பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

டாப் 10 அடையாளங்கள்


10. பிற சமயங்களில் ஆயிரக்கணக்கான கடவுளர்கள் இருப்பதை நீங்கள் தீவிரமாக மறுப்பீர்கள், ஆனால் சிலர் உங்கள் கடவுளை மறுத்தால் சீற்றம் அடைவீர்கள்

9 - மக்கள் மற்ற உயிரினங்களில் இருந்து உருவானார்கள் என்று விஞ்ஞானிகள் சொல்லும் போது நீங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், மனித தன்மையற்றதாகவும் நினைக்கிறீர்கள். ஆனால் நாம் (மண்)அழுக்கிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் என்ற விவிலிய கூற்றை ஏற்பதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை

8 - நீங்கள் பலகடவுளர்களை வணங்குபவர்களை பார்த்து சிரிப்பீர்கள், ஆனால் உங்களுடைய மூன்று கடவுள் (பிதா,குமாரன், பரிசுத்தஆவி) நம்பிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லை

7 - நீங்கள் அல்லாஹ் காரணமாக "அட்டூழியங்களை" கேட்கும் போது உங்கள் முகம் கோபத்தில் நிறம் ஊதாவாக மாறும், ஆனால் "எக்ஸோடஸ்" ல் எல்லா எகிப்திய குழந்தைகளையும் எப்படி கர்த்தர் / ஜெஹோவா படுகொலை செய்தார் என்பது பற்றி கேட்கும் போதும் யோசுவாவில் பெண்கள், குழந்தைகள், மற்றும் மரங்கள் உட்பட அனைத்து இனங்களையும் அழிக்க கர்த்தர் உத்தரவிட்டதை கேட்கும்போது எந்த சலனமும் ஏற்படாது.

 6 - மனிதர்களை தெய்வமாக சித்தரிக்கும் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் கடவுளர்கள் பெண்களுடன் தூங்கியதாக கூறும் கிரேக்க கூற்றுக்கள் குறித்து சிரிப்பீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் மேரியை கர்ப்பமடையச் செய்து ஒரு மனித-கடவுளை பெற்றெடுத்தார். அவர் கொலை செய்யப்பட்டு, உயிருடன் திரும்பவும் வந்து வானத்தில் சென்றார் என்று நம்புவதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

5 - நீங்கள் புவியின் வயது சில பில்லியன்ஆண்டுகள் என அறிவியல் நிருபித்ததில் சிறிய ஓட்டைகள் இருக்கிறதா என்று தேடுவதில் உங்கள் வாழ்க்கையை செலவிட தயாராக இருப்பீர்கள். ஆனால் வெண்கல காலத்து பழங்குடி மக்கள் அவர்களுடைய கூடாரங்களில் உட்கார்ந்து யோசித்து பூமியின் வயது சில தலைமுறை ஆண்டுகள் என பதிவுசெய்துள்ள தேதிகளில் தவறு எதுவும் கண்டுபிடிக்க மாட்டீர்கள்

4 - உங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டவர்களைத் தவிர இந்த கிரகத்தில் உள்ள அனைத்து மக்களும் முடிவில்லாத நரகத்தில் துன்புறுவார்கள் என்று நம்புகிறீர்கள். ஆனால் உங்கள் மதம் மிகவும் சகிப்புத்தன்மை மற்றும் அன்பு உடையது என்று கருதுகிறீர்கள்

3 - நவீன அறிவியல், வரலாறு, புவியியல், உயிரியல், இயற்பியல் அனைத்தும் உங்களை நம்ப வைப்பதில் தோல்வி அடைந்து விட்டன. மாறாக சில முட்டாள்கள் தரையில் உருண்டு கொண்டுஅந்நிய பாஷையில் பேசுவது கிறிஸ்தவத்தை நீங்கள் நிரூபிக்க தேவையான ஆதாரமாகக் கொள்கிறீர்கள்

2 - நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது நிறைவேறும் 0.01% வெற்றியை "அதிக வெற்றி விகிதம்" என வரையறுக்கின்றீர்கள். பிரார்த்தனை வேலை செய்கிறது என்பதற்கு ஆதாரம் என்று கருதுகிறீர்கள். மீதமுள்ள 99.99% ஜெபம் தோல்வியை எளிதாக கர்த்தரின் விருப்பம் என்று நினைக்கிறீர்கள்

1 - உங்களுக்கு உண்மையில் பல நாத்திகர்கள் மற்றும் பிற மத நம்பிக்கையாளர்களைவிட பைபிள், கிறித்துவம், மற்றும் தேவாலய வரலாறு குறித்து குறைவாக தெரியும். ஆனால் உங்களை கிறிஸ்தவர் என்று அழைத்துக் கொள்கிறீர்கள். மேற்கண்ட அறிகுறிகள் ஒருவரிடம் இருந்தால் அவர் மூளைச் சலவை செய்யப்பட்ட அடிப்படைவாத கிறிஸ்தவர் என்று அர்த்தம் என்று evilbible.com-ல் கிறிஸ் கூறுகிறார்.

 இத்துடன் நாம் சிலவற்றை சேர்த்துக்கொள்ளலாம். 1) இந்துக்கோவில்களில் சாமி ஆடினால் அது சாத்தான் என்று நம்புவீர்கள். சர்ச்சில் ஆடுகிறவர்கள் தூய ஆவியினால் ஆடுவதாக நம்புவீர்கள். 2) கிறிஸ்தவர்களின் நோய் குணமானால் அற்புதங்கள் நடந்தால் அது ஏசு, தூய ஆவியின் செயல்-அற்புதம். இந்துக்கள் மற்றும் பிற மதத்தினருக்கு அற்புதங்கள் நடந்தால் அது சாத்தானின் தந்திரம். 3) கிறிஸ்தவர்கள் துன்பங்களை சந்தித்தால் சாத்தானின் செயல். கர்த்தர் செய்யும் சோதனை. இந்துக்களுக்கு துன்பங்கள் வந்தால் அவர்களின் கடவுளின் கையாலாகாத தன்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக