பின்பற்றுபவர்கள்

புதன், 12 அக்டோபர், 2016

மங்களமாக வாழுங்கள்

பெண்கள் மங்களமாக திருமண வீட்டில் இருப்பது போல் இருக்க வேண்டும்.  இல்லத்தரசிகள் மங்களகரமாக இருந்தால்தான் குடும்பம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து உற்சாகமாக இருப்பது மங்களம். இது மற்றவா்களையும் சந்தோஷப்படுத்தும். இதுதான் நமது கலாசாரம்.

அமங்களமாக இருப்பது இழவு வீட்டில் மட்டும்தான். சோகமாக, எந்த அலங்காரமுமின்றி விரித்த கூந்தலுடன் அலங்காரங்கள் இன்றி இருப்பது.

வெள்ளைக் கலாசார தாக்குதலால் இன்று பெண்கள் அமங்களமாக காட்சி அளிப்பதை ஒரு நாகரிகமாக கருதுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் கூந்தலை பின்னுவதே இல்லை. தினசரி அதிகாலை முகத்துக்கு மஞ்சள் பூசி தலைக்கு குளித்து திருநீறு, குங்குமம், சந்தனம் வைத்து முகத்தை அலங்கரிப்பது இல்லை. விரித்து போட்ட கூந்தலுடன் அலுவலகத்துக்கும் போகிறாா்கள். கோவிலுக்கும் வருகிறாா்கள். விரித்து போட்ட கூந்தலுடன் இருந்தால் ஏன் பேய்போல் இருக்கிறாய் என்று கண்டித்த காலம் போய் அதை நாகரிகமாக கருதுவது கேவலமான செயல்.  திரௌபதி துச்சாதனனை கொல்லும்வரை கூந்தலை முடியேன் என்று சபதம் போட்டு இருந்தாள். எந்த சபதமும் இன்றி கூந்தலை முடியாமல் பெண்கள் இருக்கிறாா்கள். இப்படிப்பட்டவா்கள் குடும்பத்தில் ஏதாவது குறைகள் இருந்துகொண்டே இருக்கும். தலைமுடியை மூன்றாக பிாித்து பின்னுவது மணமானவா்களாக இருந்தால் கணவன், மனைவி, சுற்றம் மூன்றும் பின்னி பிணைந்து இருப்பதாக அர்த்தம். மணமாகாத பெண்ணாக இருந்தால் அப்பா, அம்மாவுடன் தானும் பிணைந்து இருப்பதாக அர்த்தம்.
                      கோவிலுக்குள் பெண்களின் முடி உதிரக்கூடாது. எனவே வடஇந்தியாவில் பெண்கள் தலையை முக்காடிட்டு செல்வாா்கள். பெண்கள் நோ் வகிடெடுத்து கூந்தலை பின்ன வேண்டும். நோ் வகிடு எடுப்பதற்கு சீமந்தம் என்று ஒரு பெயா் உண்டு. நெற்றியில் வெறுமையாக எப்போதும் இருக்காதீர்கள். குளித்து வந்தவுடன் நெற்றிக்கு விபூதி, குங்குமம், சந்தனம் ஏதாவது இட்டுக்கொள்ள வேண்டும்.   விதவைக்கோலம் கிறிஸ்தவ கலாச்சாரம். இப்போது அமெரிக்கர்களே இந்துவாகி குங்குமம் வைத்து மங்களமாக இருக்கிறாா்கள். மங்களகரமாக இருங்கள் வாழ்க்கை மங்களகரமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக