பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

என்னுடைய ரோல் மாடல்


செவ்வாய், 30 அக்டோபர், 2012  


 நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் என்னுடைய ரோல் மாடலாக இருந்தவர் சுவாமி விவேகானந்தர். அப்போது நான் சேமித்து வைத்திருந்த பணத்தில் சுவாமி விவேகானந்தரின் சிறு சிறு புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன். பலருக்கும் அவருடைய நூல்களைப் படிக்க கொடுப்பேன். (பல வராமலேயே போய்விட்டன) அவருடைய எழுத்துக்கள் என்னை ஈர்த்தன. கடவுளைக் கண்டவர்கள் உண்டா? கடவுளை எனக்குக் காட்ட முடியுமா? என்று அலைந்தவருக்கு பிற மதத்தவர்கள் யாரும் முன்வராத நிலையில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் முன்வருகிறார். நான் பார்த்திருக்கிறேன். என்னை நீ பார்ப்பது போல் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன்என்கிறார். ஒரு பட்டப்படிப்பு படித்தவர் படிப்பறிவில்லாதவரிடம் சீடராகி தான் தேடியதை அடைகிறார்.  

கிறிஸ்தவர்கள் கடவுளைக் காட்டியிருந்தால் அவர் ஒரு பாதிரியாராகி இருப்பார். ஆனால் அவர்களால் காட்ட முடியவில்லை. ஒரு என்சைக்ளோ பீடியா புத்தகத்தை சில மணித்துளிகளில் படித்து கேட்ட கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளார். காமத்தை வென்றவர். பெண்களைத் தாயாக பாவித்தவர். வேதம் மற்றும் உபநிஷத்களின் விளக்கங்களை மிக எளிமையாக நாம் அறிந்து கொள்ளும் வகையில் கொடுத்தவர்.  

சுவாமிஜியைப் பற்றியும் அவருடைய சொற்பொழிவுகளில் சிலவற்றையும் இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். சித்தர்களின் ஞானப்பாடல்கள் என்ற நூலைப் படித்தபோது பட்டினத்தார் என் ஆதர்ஸ புருஷனானார். ஒரு கோடீஸ்வரன் தன் சொத்துக்களை எல்லாம் ஒரு நொடியில் துறந்து கோவணம் அணிந்து பிச்சை எடுக்கும் வாழ்க்கையை மேற்கொள்கிறார். அதைப் பெருமையாக கூறுகிறார். மாடுண்டு கன்றுண்டு, மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம் கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே ஓடுண்டு கந்தையுண்டு உள்ளே எழுத்தைந்தும் ஓதவுண்டு தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையுமுண்டே

 உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே செருக்கித்தரிக்க திருநீறுமுண்டு, தெருக்குப்பையில் தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்து கொண்டேன், குறைஏதும் எனக்கில்லையே என்கிறார்

 அவருடைய பாடல்கள் பெண்ணாசையையும் பொன்னாசையையும் நீக்குவதற்கு அருமையாக வழிகாட்டும். செய்யாத தவறுக்காக அவரைக் கழுவிலேற்ற முயலும்போது அவர் என்செயலாவது யாதொன்றும் இல்லை என்ற பாடலைப்பாட கழுமரம் தீப்பற்றி எரிகிறது. கடவுளே என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறவில்லை. பத்திரகிரியார் ஒரு அரசர். அவரையும் தன்னைப் போல் பிச்சைக்காரனாக, சீடராக மாற்றிவிடுகிறார். இவருடைய ஜீவசமாதி திருவொற்றியுரில் உள்ளது. இப்படிப் பட்ட மகான்களை உருவாக்கி வருவது நம் ஆன்மீகம். 12 பெண்டாட்டியை கட்டிக்கொண்டு வியாபாரிகளைக் கொள்ளையடித்த கொள்ளைக்காரனை மாமனிதர், இறுதி இறைத்தூதர் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக