பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

கர்த்தரை நம்பினால் செழிப்பார்களா?


கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்று சுவர்கள் எல்லாம் எழுதி விளம்பரம் செய்து ஏதோ கிறிஸ்தவர்கள் எல்லாம் செல்வச் செழிப்புடன் இருப்பது போல் பணத்தைக் காட்டி ஏமாற்றுகிறார்கள். கிறிஸ்தவ நாடுகளிலும் ஏராளமான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். பணத்திற்காக கொள்ளை அடிக்கும் கிறிஸ்தவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்தில் அதிகம். இவர்களை கர்த்தர் செழிப்பாக வைத்திருந்தால் ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?  பணக்கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பணஉதவி செய்வது, தங்கள் கல்வி நிறுவனங்களில் வேலை கொடுப்பது  என உதவி என்ற பெயரில் மதம் மாற்ற முயல்கிறார்கள். செல்வம், பொருள்  இவை வரும் போகும். நிலையாக எவரிடமும் தங்காது. இந்த உண்மை தெரியாமல் பணத்திற்காக சிலர் ஏமாந்து மதம் மாறிவிடுகிறார்கள்.

பணத்தையும் அரசபோக வாழ்வையும் துச்சமாக கருதி தூக்கி எறிந்து விட்டு சன்யாசிகளாக மாறிய பட்டினத்தார், பத்திரகிரியார், புத்தர், இளங்கோவடிகள் போன்ற மகான்கள் பிறந்த இந்த பூமியில் பணத்திற்காக மதம் மாறுவது கேவலமானது. ஏழை கிறிஸ்தவர்கள் ஏராளமாக இருக்கும்போது அவர்களுக்கு உதவாமல் நம்மை மதம் மாற்ற செலவிடுகிறார்கள். இன்று ஏழையாக இருப்பவன் நாளை பணக்காரனாகலாம். இன்றைய பணக்காரன் நாளைக்கு ஏழையாகலாம். இந்த செல்வம் அவரவர்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியத்தால் கிடைப்பது.  நம் நாட்டை சுரண்டிய கிறித்துவ நாடுகள் தற்போது பெரும் கடன்சுமையில் இருப்பதையும் அந்நாடுகளை இரட்சிக்க நம் பிரதமர் 500 லட்சம் டாலர்கள் உதவியை அவர்களுக்கு சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்கு அளித்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.

நம் கோவில்களில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது அவரவர் விருப்பம். பூசாரிக்கு கூட தட்டில் பெரும்பாலானவர்கள் காசு போடுவதில்லை. காசுக்கு ஆசைப்பட்டு மதம் மாறிய பின் கட்டாயமாக பத்தில் ஒரு பங்கு காணிக்கையாக கொடுக்க நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதைப் போல பண ஆசைகாட்டி மதம் மாறியவர்களிடம் பின் பணம் கறக்க ஆரம்பித்து விடுகிறார்கள். செல்வம், நோய், இன்பம், துன்பம் இவை நிலையில்லாதவை. கர்ம வினைப்படி வருபவை. மதம் மாறிய கிறிஸ்தவர்கள் அனைவரும் செழிப்பாக வாழவில்லை. மதம் மாறாதவர்களிலும் ஏராளமான பணக்காரர்கள் இருக்கிறாா்கள். பணத்திற்காக சோரம் போகலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக