பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

உண்பதற்கு முன்


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011  

உணவு உண்பதற்கு ஒவ்வொருவரும் ஒருவிதமான பாலிசி வைத்திருக்கின்றனர். ராஜாமணி என்று ஒரு அரசு ஊழியர் இருந்தார். டெபுடி கலெக்டர் வரை பதவி உயர்வில் சென்றவர். இவர் சாதாரண அரசு ஊழியர்களைப் போல் லஞ்சம் வாங்குவார். ஆனால் சம்பளப்பணத்திலோ, லஞ்சப்பணத்திலோ சாப்பிட மாட்டார். அடுத்தவர் பணத்தில்தான் சாப்பிடுவார். இவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஒருநாள் என்று இவருடைய சாப்பாட்டு செலவை செய்வார்கள். விடுமுறை நாட்களிலும் கூட அலுவலகத்திற்கு வந்து அடுத்தவரின் பணத்தில்தான் சாப்பிடுவார். அப்படி ஒரு பாலிசி. ஒரு விடுமுறை நாளில் இவருக்கு உணவு வாங்கிக் கொடுக்கக்கூடிய ஊழியர்கள் எவரும் வரவில்லை. மதிய உணவு நேரம். பியுனை அழைத்து வாங்கி வரச்சொன்னார். சாதாரணமாக மற்ற பியுன்கள் எல்லாம் கை்காசை போட்டு இவருக்கு வாங்கிக் கொடுத்துவிடுவர். ஆனால் இந்த அலுவலக உதவியாளர் வித்தியாசமானவர். ஐயா காசு கொடுங்கள் வாங்கித்தருகிறேன்.” என்றார். இவருக்கு கோபம் வந்து விட்டது. என்னிடமே காசு கேட்கிறாயா? என்னவென்று நினைத்தாய்? என்று சீறியிருக்கிறார். அவரோஅலுவலக பணி செய்வதற்குத்தான் நான் உங்களுக்கு அலுவலக உதவியாளா். சாப்பாடு வாங்கி்த்தருவது எல்லாம் என்னுடைய வேலை இல்லை. காசு கொடுத்தால் வாங்கித் தருகிறேன். இல்லாவிட்டால் பட்டினி கிடங்கள் என்று சொல்லிவிட்டார். அவமானப்பட்டு காசு கொடுத்தார். இவரைப் போல்தான் பல அரசு ஊழியர்களும், பொதுமக்களும் உள்ளனர்.  

உணவு உண்பதில் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இவர் ஒரு உதாரணம். என் நண்பரின் தாயார் தமது இறுதிக் காலம் வரையிலும் சமையல் செய்து முடித்தபின் திருப்பரங்குன்றம் முருகனைத் தரிசித்துவிட்டு முன்பின் அறியாத மூன்று நபர்களை அழைத்துவந்து அவர்களுக்கு உணவளித்து விட்டு அதன்பி்ன்தான் சாப்பிடுவார். அதனால் அவா் குடும்பம் இன்றுவரை நன்றாக இருக்கிறது. சிலர் பசுவிற்கோ, வேறு பிராணிகளுக்கோ சிறிது உணவு கொடுத்துவிட்டு சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் உள்ளனா். ஒரு நண்பர் உறவினர்கள் வீட்டில் கூட உண்ணமாட்டார். வெளியுர் சென்றால் கையில் அவல், பழம் எதாவது வாங்கி வைத்துக்கொண்டு அதைத்தான் சாப்பிடுவார். சில சிவனடியார்கள் , சிவனடியார்கள் வீட்டில் மட்டும்தான் சாப்பிடுவர். என் குருநாதர் அசைவம் சமைக்கும் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்.  

ஒரு நண்பர் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் பாவிகள் வீட்டில் சாப்பிடக்கூடாது என்பார். அப்படி சாப்பிட்டால் அவர்கள் செய்த பாவத்தை உண்பதாக அர்த்தம். பாவத்தில் நமக்கும் பங்கு கொடுத்து விடுகிறார்கள் எனவே தவிர்க்க வேண்டும் என்பார். அது ஓரளவு உண்மையும் கூட. ஆன்மீக வழியில் செல்லும் பலா் கண்ட இடங்களிலும் உண்ணும் வழக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றனா். ஒருமுறை காவி உடை அணிந்த ஒரு இளம் சன்யாசி என் வீட்டுக்கு வந்தார். சில விஷயங்கள் கூறி உங்கள் வீட்டில் இப்படி எல்லாம் நடக்கும் என்றார். நான் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் ஐம்பது பைசாவோ ஒரு ரூபாயோ போடுவது என் வழக்கம். அப்போது அவர் வாங்காமல்நீ என் ஒரு வேளை உணவுக்கு பணம் தருவாய் என்று உன் வீடு தேடி வந்துள்ளேன். இங்கு வேறு எவரிடமும் கேட்க மாட்டேன். விருப்பமிருந்தால் பதினைந்து ரூபாய் கொடு. இல்லாவிட்டால் தரவேண்டாம் என்றார். ஏனோ என் மனதில் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. கொடுத்தேன். வேறு எந்த வீட்டிற்கும் செல்லாமல் சென்றுவிட்டார்

 உண்ணும் முன் இறைவனை வணங்கி விட்டு உண்ண வேண்டும். பிறர் பசித்திருக்கும்போது அவர்கள் முன் நாம் உண்ணக்கூடாது. ஒருமுறை சில ஐயப்ப பக்தர்கள் மதிய உணவு வேளையின்போது என் வீட்டிற்குவர அத்தனை பேருக்கும் போதுமான உணவு இருக்காதே என்ற எண்ணத்தில் அவர்களை உணவு உண்ண அழைக்காமல் விட்டுவிட்டேன். அந்த பாவத்திற்கு நிறையவே சிரமப்பட்டுவிட்டேன். உண்பதற்கு முன்பிரம்மார்ப்பணம் பிரம்மஹவிர் பிரம்மாக்னோ பிரம்மனாகுதம் பிரம்மைவதேன கந்தவ்யம் பிரம்ம கர்ம சமாதினா. ஓம் ஸஹனாவவது ஸஹனௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ் வினாவதீதமஸ்து மாவித் விஷாவஹை ஓம்.சாந்தி சாந்தி சாந்திஎன்ற மந்திரத்தை சொல்லிவிட்டு சாப்பிடலாம். அல்லது மிக எளிமையாக சிவார்ப்பணம் என்றோ அண்ணாமலைக்கு அரோகரா என்றோ சொல்லிவிட்டு சாப்பிடலாம்.ஆனால் அதை விரதம்போல் செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக