பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

கண் பார்வைக்கு காணிநெய்



சனி, 14 ஜனவரி, 2012  
அகத்தியரின் பாடலில் கண்பார்வை பெற ஒரு எளிமையான மருத்துவம் ஒன்றைக் கூறியுள்ளார். பாடல் பின்வருமாறு  

கருவான காணியடா பொன்னாங்காணி தோணவே கொடுவந்து சாருவாங்கி சுத்தமுடன் பசுவின்பால் சரியாய் சேர்த்து புணவே காய்ச்சியுரை குத்தி வைத்து புத்தியுடன் மறுநாள் தான் தயிர் சிலுப்பி ஊணவே சிலுப்பி வெண்யை தனை எடுத்து உத்தமனே தானுருக்கி நெய்யை வாங்கே வாங்கியந்த நெய்யதனை பதனம் பண்ணி வரிசையுடன் விரலதனால் தொட்டுக்கொண்டு பாங்குடனே கண்ணதனில் தடவி மைந்தா பத்தியுடன் தான் பார்க்கத் துலைதானோடும் தாங்கியந்த நெய்யதனை தலையில் தேய்த்து தலைமுழுகி ஆகாசம் பார்த்தாயானால் சாங்கமாய் பகல்காலம் நட்சத்திரங்கள் தடையறவே தோணுமடா தன்னைப் பாரே.

பொன்னாங்கண்ணிச் சாறு எடுத்து அதற்கு சமமாக பசும்பால் விட்டு காய்ச்சி உரைகுத்தி மறுநாள் தயிர் கடைந்து வெண்ணையெடுத்து நெய்யுருக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை விரலால் தொட்டு கண்ணில் விட்டுவர கண்பார்வை தெளிவாகும். இந்த நெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வர பகலில் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவுக்கு பார்வை கிடைக்கும் என்கிறார். வாய்ப்பு உள்ளவர்கள் செய்து பார்த்து பலன் பெறுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக