பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 9 ஜூலை, 2019

கிறிஸ்தவர்களுக்கு ஏசுவின் மீது நம்பிக்கை உள்ளதா?

தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் உட்கார்ந்தால், எந்திரிச்சால் ஏசப்பாம்பாங்க. பிட் நோட்டீஸ் எடுத்துகிட்டு தெருத்தெருவா அலைவாங்க. ராப்பகலா ஆமென் அல்லேலூயான்னு கதறுவாங்க. ஞாயித்துகிழமை வந்தா கூட்டம் கூட்டமா சர்ச்சுக்கு போவாங்க. வாய்க்கு வாய் ஏசப்பா அப்படி செஞ்சார் இப்படி செஞ்சார்னு புல்லரிப்பாங்க. ஆனால் உண்மையிலேயே ஏசப்பா மேல் அவங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்றால் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். ஏன் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

            ஏசு சொல்கிறார் . உங்களில் ஒருவனுக்கு வியாதி உண்டானால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் அவனுக்கு எண்ணெய்பூசி ஜெபம் பண்ணக்கடவர்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை ரட்சிக்கும். அவன் பாவம் மன்னிக்கப்படும் அப்படிங்கறார். 99 சதவீத கிறிஸ்தவர்களுக்கு இந்த வசனத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்கிறார்கள். ஏசு நோய்களை குணமாக்குவார்னு கூட்டத்தை கூட்டி சாட்சி சொல்வார்களே தவிர ஆஸ்பத்திரிக்கு போகாமல் இருப்பது இல்லை.


           பைபிள்ல நாள் பாராதிருப்பாயாக. குறி கேளாதிருப்பாயாக.என்று பைபிள்
 கூறுகிறது. ஆனால் கிறிஸதவர்கள் நாள் பார்க்கிறார்கள். திருமணம், கிரகபிரவேசம் போன்றவற்றிற்கு நலல நாள் பார்த்துதான் செய்கிறார்கள். ஜோதிடர்களிடம் ஜோசியம் கேட்கிறார்கள். வீடு கட்டுவதற்கு வாஸ்து பார்க்கிறார்கள். இந்து முறைப்படி வீடு கட்ட பூமிபூஜை செய்கிறார்கள். சர்ச் கட்டுவதற்கே பிள்ளையாரை வைத்து பூஜை செய்துவிட்டுதான் வேலை ஆரம்பிக்கிறார்கள். வீடு இடிந்து விழக்கூடாது. யாருக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாது. கடனாகி வீட்டை விற்கும் சுழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிள்ளையார்  பூஜை செய்து ஆரம்பிக்கிறார்கள்.  இவர்களுக்கு உண்மையில் ஏசுவின் மேல் நம்பிக்கை இருந்தால் பாதிரிகளை அழைத்து வந்து ஜெபம் பண்ணி வீடு கட்ட ஆரம்பித்திருக்க வேண்டும். அதே போல் கட்டிய வீட்டில் குடியேறுவதற்கு முன் தச்சுக்கழித்தல் என்னும் இந்து மத சடங்கை தச்சு ஆசாரியை வைத்து சேவல் ரத்தம் தெளித்து விட்டுதான் குடியேறுகிறார்கள். அப்படி செய்யாமல் குடியேறினால் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணம். ஏசு காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இல்லை. 

            இந்துக் கோவில்களை பார்த்து காப்பி அடித்து சர்ச் கட்டுவது, இந்து முறைப்படி தாலி கட்டுவது, சிலுவை விளக்கு வைத்து ஏற்றுவது, என கிறிஸ்தவத்திற்கு சம்பந்தம் இல்லாதவற்றை பின்பற்றுகிறார்கள். உண்மையில் ஏசுவை பின்பற்றுவதாக இருந்தால் அவர் பிறந்த ஊரில் எப்படி அவரை வழிபடுகிறார்களோ அதுபோல் வழிபட வேண்டும். எல்லா நாடுகளிலும் உள்ள மக்களை பார்த்து அவர்கள் செய்வதை காப்பி அடித்து
தான் தங்கள் வழிபாட்டுமுறையை மாற்றிக்கொள்கிறார்கள்.

ஏசு பறவைகளைப்போல் அடுத்த வேளை உணவை சேமித்து வைத்துக்கொள்ளாதீர்கள். சட்டை பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளாதீர்கள். இரண்டு அங்கிகளைக்கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்.  ஆனால் ஏசுவின் மேல் நம்பிக்கை இல்லாததனால் இதைப் பின்பற்றி வாழ பயப்படுகிறார்கள். ஆனால் இந்து சன்யாசிகளோ ஆடை கூட இல்லாமல் கடுங்குளிரிலும், வெயிலிலும் அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்பதை பற்றி கவலைபபடாமல் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

        பைபிளில் ஏசு பெண்கள் தங்க , வெள்ளி ஆபரணங்களால் தங்களை அலங்கரிக்க வேண்டாம் என்கிறார்.  ஏசுவின் மீது நம்பி்க்கை உள்ளவர்கள் அவர் சொன்னபடி நடப்பார்கள் அல்லவா? ஆனால் ஆபரணமோகத்திலிருந்து  தங்களை விடுவித்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் தங்க வெள்ளி நகைகள் அணிந்து நெற்றியில் பொட்டு மட்டும் வைத்துக்கொள்ளாமல் ஏசுவை பின்பற்றுவதாக நடிக்கின்றனர்.

              ஏசுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேற தயங்குகிறார்கள். இதற்கு காரணம் பாதிரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான். இவர்கள் மதம் மாறிவிட்டால் தங்கள் பிழைப்பு என்னாவது என்று இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வது. ஆறுதலாக பேசுவது. செபம் பண்ணுகிறேன்னு ஷோ காட்டுவது என அவர்கள் தங்களை விட்டு விலகிப் போகாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். பாதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிறிஸ்தவர்கள் விலகிவிட்டால் அந்த கணமே கிறிஸ்தவம் இந்தியாவில் காணாமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக