பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

இந்து மதத்தில் தீண்டாமை உள்ளதா?

ஜாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல...
எவர் வேண்டுமானாலும் பிராமணராக இயலும்...
அதற்குரிய பல உதாரணங்கள் புராணங்களிலும் நிகழ்காலத்திலும் உள்ளன..
அவற்றை காண்போம்...

புராணங்களில்

விஸ்வாமித்ரர், கௌசிகர்,ஜாம்பூகர்,வால்மீகி, வியாசர், கௌதமர், வசிஷ்டர்,அகஸ்த்தியர் போன்ற ரிஷிகள், மஹா அதர்வண சத்யகாம ஜாபாலா என்ற வேத கால அறிஞர்போன்றோர் பிராமணனுக்கும் பிராமணஸ்திரியுக்கும் பிறக்கவில்லை. ஆனால் இவர்கள் பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டனர்..

நிகழ்காலத்தில்

🕉குருக்கள் இனம் சைவ வேளாளரில் இருந்து உருவாக்கப் பட்டது. இன்றைக்கு குருக்கள் பிராமணர்களாகவே அறியப்படுகின்றனர்

🕉பட்டு நூல் நெசவு தொழிலாளிகளை கொண்டு உருவாக்கப் பட்ட சமூகம் "சௌராஷ்டிர பிராமணர்"

🕉தாழ்த்தப் பட்டவர்களுக்கு சமாஸ்ரயணம் கொடுத்து உருவாக்கப் பட்டவர்கள் தென்கலை ஐயங்கார்கள்

🕉தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து உருவாக்கப் பட்டவர்கள்  "சாத்தாணி" என்று அழைக்கப்படும் பிராமண பிரிவு

🕉கலப்பு இனமாக உருவாக்கப் பட்டது வட தேசத்து "மிஸ்ரா" பிராமணர்கள்

🕉வட தேசத்து பண்டாரங்களில் இருந்து உருவாக்கப் பட்டது "பண்டா" என்னும் பிராமண பிரிவு


🕉சோழிய வேளாளரில் இருந்து உருாக்கப் பட்டது "சோழியர்" என்னும் பிராமண பிரிவு

விஜய நகர சாம்ராஜ்யம் உதயமான பிறகு வடுக பிராமணரின் தூண்டுதலால் பிராமணராக்குதல் தடை செய்யப் பட்டது. ஐநூறு வருடங்களாக ஏதும் முன்னேற்றம் இல்லை☹

ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக புது முன்னேற்றம் 🙂


🕉ஆரிய சமாஜத்தில் ஜாதி வித்யாஸமில்லாமல் எல்லோருக்கும் பூணூல் போட்டு வேதம் சொல்லி கொடுக்கின்றனர். இந்த சமூகம் "ஆர்யா" என்று அழைக்கப் படுகிறது


🕉ISKCON ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் ஜாதி பேதமின்றி தீட்சை வழங்கப் படும். முதல் தீட்சை வைஷ்ணவ தீட்சை. அடுத்த தீட்சை பிராமண தீட்சை.

🕉கௌடிய மடத்தில் ஜாதி பேதமில்லாமல் பிராமண தீட்சை வழங்கப் படுகிறது

🕉பிள்ளையார் பட்டி கிராமத்தில் பிச்சை குருக்கள் நடத்தும் வேத பாட சாலையில் ஜாதி வித்யாஸம் பார்க்காமல் குழந்தைகள் சேர்க்கப் பட்டு பூணூல் அணிவிக்கப் பட்டு வேதம் பயில்கின்றனர். சில வருஷ வேத ஆகம பயிற்சிக்கு பிறகு "சிவாச்சாரியார்" பட்டம் வழங்கப் படுகிறது.
மகாபாரதத்தை எழுதிய வியாசரும்,  ராமாயணத்தை எழுதிய வான்மீகியும் பிராமணர்கள் இல்லை.

தீண்டாமை சமணர்கள் காலத்தில்  ஏற்பட்டது என்பதை டாக்டா்.சிவசக்திபாலன் அவா்களின் குருகுலத்தென்றலில் அழகாக விளக்கியுள்ளாா். இன்றும் பாலித்தீவில் அனைத்து சாதியினரும் எந்த வேறுபாடும் இன்றி வாழ்கின்றனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக