பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

கிறிஸ்தவம் ஒரு வியாபாரம்


கிறிஸ்தவ மதத்தில் ஆன்மீகம் ஏதும் இல்லை. அது ஒரு வியாபாரம். திட்டங்கள் போட்டு (பங்காளர் திட்டம்) ஏமாற்றுவதில் பல உத்திகளைக் கைக்கொண்டு பேச்சுத் திறமை உடைய வியாபாரிகள் கோடிக்கணக்கில் கல்லா கட்டுகிறார்கள்.

உதாரணமாக டிஜிஎஸ் தினகரன் நாடார் குடும்பத்தினர் இவ்வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள். டிஜிஎஸ் தினகரனின் மகள் ஏஞ்சலா விபத்தில் மணிக்கணக்காக உதவிக்கு எவரும் இன்றி துடிதுடித்து இறந்தார். ஏராளமான மக்களை ஜெபத்தால் குணமாக்கியதாக கூறிக்கொண்ட தினகரன் மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை செய்து நடமாட முடியாத நிலையில் மரித்தார். பாலாசீர் லாறி என்ற போதகர் விபத்தில் இறந்தார். மோகன் சி லாசரஸ் நாடாருக்கு குழந்தை பாக்கியம் கிடையாது. ஆனால் அவருடைய ஜெபத்தால் ஏராளமானவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறதாம். கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி வேண்டாமா?

ஊசியின் காதுக்குள் ஒட்டகம் போகலாம். ஐஸ்வரியவான் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்ற ஏசு இந்த கோடீஸ்வரர்கள் மைக்கில் கூச்சலிட்டு அழுது நடித்து ‘இறங்கி வாரும்’ என்றால்  வந்துவிடுவாரா? இவர்களின் ஜெபத்தைத்தான் கேட்பாரா? எச்சில் கையால் காக்கா ஓட்டாத கிறிஸ்தவர்கள் கூட தங்கள் வருமானத்தில் தசம பாகத்தை இந்தக் கோடீஸ்வரர்களுக்கு அனுப்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். நர்மதா யாத்திரை, அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு போகும் இடமெல்லாம் தானாகவே உணவு கிடைக்கிறது. இதுதான் உண்மையான ஆன்மீகம்.

        இவர்கள் பைனான்ஸ் கம்பெனிகளைப் போல் சபை நடத்தி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். சபை உறுப்பினர்களின் தசமபாக காணிக்கையே அவர்களின் நோக்கம். திருவிழா, பெருவிழா என்ற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்துவது தங்கள் வருமானத்திற்காகத்தான். ஏசுவின் 10 கட்டளைகளைப் பின்பற்றுவதில்லை. விபச்சாரம்; செய்யாதிருப்பாயாக (மத்.5.28) ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்த்தாலே இருதயத்தால் அவளோடு விபச்சாரம் செய்ததாயிற்று” என்று போதிப்பவர்களிடம் “இக்குற்றத்தைச் செய்யும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளை காவல்துறையிடம் ஒப்படைக்கவோ சபையை விட்டு விலக்கவோ மாட்டார்கள். இவ்வாறு அதர்மத்தை ஆதரிக்கிறார்கள்.

பைபிளின் வசனங்களைத் தம் வசதிக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு நம்மை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக தந்தையை அடக்கம் பண்ண அனுமதி கேட்ட சீடனிடம் ஏசு (லூக்.9.60) “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி” என்று கூறியதை எந்த இறப்பு வீட்டிலும் கூற மாட்டார்கள். லேவி.19.4, 24.16 லூக்கா.12-51, 11.43, தீமோத்.II.3.12 போன்ற மோசமான வசனங்களைத் தெருக்களில் எழுதி விளம்பரம் செய்ய மாட்டார்கள். “கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலின்றி நாட்டத்திற்கொள்ளாரடி கிளியே” என்று பாரதியார் கூறியது போல் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வார்கள். பணம் இல்லாமல் ஜெபம் செய்யமாட்டார்கள். பணம் படைத்தவர்கள் வீட்டில்இவர்கள் செய்யும் ஜெபம் விசேஷமாக இருக்கும். வசதி இல்லாதவர்கள் வீடுகளில் சிலநிமிடங்களில் ஜெபம் செய்து முடித்துவிடுவாா்கள். இப்படி போலித்தனமான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் மதம்மாறி ஏமாந்தவர்கள்.

             சபைக்கு கூட்டம் அதிகம் சோ்ந்தால் வருமானம் அதிகம் கிடைக்கும். அதற்காக பலதிட்டங்கள் டிவியில் பொய்சாட்சி செட்டப் செய்து மக்களை முட்டாளாக்கி கூட்டம் சோ்க்கிறாா்கள். ஏஜெண்டுகள், சப்ஏஜெண்டுகள் என விசுவாசிகளை நியமித்து மல்டிலெவல் மாா்கெட்டிங் பிசினஸ் செய்கிறாா்கள். ஏமாந்து செல்பவா்கள் தசமபாகம் காணிக்கை கொடுத்து ஏமாந்துகொண்டிருப்பாா்கள். 
              இதனால்தான் ஆளாளுக்கு விதம்விதமான பெயாில் சபை என்று ஆரம்பித்து விடுகிறாா்கள். பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஏசுசொன்னதை பின்பற்றுபவா் ஒருவர் கூட இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக