பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

கோவிலில் ஆபாசமா?

சில ஆபிரகாமிய அடிவருடிகள் நம் மத  தத்துவங்களை அறியாமல் நாம் பிறப்பு உறுப்பை வணங்குகிறோம் என்றும் இந்து மதத்தில் ஆபாசம் உள்ளது என்றும்  பினாத்துகிறார்கள். அந்த மூடர்களுக்கான பதிவு இது



         முதலில் தத்துவங்களை அறிந்துகொள்ள வேண்டும். இறைவன் இல்லாத இடம் இல்லை. இல்லாத பொருள் இல்லை. தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்கிறது இந்துமதம். அணுவிற்கு அணுவாய் இருக்கிறான் என்கிறது. அணுவின் இயக்கத்தை விஞ்ஞானமும் ஒத்துக்கொள்கிறது

        பதி  பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப்போல் பசு, பாசம் அனாதி என்கிறது. அதாவது இறைவனைப்போலவே உயிர்களுக்கும் ஆதி, அந்தம் கிடையாது. ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அதனால் கடவுள் ஒரு ஆணைப் படைத்து அவன் விலா எழும்பிலிருந்து பெண்ணை படைத்தான் அந்த இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் முறைகேடான உறவுகொண்டு மனித இனம் பெருகியது என்ற கட்டுக்கதையை இந்து நம்புவதில்லை. 

      வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இறைவனைக் காண்பவன் இந்து. காலை எழுவது முதல் இரவு படுக்கும் வரை அத்தனை செயல்களிலும் இறைவனை நினைத்து ஆன்மீக வாழ்க்கை வாழ்பவன் இந்து. காலை கண் விழித்ததும் உள்ளங்கையில் இருக்கும் இறைவனை வணங்கி அந்த நாளைத் துவக்குகிறான். இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுகிறான். தான் குளிப்பது போல் இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறான். தன்னை அலங்கரிப்பதை விட இறைவனை அதிகமாக அலங்காரம் செய்கிறான். அதில் ஆனந்தம் கொள்கிறான். தான் உண்பது போல் இறைவனுக்கு நைவேத்தியம் செய்கிறான். தான் படுப்பதுபோல் இறைவனையும் துயில்கொள்ளச்செய்கிறான். எல்லா செயல்களையும் இறைவனைப் பற்றிக்கொண்டு செய்வதால் பாவம் பற்றுவதில்லை என நம்புகிறான். 

           காமத்தையும்  ஆன்மீகத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது இந்து மதம். காமம் கேவலமானது அல்ல. காமத்தை அளவோடு அனுபவிக்க வேண்டும். காமத்தை கடந்தால் இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காகதான் கோவில் கோபுரங்களில் ஆண் பெண்  சிற்பங்களை வைத்துள்ளனர். புலனடக்க பயிற்சி மேற்கொள்வதற்காக  ஏராளமான விரதங்களையும் விழாக்களையும் கொண்டுள்ளது. இறைவனுக்கும் தாய், தந்தை, மகன், மாமன் என்று உறவுகளை உருவாக்கி பாசத்தின், அன்பின் முக்கியத்துவத்தை உணரச்செய்கிறது.. 

'உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே என்கிறார் திருமூலர். இறைவனைத் தனக்குள் தேடச்சொல்கிறது இந்து மதம். அப்படி தனக்குள் இறைவனை உணர்ந்தவர்கள்தான்  அகத்தியர், புலிப்பாணி, அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், பதினெட்டு சித்தர்கள் . அவர்கள் சொல்லிக்கொடுத்த வைத்தியமுறையை பின்பற்றி அது உண்மை என்று உணர்ந்ததால்தான் அவர்கள் சொல்லிக் கொடுத்த வழிபாட்டு முறையையும் நாம் பின்பற்றுகிறோம். 

                பிற மதங்கள் காமம் பாவம் என்பது போல் பேசுகின்றன. ஆனால் காமம் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்கிறது இந்து மதம். வாத்ஸ்யாயனர் என்ற ரிஷி காமசாஸ்திரம் என்ற நூலை எழுதியுள்ளாா். திருவள்ளுவர் காமத்துப்பால் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளாா்.  பிற மதங்கள் மணமக்களுக்கு முதல் இரவு என்று குறிப்பிடும்போது இந்து மதம் மட்டுமே சாந்திமுகூர்த்தம் என்று அதையும் புனிதமாக வர்ணிக்கிறது. சுவாமி சித்பவானந்தர் அவர்கள் நன்மக்களைப் பெறுவது எப்படி என்ற நூலில் தம்பதியர் நல்ல குழந்தைகளைப் பெறுவதற்கு எந்த நாளில், எந்த நட்சத்திரங்களில், எந்த திதியில்  எந்த நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் நல்ல பண்புள்ள குழந்தைகளைப் பெற முடியும் என்று எழுதியுள்ளாா்.
              தம்பதியர்  விரதநாட்களில் உறவு வைத்துக்கொள்வதில்லை. கணவன் விரதமிருந்தால் மனைவியும், மனைவி விரதமிருந்தால் கணவனும் ஒருவருக்கொருவர் விரதத்திற்கு துணையாக இருக்கின்றனர். எண்ணெய்க்குளியல் செய்த நாளிலும் உறவு கொள்வதில்லை. சில திதிகள், நட்சத்திரங்களையும் தவிர்ப்பர். 

             இல்லறமல்லது நல்லறமில்லை என்கிறது இந்து மதம். துறவிகளை காக்க வேண்டியது இல்லறவாசிகளின் கடமை.  அகத்தியா் , அத்திரி போன்ற பல ரிஷிகள் திருமணம் செய்து இல்லறவாசியாகவும் காமத்தை துறந்து சன்யாசியாகவும் வாழ்ந்தனர். பிரம்மசரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம் என வாழ்க்கையை மூன்றாக பிாித்து திருமணம் ஆகும் வரை பிரம்மசரியத்தை போதித்து இல்லறத்தில் ஈடுபடுகையில் தாம்பத்தியத்தை அனுபவித்து வயது முதிரும்போது துறவறம் மேற்கொள்ளவும் போதிக்கிறது.

                மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே
மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்டது ஆதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே’’          என்கிறார் சிவவாக்கியா். இவருடைய பாடல்கள் இல்லற வாழ்வின் மேன்மையை உணர்த்துகின்றன. இவரும் திருமணம் செய்த ஞானிதான்.


             அதே சமயம் பட்டினத்தார் பாடல்கள் துறவறத்தின் சிறப்பை விளக்குகின்றன. பட்டினத்தார் இல்லறத்தை துறந்து துறவறத்தை மேற்கொண்டவர்.வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி இறைவனை அடைவதற்கான வழியைக் கூறுகிறார். காமத்தை வெல்ல முடிந்தவர்கள் துறவறத்தையும்,  வெல்ல இயலாதவர்கள் இல்லறத்தையும் பின்பற்றலாம். எதையும் கட்டாயப்படுத்தாமல் இருப்பதே இந்து மதத்தின் சிறப்பு

             சிவபெருமானே தன் உடலில் பெண்ணுக்கு சரி பாதி கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என்று உணர்த்தியுள்ளார். பெண்களும் ஆன்மீகத்தில் பல அற்புதங்கள் செய்துள்ளனா். காரைக்கால் அம்மையார், ஔவையார் போன்று பல பெண்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக  வாழ்ந்திருக்கின்றனர். கற்பைக் காப்பதற்காக தீயில் விழுந்து இறந்த பெண்கள் வரலாறு பாரதம் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அவர்களிடம் பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்ட வரலாறுதான் உண்டு.   கற்புக்கரசிகள் வரலாறு இந்து மதத்தில் மட்டுமே உள்ளது.

             காமத்தை தவிர வேறு சிந்தனையற்ற காமாலை கண்ணுடையவர்களுக்கு மட்டும்தான் இந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களும் நல்ல விஷயங்களும் தெரியாது.
              
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக