உறுதி அதிகரிக்கின்ற அளவு எதிரிடை சக்திகளும் பலமடையும். அதைக் கண்டு மனம் தளர வேண்டாம். அதற்கு மசிய வேண்டாம். கடவுளிடமும் உங்களிடமும் நம்பிக்கைகொண்டு அந்த இடுக்கண்களை வெல்லுங்கள். சோதனைகளையும் இடுக்கண்களையும் எதிர்கொள்ளாமல் எந்தத் துறையிலும் உங்களால் வெற்றியை அடைய முடியாது. தகுதித்தேர்வு எழுத விருப்பம் இல்லாமல் பட்டம் பெற விழைவது நியாயமாகாது அல்லவா? இடுக்கண்களை சந்திப்பது இன்பமே இடுக்கண்களை எதிர்கொள்ள நீங்கள் தயங்கினால் உங்களால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. ஏதோ காலத்தைக் கழிக்காமே தவிர, அது வாழ்வாகாது. உண்மையாக வாழ்வது என்றால், அது இலட்சியம் உடையதாயிருக்க வேண்டும். அடைவதற்கான இலட்சியங்கள், முயல்வதற்கான குறிக்கோள்கள் இருத்தல் வேண்டும்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக