பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

அன்னதானம் எப்படி செய்வது?


புதன், 14 டிசம்பர், 2011

 சமீபத்தில் திருக்கார்த்திகையின்போது திருவண்ணாமலை சென்றிருந்தேன். பார்க்கும் இடங்களில் எல்லாம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்தவுடன் மனதிற்கு ஆனந்தமாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் பசியின்றி கிரிவலம் செய்வதற்கு உதவும் அந்த ஆன்மீகப்பணி மகத்தானது.  
ஒருவர் இந்திரலிங்கம் அருகில் நின்றுகொண்டு கோவிலில் இருந்து வெளியே வரும் பக்தர்களுக்கு மிட்டாய்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்

 சிலர் சிறிய தொன்னைகளில் உணவளித்துக்கொண்டிருந்தனர். சிலர் சுக்குகாப்பி வழங்கினர்.  

சிலர் பெரிய பாக்கு தட்டுகளில் உணவு வழங்கினர். சிலர் வாழை இலை போட்டு அன்னதானம் வழங்கினர். அவரவர் தகுதிக்கேற்ப அன்னதானம் செய்தனர்.  

அன்னதானம் நடைபெறுபவற்றில் இரண்டு வகையான அன்னதானங்களைக் கவனிக்க முடிந்தது. எந்த சுயநலமும் இல்லாமல் நடைபெற்ற அன்னதானங்களும் விளம்பர நோக்கில் ஆடம்பர அன்னதானங்களும் நடைபெற்றதை உணர்ந்தேன்.  

முலைப்பால் தீர்த்தம் அருகில் சடைசாமி அவர்களின் அன்னதானம் வருடம் முழுவதும் எந்த விளம்பரமும் இன்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பக்தர்களின் பசிக்காக உணவளிக்கின்றனர். சிலர் வடை, பாயசத்துடன் அன்னதானம் செய்வதை புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரப்படுத்தி நன்கொடை வசுல் செய்யும் நோக்கத்தோடு செய்வதையும் காண முடிந்தது

 பொதுவாக அன்னதானத்தை நாமே நேரடியாக செய்வதுதான் சிறந்தது. முடியாத பட்சத்தில் அன்னதானம் செய்பவர்களிடம் பணத்தைக் கொடுத்து அன்னதானம் செய்ய உதவுவதும் தவறில்லை. அன்னதானம் செய்பவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு உதவ வேண்டும். பலரிடம் பணம் பெற்று செய்யப்படும் அன்னதான பெற்றுச் செல்லும் சில பக்தர்கள் ருசி பார்த்து , குறைகூறி உணவை வீணாக்குவதையும் காண முடிந்தது. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் வீணாக்கும் உணவு மற்றொரு பக்தரின் பசியைப் போக்கும் என்ற சிந்தனை இல்லாதவர்கள்.  

பசியுடன் உண்பவர்களுக்கு உப்பில்லா உணவு கூட தேவாம்ருதமாக இருக்கும். ருசி பார்த்து சாப்பிடுபவர்கள் ஓட்டல்களில் காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவது நல்லது. சாதுக்களை வீட்டுக்கு வரவழைத்து வாழை இலையில் அன்னம் படைத்து அவர்கள் உணவருந்திய பின் இலையை நாமே எடுக்க வேண்டும். சிலர் வீட்டில் செய்வதற்கு வசதிப்படாமல் கோவில்களில் வைத்து கொடுக்கின்றனர். இதுதான் சரியான முறை. நமக்கு புண்ணியத்தைத் தரும். திருப்பதி, சதுரகிரி, விஜயநாராயணம். வடலூர் போன்ற இடங்களில் வருடம் முழுவதும் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஹிந்துக்களாகிய நாம் கோடிக்கணக்கில் இது போன்ற தர்ம காரியங்களுக்கு செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.  

கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்காகவும், முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கும் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ நாடுகள் எத்தனை உள்ளன? முஸ்லீம் நாடுகள் எத்தனை உள்ளன? அவர்களிடம் இல்லாத பணமா? எந்த நாட்டிலாவது எந்த மசுதி, அல்லது சர்ச்சிலாவது வருடம் முழுவதும் வருபவர்களுக்கு எல்லாம் உணவளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று காட்ட முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக