பைபிளை நன்கு ஆராய்ந்து படித்தால் அது இஸ்ரவேலர்களுக்கு சொல்லப்பட்ட புத்தகம். தமிழ்நாட்டிலுள்ள மூடர்களுக்கு அல்ல என்பது விளங்கும். ஆனால் அது புரியாமல் மதமாறிகள் அதன் வசனங்களை தங்களுக்கு சொன்னது போல் சுவரிலும் வீட்டிலும் எழுதி போட்டு பைபிளில் ஆண்டவர் அப்படி சொல்லிவிட்டார் இப்படி சொல்லிவிட்டார் என்று புல்லரிக்கிறார்கள்.
பழைய ஏற்பாட்டின் 50க்கும் மேற்பட்ட அதிகாரங்களின் முதல் வரியே ”நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால்” என்றுதான் ஆரம்பிக்கிறது. பல இடங்களில் இஸ்ரவேலரின் தேவன் என்று வருகிறது. பழைய ஏற்பாடு என்பது யூதர்கள் எழுதி வைத்த புத்தகம்.
இஸ்ரவேல் என்பவன் யார்? யாக்கோபு தன் மாமனாகிய லாபானின் இளையமகள் ராகேலை மணம் தரச்சொல்லி அவனிடம் 7 வருடம் வேலைபார்க்கிறான். லாபான் இரவில் ராகேலுக்கு பதிலாக அக்கா லேயாளை படுக்க அனுப்பி விடுகிறான். அவளுக்கு வேலைக்காரியாக பில்காளை கொடுக்கிறான். காலையில் மாமனிடம் நான் ராகேலுக்காகதானே வேலைபார்த்தேன். ஏன் லேயாளை தந்து வஞ்சகம் பண்ணினீர் என்கிறான். மூத்தமகள் இருக்க இளையவளைக் கொடுக்கக்கூடாது. நீ இன்னும் 7 வருடம் வேலை செய். அவளையும் தருகிறேன் என்கிறான். அதன்படி மீண்டும் 7 வருடம் செய்து ராகேலையும் வேலைக்காரியாக பில்காளையும் கொடுக்கிறான். மூத்தவளுக்கு 3 குழந்தைகளைக் கொடுத்த கர்த்தர் இளையவளின் கர்ப்பத்தை அடைத்து வைத்திருக்கிறார். அதனால் அவள் என் வேலைக்காரி மூலம் எனக்கு பிள்ளை கொடும் என்று சொல்ல வேலைக்காரி மூலம் 2 பிள்ளையை கர்த்தர் கொடுக்கிறார். லேயாள் பிள்ளை பெறுவது நின்றதால் தன் வேலைக்காரி மூலம் பிள்ளை கொடுக்கச் சொல்கிறாள். அவள் மூலமும் 2 பிள்ளைகளைப் பெறுகிறாள். இளையவளின் கர்ப்பத்தை அடைத்து வைத்திருந்த கர்த்தர் திறந்துவிடுகிறார். ராகேலுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் பிறக்கிறார்கள். இப்படி வம்சத்தை விருத்தி செய்த யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று கர்த்தர் மாற்றுகிறார். இந்த வம்சத்தின் மேல்தான் கர்த்தர் பிாியமாக இருக்கிறார். மற்ற இன மக்களை வெறுக்கிறார். இவர்களை பாலும் தேனும் ஓடுகிற எகிப்து தேசத்திற்கு அழைத்து செல்கிறேன் என்று வழியில் உள்ள பிற இன மக்களை கொலை செய்து கொள்யைடிக்க சொல்கிறார். இந்த கதைகள் ஆதியாகமம் 29, 30, 31ல் உள்ளது.
இந்த இஸ்ரவேலர்கள்தான் யூதர்கள். அவர்களுடன் உடன்படிக்கை செய்கிறார். அவர்கள் வேறு தேவர்களை வணங்கக்கூடாது. விக்ரகத்தை வணங்கக்கூடாது. உடன்படிக்கையை மீறி நடந்தால் நோய்களை வரப்பண்ணுவேன். கொலைசெய்வேன் என்று மிரட்டுகிறார். அவர்கள் தங்களுக்காக எழுதி வைத்ததை கிறிஸ்தவர்கள் அப்படியே காப்பி அடித்து வைத்துக்கொண்டு தங்களுக்கு சொன்ன மாதிரி பயன்படுத்துகிறார்கள். ” என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும், நான் உன்னை ஆசீர்வதிப்பேன், செழிக்க பண்ணுவேன், உன் வீட்டை கட்டி கொடுப்பேன்” என்று நல்ல விதமாக கூறி இருந்தால் அதை சுவர் முழுவதும் விளம்பரம் செய்கிறார்கள். எகிப்திலுள்ள வியாதியை வரப்பண்ணுவேன் என்று மிரட்டிய வசனங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் கர்த்தர் சொன்னபடி நல்ல வசனத்தையோ கெட்ட வசனத்தையோ செயல்படுத்தவே இல்லை.
புதிய ஏற்பாட்டில் ஏசு வருகிறார். இவரும் காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேலர்களுக்குதான் அனுப்பபட்டிருக்கிறேன் என்று ஒத்துக்கொள்கிறார். தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படி இஸ்ரவேலுக்கு ரட்சகராக ஏசுவை எழும்பப் பண்ணினார் என்று பைபிள் கூறுகிறது. ஏசு தன் சீடர்களை நோக்கி இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு மட்டும் செல்லுங்கள் புறசாதியாா், சமாரியா் தேசங்களுக்கு செல்லாதீர்கள் என்கிறார். எனவே ஏசுவின் சீடர் தோமா இந்தியாவிற்கு வந்தார் என்பது எல்லாம் கட்டுக்கதை. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட நியாயபிரமாணத்தை நிறைவேற்றவே வந்தேன் என்கிறார்.
ஏசுவை பாா்த்திராத அவரின் சீடராக இல்லாத பவுல்தான் ஏசுவை பற்றி எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறான். இறுதியாக வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாருக்கு மட்டுமே பரலோக ராஜ்யம் உண்டு எனக்கூறப்பட்டுள்ளது. இதை எல்லாம் அறியாமல் மூளைச்சலவை செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இவர்களுக்கு மட்டும்தான் பரலோகம் கிடைக்கும் என்பது போல நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஏசு சொன்னதை பின்பற்றி சட்டை பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளாமல், வியாதியை குணமாக்கி, மரித்தோரை எழுப்பி வாழ்ந்து காட்டாமல் பவுல் சொன்னபடி ஏசுவை அறிவிக்கிறேன் என்று வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து அந்த குடும்பங்களையும் சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தான் ஆனபோது உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் என்று ஏசு கூறி இருப்பது இங்குள்ள கிறிஸ்தவர்களைத்தான் பைபிள் இஸ்ரவேலர்களுக்காகதான் சொல்லப்பட்டது. தங்களுக்கு அல்ல. கர்த்தரால்ஃஏசுவால் தங்களுக்கு எந்த நன்மையும் நடக்காது என்பதை என்றுதான் உணர்ந்து நம் முன்னோர் வழியை பின்பற்றப்போகிறார்களோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக