பின்பற்றுபவர்கள்

திங்கள், 12 அக்டோபர், 2015

ஈசனின் கருணை


சிவபெருமான் தன் அடியாா்களுக்கு அருள்புரியும் பாங்கே அலாதியானது. அவர்களுடைய கா்ம வினைகளுக்கு ஏற்ப துன்பத்தையும் கொடுப்பாா். அந்த துன்பத்திலிருந்து விடுபட வழியையும் கொடுப்பாா். பணம் படைத்தவன் கஞ்சனாக இருந்தால், தர்மங்கள் செய்யாதவனாக இருந்தால் அவன் வழக்குக்கோ, வியாதிக்கோ பெரும் செலவு செய்யும் நிலையை உண்டாக்குவாா். வசதி இல்லாதவனாக இருந்தால் செலவு இல்லாமல் அவனுடைய துன்பத்திலிருந்து விடுபட வழிவகை செய்வாா். இதற்கு உதாரணம் நமது (திட்டிய கிறிஸ்தவரைக் காத்த சிவன் என்ற பதிவில் குறிப்பிட்டுள்ள) திரு.தங்கராஜ் அவா்கள் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவம்


         காலேப் தங்கராஜ் ஒரு சிவபக்தர். அவருக்கு சுகர் நோய் இருந்தது. அவ்வப்போது மெடிக்கலில் மருந்து மாத்திரைகளை அவரே வாங்கி சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் சுகர் அதிகமாகி முகம் வீங்கி கடுமையான காய்ச்சலுடன் வீட்டில் படுத்திருந்தார். எழுந்து நடமாட முடியாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார். அப்பொழுது அவருடைய நண்பரிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தது”மஞ்சநீர்காயல் சிவன்கோவிலுக்கு காரில் செல்கிறோம். வருகிறாயா?  இவரும் ”சரி” என்று கூறிவிட்டார். நண்பர்கள் 4 பேர் காரில் அவர் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றனர். 

             கார் தூத்துக்குடியிலிருந்து மஞ்சநீர்காயல் செல்ல ஆரம்பித்தது. திடீரென்று ஒரு நண்பர் முறப்பநாடு சிவன் கோவிலுக்குச் செல்வோம். இன்று அங்கு செல்வதுதான் சிறப்பானது” என்கிறார். மஞ்சநீர்காயல் புறப்பட்ட கார் முறப்பநாடு நோக்கி பயணமாகிறது. வழியில் டீ குடிக்க வேண்டும் என்று ஒரு நண்பர் சொல்ல இவரோ நடக்க முடியாததால் முறப்பநாட்டில் சென்று குடித்துக்கொள்வோம்” என்கிறார். வல்லநாடு தாண்டி முறப்பநாடு செல்லும்போது மற்றொரு நண்பர் ”முறப்பநாட்டில் ஒன்றும் கிடைக்காது. அங்கே ஏதும் கிடைக்காமல் நான் கடந்தமுறை சிரமப்பட்டுவிட்டேன். அதனால் காரை வல்லநாட்டிற்கு திருப்புங்கள்” என்கிறார். காரைத்திருப்பி வல்லநாடு செல்கின்றனர். வல்லநாடு சென்றதும் அவர்களுக்குப் பரிச்சயமான ஒரு நண்பர் ”முறப்பநாடு ஏன் செல்கிறீர்கள். இங்கிருந்து 2 கிலோமீட்டரில் சிவன் கோவில் இருக்கிறது. அதே தாமிரபரணி ஆறுதான். அதே சிவன்தான் இங்கு அகரத்தில் இருக்கிறாா். இங்கேயே வழிபடலாம்” என்கிறார்.

                மஞ்சநீர்காயலும் போகாமல், முறப்பநாடும் போகாமல் அகரம் சிவன் கோவிலுக்குச் செல்கிறார்கள். கடும் காய்ச்சல் இருந்தாலும் ஆற்றில் குளிக்கிறார். சிவனை வழிபடுகிறார். பிரகாரம் சுற்றி வரும்போது தகஷ்ணா மூர்த்தியை வணங்கும்போது அவர் மேல் அர்ச்சிக்கப்பட்டுள்ள வில்வ இலைகளை எடுத்துச் சாப்பிடுகிறார். அவை வில்வ இலை போல் இல்லாமல் மிகமிக கசப்பாக இருக்கின்றன. இலைகள் ஒரு பார்வைக்கு வில்வம் போலும் மற்றொரு பார்வைக்கு வேறு மரத்தின் இலைகள் போலவும் தெரிகிறது. யோசித்துக்கொண்டே மூலவருக்கு பின்புறம் செல்ல ஸ்தல விருக்ஷமாக அந்த மரம் நிற்கிறது.  இவருக்கு எதிராக ஒரு பண்டாரம் வருகிறார். அவரிடம் ”ஐயா இந்த மரம் என்ன மரம்? என்கிறார். ”சிவன் கோவிலில் எந்த மரம் ஐயா இருக்கும்? என்று எதிர்கேள்வி கேட்கிறார். ”வில்வம்” என்று பதில்கூறுகிறார். அதேதான்” என்கிறார். இலை கசப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறதே” என்கிறார். இது மகாவில்வம் ஐயா” என்கிறார். அந்த பண்டாரம். ”எதற்கு உதவும் ஐயா” என்கிறார். ”எதற்கா? சுகருக்கு” என்கிறார்.

                 உடனடியாக திரும்பவும் மரத்தை நோக்கிச் சென்று இலைகளைப் பறித்து ஆடு மேய்வது போல் இலைகளை உண்கிறார். மேலும் ஒரு பையில் நிறைய இலைகளைப் பறித்து வைத்துக்கொள்கிறார். காரில் மீண்டும் ஊருக்குத் திரும்புகின்றனர். இவர் காரில் கண்மூடி உறங்குகிறார். புதுக்கோட்டையில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்துகின்றனர். ஆச்சரியம் இவருக்கு காய்ச்சல் சுத்தமாக இல்லை. பறித்துச் சென்ற இலைகளை தொடா்ந்து சிலதினங்கள் சாப்பிட அவருக்கு சுகரே இல்லை. இன்றுவரை இனிப்பு சாப்பிடுகிறாா்.

              பாருங்கள். வீட்டில் எழுந்திருக்க முடியாமல் காய்ச்சலில் கிடந்தவரை தன்னுடைய கோவிலுக்கு வரவழைத்து அவருடைய நோயையும் குணமாக்கிய அற்புதத்தை.

   இதுபோல் என் வாழ்விலும் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு சமயம் நீர்க்கடுப்புடன் சிறுநீரில் ரத்தம் வந்தது. பயந்து போனேன். பகவானே இது என்ன சோதனை. இதற்கு அலோபதி மருத்துவரிடம் சென்றால் காசைக் கறந்துவிடுவாரே என்ன செய்வது என்று யோசித்தேன். என்ன காரணத்தினால் இந்த நோய் வந்திருக்கும் என சிந்தித்தபோது உடல் சுட்டினால் ஏற்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். உடல் சுட்டை நீக்கக்கூடிய இளநீர், வெந்தயம், இயற்கை உணவு என இரு தினங்கள் உணவை மாற்றினேன். ஆச்சரியம். இன்றுவரை அந்த பிரச்னை ஏற்படவே இல்லை.

                ஆனால் வங்கியில் பணிபுரியும் இவரது கிறிஸ்தவ அண்ணன் சுகருக்கும் பிரஷருக்கும் 20 ஆயிரத்துக்குமேல் செலவழித்துக் கொண்டு இருக்கிறாா். தசமபாக காணிக்கையை தவறாமல் சர்ச்சுக்கு செலுத்தியவர். 1லட்சம் மாத வருமானம் உடையவா். ஆனால் ஜெபவைத்தியம் உதவாமல் மருத்துவமனையை நம்பி உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கிறாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக