மதமாற்றம் செய்ய வரும் பாதிரிகூட்டத்திடம் இதில் உள்ள கேள்விகளைக் கேளுங்க.
அல்லது பிரிண்ட் போட்டு கையில கொடுங்க.
அலறி அடிச்சு ஓடுவானுங்க. உங்க தெரு பக்கம் தலை வைக்கமாட்டான். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் இங்கே பதிவு பண்ணுங்க.
- வானம், பூமியை படைக்கும் முன் கர்த்தர் எங்கிருந்தார்? உண்டாகட்டும் என்றாா். உண்டாகிவிட்டது. இப்படி வார்த்தையால் உலகை ஒரே நாளில் படைக்காமல் ஏன் 6 நாட்கள் எடுத்துக்கொண்டார்
- ஆவி ரூபமான வாா்த்தையால் உலகைப் படைத்த சர்வ வல்லமையுடையவருக்கு ஏழாம் நாள் ஏன் ஓய்வு தேவைப்பட்டது? கொத்தனார் வேலையா பார்த்தார்?
- ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கனிகொடுக்கும் விருட்சங்களையும் ஆணும் பெண்ணுமாக மனிதனையும் படைத்துவிட்டாா். 2ம் அதிகாரத்தில் மண்ணைப் பண்படுத்த மனிதன் இருந்ததில்லை. மண்ணை எடுத்து ஆதாமை செய்து மூக்கில் ஜீவசுவாசத்தை ஊதினாா் என்று பைபிள் கூறுகிறது. முதல் அதிகாரத்தில் ஆணும் பெண்ணுமாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் எங்கே போனாா்கள்?
- ஒரு நாள் என்பது 24 மணி நேரம். ஒவ்வொரு நாளும். 10 செகண்ட்களில் உலகைப் படைத்துவிட்டு மீதி நேரம் கர்த்தர் என்ன செய்தாா்?
- 3ம் நாள் தான் சுரியனையும் சந்திரனையும் கர்த்தர் படைக்கிறாா். முதல் 2 நாட்கள் சுரியன், சந்திரன் இல்லாமல் எப்படி வந்தன?
- விலக்கப்பட்ட கனியை உண்டதால்தானே ஆதாம், ஏவாள் சிந்திக்க ஆரம்பித்தனர். சாத்தான் நன்மையைத்தானே செய்துள்ளது. அவர்கள் ஜடமாக, நிர்வாணமாக இருப்பதைத்தான் கர்த்தர் விரும்பினாரா?
- சாத்தானை ஏன் கர்த்தரால் அழிக்க முடியவில்லை?
- கா்த்தர் உலகைப் படைப்பதற்கு முன்பே சாத்தான் இருந்ததா? சாத்தானை யாா் படைத்தது?
- ஆதாம் ஏவாளின் மகன்கள் யாரை மணந்தனர்? கர்த்தரும் ஆதாமும் பேசிய ஆதியாககமம் முதல் அதிகார வசனங்களைக் கேட்டு எழுதிய ஆசாமி யார்?
- யூதாவின் மூத்த மகனைத் திருத்தாமல் (ஆதி.38.8-26) கர்த்தர் ஏன் அழித்தார்? இந்த ஆபாசக் கதையில் கர்த்தர் கூறும் நீதி என்ன?
- கர்த்தர் மோசேயை நோக்கி மீதியானியரை நெருக்கி வெட்டி போடுங்கள் (எண்ணா.25.17) என்றார். மனைவி, மனைவியின் சகோதரி, இவர்களின் வேலைக்காரிகள் மூலம் வம்சத்தை விருத்தி செய்த இஸ்ரவேல் புத்திரர்களை மட்டும் காப்பதற்காக பிற வம்சத்தாரை அழிக்க ஏன் அழைத்து சென்றார்?
- இஸ்ரவேல் புத்திரர்கள் இருந்த இடத்திலேயே தேனும் பாலும் ஓட வைக்காமல் லட்சக்கணக்கான பிற வம்சத்தாரை அழிக்க ஏன் கர்த்தர் உதவினார்?
- மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால் ஊசா தேவனுடைய பெட்டியை கை நீட்டி பிடித்தான். கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனை அடித்தார். அவன் பெட்டியண்டையில் செத்தான். (சாமு.11 6.7) ஓய்வு நாளில் விறகு பொறுக்கிய குற்றத்திற்காக ஒருவனைக் கல்லால் எறிந்து கொல்ல (எண்ணா.15..32-36) உத்தரவிட்ட கர்த்தர் தான் உலக மக்களுக்கு நியாயத் தீர்ப்பு வழங்குவாரா?
- விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (மாற்கு16.16) தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற குற்றத்திற்காக பிற மதத்திலுள்ள நல்லவர்களையும் நரகத்துக்கு அனுப்புவது நியாயமா?
- பல மனைவிகள் இருக்கும்போது உரியாவின் மனைவியை அபகரித்து அவனைக் கொன்ற (IIசாமு.11.3.17) அயோக்கியன் தாவீது பாடிய சங்கீதங்களை வேதவாக்காக எடுத்துக்கொள்வது ஏன்? அயோக்கியன் தாவீதுக்கு பாவமன்னிப்பு. அப்பாவி ஊசாவுக்கு மரண தண்டனை. இதுதான் கர்த்தரின் நியாய தீர்ப்பா?
- தாவீது செய்த பாவத்திற்கு அவனுடைய (முதல்) கைக்குழந்தையை (11.சாமு.12.15) கர்த்தர் கொன்றது நியாயமா? 2வது குழந்தை சாலமோனை ராஜாவாக்கியது ஏன்?
- உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி ஜெபம் பண்ணக் கடவர்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை ரட்சிக்கும்.| (யாக்.5.14) மருத்துவர்களிடம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு இவ்வசனத்தின் மேல் நம்பிக்கை இல்லையா?
- ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது முத்துக்களினாலாவது விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது அலங்கரியாமல் நற்கிரிகைகளினால் தங்களை அலங்கரிக்க வேண்டும்.(தீமாத்.2.9) ஜடை பின்னி, பட்டுச்சேலை , நகைகள் அணியும் கிறிஸ்தவ பெண்மணிகள் இவ்வசனத்தை படித்ததில்லையா?
- தவறு செய்தவர்களை மட்டும் தண்டிக்காமல் நோவாவின் உறவினர்களைத் தவிர அனைத்து உயிர்களையும் ஏன் கர்த்தர் வெள்ளத்தை உண்டாக்கி அழித்தாா்?
- நோவாவின் பேழைக்குள் எல்லா உயிரினங்களிலும் ஒரு ஜோடி வைத்திருக்கும்போது அசைவ பிராணிகள் எதை உண்டு வாழ்ந்தன? 40 நாட்கள் உலகம் தண்ணீருக்குள் இருந்தால் புமியில் புல் தாவரங்கள் அனைத்தும் அழுகியிருக்கும். அதன் பின் நோவா பெட்டிக்குள் இருந்த உயிரினங்களை வெளியே விட்டால் அவை சாப்பிட என்ன இருக்கும்?
- நீங்கள் விக்ரகங்களையும், சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்கு சிலையை நிறுத்தாமலும் இருப்பீர்களாக (லேவி.26.1) இவ்வசனங்கள் ஆர்.சி.பிரிவினருக்காக சொல்லப்படவில்லையா? மேரி, ஏசு, அந்தோணியாா் போன்றவர்களுக்கு சிலை வைத்து வழிபாடு செய்வது ஏன்?,
- ஏசு ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தினால் வாழ்த்துங்கள் (கொரி.11.13.12) இது எந்த நாட்டவருக்காக சொல்லப்பட்டது.? நம் மனைவி, மகளை பிறர் முத்தமிட அனுமதிப்போமா?
- காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேலர்களுக்காகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறேன். (மத்.15.24) தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு ரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்(அப்போ.13.23) இதை மறைத்து இந்தியர்களை ஏமாற்றலாமா?
- வழிக்காக பையையாவது, காசையாவது, அப்பத்தையாவது, இரண்டு அங்கிகளையாவது பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடிவைக்க வேண்டாம் (மத்.10.10, லூக்.9.3) இவ்வசனத்தின்படி எந்த போதகரும் நடப்பதில்லையே ஏன்?
- வுிபச்சாரம் செய்யாதிருப்பாயாக. ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று (மத்.5:28) இதற்கு மாறாக நடக்கும் போதகர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லையே ஏன்? உபதேசம் ஊருக்குத்தானா?
- களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? (ரோமர்.2:21) பைபிளின்படி நடக்காதவர்கள் பிறருக்கு போதிக்கலாமா? பொட்டு வைக்காமலும், விக்ரகங்களுக்கு படைத்தவற்றை உண்ணாமலும்(கொரி.10.28) பொய்யினால் ஏசுவை அறிவிப்பதிலும் (பிலிப்.1.18) மட்டும் பைபிளை பின்பற்றினால் போதுமா?
- விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்போது அவர்கள் சொஸ்தமாவார்கள்.(மாற்கு.16.17) வியாதியஸ்தரை சொஸ்தமாக்குங்கள். மரித்தோரை எழுப்புங்கள் (மத்,10.8) கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் இந்த மலையைப் பார்த்து அப்புறம் போ என்று சொல்ல அப்புறம் போம். (மத்.17.20) ஷை அற்புதங்களைச் செய்து காட்ட லட்சக்கணக்கான போதகர்களில் கடுகு விதையளவு விசுவாசம் உடைய ஒருவரைக் காட்ட முடியுமா?
- குருடர்கள் பார்வையடைகிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள். சப்பாணிகள் நடக்கிறார்கள். மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்.| கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் குருடர், செவிடர் பள்ளிகள், மருத்துவமனைகளில் இந்த அற்புதத்தை செய்வதில்லையே ஏன்?
- வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் கிறிஸ்தவர்கள் மதம் மாறுவதை தடுக்க இயேசுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாய் இருக்கிறவர்கள் யாவரும் துன்பப்படுவார்கள்| (தீமாத்.3.12) துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள்| என்று சமாதானம் கூறிக்கொண்டு இந்துக்களிடம் மட்டும் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் என்று ஏமாற்றுவது ஏன்?
- கர்த்தர் நாமத்தை நிந்திக்கிறவன் கொலை செய்யப்படவேண்டும்.(லேவி.24.16) ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானானபோது உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். இந்த வசனத்தை ஏன் விளம்பரம் செய்வது இல்லை?
- (மத்.23.15) உன் ஸ்திரீகளை அடுத்தவனுக்கு கொடுப்பேன். அவன் சூரிய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோட சயனிப்பான்.| (சாமு.12.13) போன்ற அற்புத வசனங்களை விளம்பரம் செய்யாமல் கர்த்தர் இஸ்ரவேலர்களுக்காக மோசேயிடம் கூறிய என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்| (யாத்.33.14) சவுல் தாவீதிடம் கூறிய ‘நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். பெரிய காரியங்களைச் செய்வாய்| (சாமு.26.25) போன்ற வசனங்களை உலக மக்களுக்கு கூறியது போல் விளம்பரம் செய்வது ஏன்?
- உன் கண்ணிலுள்ள உத்தரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலுள்ள துரும்பைப் பார்க்கிறது என்ன?(லூக்.6.41) கிறிஸ்தவ மதத்தின் குறைகளை உணராமல் இந்து மதத்தை குறை கூறுவது ஏன்?
- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதீர்கள். பிரிவினையையே உண்டாக்க வந்தேன். எப்படியெனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும் , மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன். தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்லன் (மத்,10.35, லூக்.12.51) இயேசு இப்படிச் செய்தால் தந்தையையும் தாயையும் எப்படிக் கனம் பண்ண முடியும்? இது நியாயமா?
- அந்(இயேசு வரும்) நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. (மாற்கு.13.17) இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இயேசு வராமலிருப்பதுதான் இவர்களுக்கு நல்லதா?
- ஏசு தன் சீடன் யோவான் கொலை செய்யப்படும்போது (மாற்கு.6.24-29) காப்பாற்றவில்லையே ஏன்?
- ஏசு இறந்தபின் 3வது நாள் உயிர்த்தெழும் வரை இடைப்பட்ட 2 நாட்கள் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்?
- ஏசு இறந்தபின் தேவனுடைய வலதுபாாிசத்தில் அமா்ந்தாா் என பைபிள் கூறுகிறது. அந்த தேவன் யாா்? மகாதேவன் சிவபெருமானா?
- கர்த்தர் அருளியுள்ள பாம்புக்கடி (எண்.21.8) குஷ்டரோக (லேவி.13.14) வைத்தியம் மூலம் காப்பாற்ற முடியுமா?
- டிசம்பர் 25ல் ஏசு பிறப்பதற்கு முன் யார் கடவுள்?
- டிசம்பர் 8ம் தேதி கருவுற்ற தேவ மாதா டிசம்பர்; 25ல் எப்படி இயேசுவைப் பெற்றார்? இது போன்ற அபத்தங்களை ஏன் எவரும் ஆராயவில்லை?
- மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். நீ போய் தேவனோட ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கி| (லூக்.9.60) துக்க வீட்டில் இவ்வசனத்தைக் கூறுவதில்லையே ஏன்?
- முறைகேடான உறவுகளை விளக்கும் (மகள்கள் தந்தையுடன் ஆதி.19.33) வேலைக்காரிகளுடன் ஆதி.30.4) (அண்ணன் மனைவியுடன் ஆதி.38.9) (மருமகளுடன் ஆதி.38.18) (சகோதரியுடன்.2.சாமு.13.11) (சித்தியுடன் ஆதி.35.22) நீதிக் கதைகளைக் கொண்ட பைபிளில் பத்தினிப் பெண்ணின் கதை ஒன்று கூட இல்லையே ஏன்?
- கொலை செய்ய (உபா.22.13, லேவி.24.27, 24.16, யாத்.37.15) , கொள்ளையடிக்க (உபா.20.13, எண்ணா.31.27) , கற்பழிக்க(எண்ணா.31.17,18) பிற மத கோவில்களை இடித்து விக்ரகங்களை நொறுக்க (உபா.12.1-3); உத்தரவிடும் மத சகிப்புத் தன்மை இல்லாத, எரிச்சலுள்ள தேவனாகிய (யாத்.34.14) கர்த்தரை நல்லவர் என்று ருசித்துப் பார்க்க கூறுவது சரியா?
- கேடு என்று தெரிந்தும் புகை பிடிக்கும், மது அருந்தும் நம் மக்கள் பைபிளில் உள்ள ஆபாச கதைகளையும், தீவிரவாத கட்டளைகளையும் மட்டும் பின்பற்ற ஆரம்பித்தால் சமுதாயம் என்ன ஆகும்?
- உனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்| என்ற வசனத்தை பொய்யாக்கி கொலை செய்யப்பட்டும், விபத்து, வியாதியினால் அற்ப ஆயுளில் கர்த்தருக்குள் மரித்த பாக்கியவான்களான பாதிரிகளும் இயேசுவும் (பிற தெய்வங்களை இழிவுபடுத்திய) பாவத்திற்கு சம்பளமாக மரணத்தைப் பெற்றார்களா? அல்லது கர்த்தரால் கைவிடப்பட்டார்களா?
- நல்ல மேய்ப்பர்களின் ஆடுகளுக்கும் முடிவு மேய்ப்பரின் வயிறுதான். மந்தை பெருகினால் பலனடைவது மேய்ப்பர்கள்தான். செம்மறி ஆட்டுமந்தையாக இருப்பது பெருமையா?
- பூஜை, ஹோமம், பிரசாத பொருட்கள் தயாரிப்பு விற்பனை மூலம் சிறு வணிகர்கள் முதல் பூஜாரி வரை ஏராளமானவர்களை வாழவைக்கின்றன கோவில்கள். தசம பாக வருமானம் மூலம் சர்ச்சுகள் யாரை வாழவைக்கின்றன?
- ஆதாமின் 76வது தலைமுறையில் இயேசு பிறக்கிறார். (லூக்.3.23-38) அதன்படி கணக்கிட்டால் மனிதன் படைக்கப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் அறிவியல் ஆதாரங்களின்படி பல லட்சம் வருடங்களுக்கு முன் உயிரினங்கள் இருந்துள்ளன. அப்படியானால் பைபிள் கூறுவது கட்டுக்கதையா?
- மத்தேயுவும் லூக்காவும் குறிப்பிடும் தலைமுறை வரிசை வெவ்வேறாக இருக்கிறது. எது சரியானது?
- எவராலும் தங்களின் முன்னோா்களின் 5 தலைமுறைக்கு முந்தையவர்களின் பெயா்களைச் சொல்ல முடியாது. அப்படி இருக்கும்போது மத்தேயுவும், லூக்காவும் ஏசுவின் தலைமுறைகளை ஆதாம் வரை சொல்வது எப்படி கூறினாா்கள்?
- தாலி கட்டுதல், திருமணத்திற்கு நாள் பார்த்தல், புது வீட்டுக்கு தச்சு கழித்தல், காது குத்துதல், கோவிலுக்கு மொட்டை போடுதல், பூப்புனித நீராட்டு, வளைகாப்பு போன்ற இந்து மத அம்சங்களையும் பின்பற்றிக்கொண்டு பைபிளின்படியும் முழுமையாக நடக்காமல் இரண்டுங்கெட்டானாக இருக்கலாமா?
இதில் அடைப்புக்குறிக்குள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் பைபிள் வசனத்தை கூகுளில் உதாரணமாக Luke 3.23 என்று தேடினால் அந்த வசனத்தை உடன் படித்துக்கொள்ளலாம். அல்லது ஆன்லைனில் பைபிளை படிக்கலாம். இந்த பதிவு அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். உங்களின் சந்தேகங்களையும் வெளியிடுங்கள். பிட்நோட்டீஸ் போட விரும்புபவர்கள் கீழ்க்கண்ட நோட்டீசையோ அல்லது தங்களின் விருப்பப்படியோ வெளியிட்டு கிறிஸ்தவ மோசடி மதமாற்றத்தை முறியடியுங்கள்.
1)உங்கள் முதல் கேள்வி :-
பதிலளிநீக்குவானம், பூமியை படைக்கும்முன் கர்த்தர் எங்கிருந்தார்? உண்டாகட்டும் என்றாா். உண்டாகிவிட்டது. இப்படி வார்த்தையால் உலகை ஒரேநாளில் படைக்காமல் ஏன் 6 நாட்கள் எடுத்துக்கொண்டார்.?
நண்பா ! கடவுள் வானம் பூமியை படைக்கும் முன் எங்கிருந்தார் என்று சிந்திக்கும் முன் இந்த பேரண்டம் படைப்பதற்கு முன் கடவுளை தவிர எதுவும் அந்த வெற்றிடத்தில் இல்லை என்று நாம் உணர வேண்டும்.கடவுள் என்றென்றும் வாழ்ந்து வந்தார்.
இன்றும் அறிவியல் உலகம் ஒத்துக்கொள்ளும் இரண்டு உண்மை.
1 ) பிரபஞ்சம் ஒரு வெற்றிடத்தில் உள்ளது , அதை தாண்டி என்ன உள்ளது என்பது ஒரு குறிப்பிட்ட அறிவு வரையறை உடைய நம் மனிதர்களால் கண்டறிய முடியாது.
2) பூமி அந்தரத்தில் தொங்குகிறது. அது எந்த பொருளும் தாங்கி நிற்பதில்லை.
அதை கடவுள் படைத்ததை யோபு 26:7-ல் தத்ரூபமாக விளக்குகிறார்.
யோபு 26:7 வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்; காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.
இது கிட்டத்தட்ட கி.மு.1473-ல் எழுதப்பட்டது.
இதை எழுதி முடித்து கிட்ட தட்ட 3000 வருடங்களுக்குப் பின் கி.பி.1657-ல் ஐசக் நியூட்டன் பூமி அந்தரத்தில் தொங்குகிறது என்று சொன்னார்.
கடவுள் அன்று ஒளிவு மறைவில்லாமல் சொன்னதை மீண்டும் கண்டுபிக்க 3000 வருடங்கள் எடுத்தது.
மேலும் ,
கடவுள் எல்லாவற்றையும் உண்டாகட்டும் என்று சொன்ன உடனே உண்டாக வில்லை.
ஆதியாகமம் 1 : 1 -லிருந்து ஆதி 2 : 3 -வரை பதிவு செய்யப்பட்டுள்ள எல்லாம் படைப்பின் முன்னுரை ஆகும்.
அந்த முன்னுரைக்கு விரிவாக்கம் மீண்டும் ஆதி 2 : 4-ல் ஆரம்பிக்கிறத்தை கவனிக்கலாம்.
ஆதி 2 : 4
இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,
ஆம் உருவாக்கிய பொழுது என்ன நடந்தது என்பதை ஆதி 2 : 5 முதல் ஆதி 2 : 22 -வரை உள்ளது.
ஒருவேளை வெறும் வார்த்தையில் உண்டாகட்டும் என்று சொல்லி உண்டாக்கியிருந்தால் இந்த உலகில் நடக்கும் மாபெரும் பிரம்மாண்டமான இயற்க்கை சுழற்சியை நமக்காக இவ்வளவு துல்லியமாக படித்திருக்க முடியாது.
உதாரணமாக , ஒரு புல்லை பார்த்து ' முலைக்கட்டும் ' என்று சொல்லி படைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த புல் காலப்போக்கில் வாடிவிட்டால் , மீண்டும் மீண்டும் கடவுள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.ஆனால் கடவுள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்க வில்லை.
மாறாக எல்லாவற்றிற்கும் சொந்தமாக ஒரு இயற்கை சுழற்சியை உண்டுபண்ணி அது என்றென்றும் காலம் காலமாக இந்த உலகில் இருக்கும் படி படைத்தார்.
அதனால் ஒரு முன்னுரையை கவனியுங்கள் , ஆதி 1 : 11 -ல் செடி கொடிகள் படைக்கப்பட்டதை சொன்னார்.
விரிவாக்கத்தில் ஆதி 2 : 5 -ல் இயற்க்கை சுழற்சியை கடவுள் உருவாக்குவதை கவனிக்க முடிகிறது.
ஆதி 2 : 5
மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை; வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை; ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை; மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை.
ஆம் செடி முளைக்க மழை வேண்டும்.என்று நாம் நன்கு அறிவோம். ஏனென்றால் அது மழை பெய்தால்தான் முளைக்கும் படி படைக்கப் பட்டுள்ளது.
நீங்கள் கேட்ட மூன்றாம் கேள்விக்கும் பதில் இதுதான் , மனிதன் படைக்கப்பட்டது முன்னுரையில் சொல்லப்பட்டது. பின்பு அது விரிவாக 2-ம் அதிகாரத்தில் சொல்லப் பட்டது.
மேலும் உலகின் இந்த ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு இயற்கைச் சட்டத்திற்கு உட்பட்டு கடவுள் படைத்தார். யோசித்துப் பாருங்கள் இந்த மாபெரும் பிரபஞ்சம் இயங்கத் தேவையான எல்லா சட்டங்களையும் அற்புதமாய் வடிவமைக்க வெறும் ஒரு நாள் போதுமா ? சரி இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை படைத்து முடிக்க வெறும் 6 நாள் மட்டும் போதுமானதா ?
அதற்குப் பதில் சங்கீதம் 90 : 4 , 2 பேதுரு 3 : 8-ல் உள்ளது.
ஆக உங்கள் முதல் கேள்விக்குப் பதில் ,
1) கடவுள் என்றென்றும் வாழ்ந்துவந்தார்.
2)உண்டாகட்டும் என்று சொன்னவுடன் எதுவும் உண்டாகவில்லை.
3)அவர் ஆறு நாள் எடுத்துக்கொண்டதற்கான காரணம்....உங்களுக்கே தெரியும் பிரபஞ்சம் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத மிக சிக்கலான இயற்கைச் சுழற்சியை , ஆச்சரியமான ஒழுங்கான நேர்த்தியாக கொண்டுள்ளது.
மேலும் அந்த மாபெரும் பிரபஞ்சம் படைக்க பயன் படுத்தியதாக கூறப்படும் ஒரு நாள் , மனிதனுடைய நாளைப்போல் 24 மணி நேரம் அல்ல . அது 1000 வருடமாகவோ அதற்கு மேலோ இருந்திருக்கலாம்.
இதில் கேட்கப் பட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் பைபிளில் உள்ளது நண்பா ! நான் கொஞ்சம் கொஞ்சமாக விளக்குகிறேன்.
அறிவாளி நண்பா. ஒருநாள் என்பது என்ன? 10 செகன்ட்தான் ஒருநாளா? எல்லாகேள்விகளுக்கும் பதில் கூறுங்கள்பார்ப்போம்.ஆதியாகமத்தை எழுதிய அறிவாளி யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
நீக்கு2.உங்கள் இரண்டாம் கேள்வி :-
பதிலளிநீக்குஆவி ரூபமான வாா்த்தையால் உலகைப் படைத்த சர்வவல்லமையுடையவருக்கு ஏழாம்நாள் ஏன் ஓய்வுதேவைப்பட்டது? கொத்தனார் வேலையா பார்த்தார்?
பதில் :-
நான் முதலாம் பதிலில் கூறியபடி ஒருநாள் என்பது கடவுளுடைய பார்வையில் 24 மணிநேரம் கிடையாது.
அது 1000 வருடங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட கலப்பகுதியை குறிக்கலாம்.(சங் 93 : 4 , 2 பேது 3 : 8 )
ஆக ஏழாம் நாள் 24 மணிநேரம் இல்லை.
சரி கடவுளுடைய இந்த ஓய்வைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு மீண்டும் பைபிளை ஆராய்ச்சி செய்வதே ஒரு வழி.
ஆதி 1 : 5, 8, 13, 19, 23, 31 -இந்த வசனங்கள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை உண்டு ...
அதாவது எல்லா வசனத்திலும் ,
"சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது முதலாம் நாள் / இரண்டாம் நாள் / மூன்றாம் நாள் / நான்காம் நாள் / ஐந்தாம் நாள் அல்லது ஆறாம் நாள் முடிந்தது " என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் ஏழாம் நாளை பற்றிய பதிவை கவனியுங்கள்.
ஆதி 2 :2 கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
ஆம் இதில் ஆறுநாட்களும் முடிந்த மாதிரி,
அதாவது , " சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது ஏழாம் நாள் முடிவுற்றது " என்று எந்தப் பதிவும் இல்லை.
அப்படியென்றால் ஏழாம் நாள் முடிவுற வில்லையா ?
அந்த நாளில் கடவுள் தனது படைக்கும் தொழிலுக்கு மட்டும் ஓய்வை கொடுத்தார்.
மாறாக அந்த நாள் முடிவுக்கு வந்ததாக பைபிள் குறிப்பிட வில்லை.
ஆனால் கடவுள் அந்த ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி அதை புனிதப் படுத்தினார் என்று கவனிக்க முடிகிறது.
அதாவது அந்த ஏழாம் நாளில் தனது படைக்கும் தொழிலுக்கு ஓய்வை கொடுத்துவிட்டு வேறொரு விசேஷமான நோக்கத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அது என்ன நோக்கம் ?
சரி அதற்கு முன் மற்ற நாளெல்லாம் எப்படி முடிவுக்கு வந்தது என்று கவனியுங்கள்.
ஆதி 1 : 1 - 5 -ல் அவர் நினைத்தபடி எல்லாம் நடந்து முடிந்தது. அதனால் அந்த குறிப்பிட்ட காலப்பகுதிக்கு கடவுள் முடிவை கொண்டுவந்தார்.
இப்படி ஒவ்வொரு படைப்பை படைக்கும்போதும் இலக்கு வைத்து படைத்த கடவுளுக்கு அதன் நோக்கம் சரியாக நிறைவேறி முடிந்த பின்பு " அவை நன்றாக உள்ளதா " என்பதை உறுதி செய்த பின்னரே அந்த ஒவ்வொரு நாளும் முடிவுக்கு வந்தன.
அதேபோல் , ஆறாம் நாளில் மனிதனை படைக்கும் போதுகூட ஒரு நோக்கத்தோடு படைத்தார்.
அது:-
ஆதி 1 :28 கடவுள் அவர்களுக்கு(மனிதனுக்கும் , மனிஷிக்கும்) ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்;(அதாவது பண்படுத்தி பராமரிக்க சொன்னார்) கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.
ஆனால் இந்த நோக்கம் நிறைவேற வில்லை.அதற்கு காரணம் ஆதாம் ஏவாளிடம் சாத்தான் செய்த கலகம் தான்.
இந்த நோக்கம் நிறைவேறினால்தான் , இந்த ஏழாம் நாள் நிறைவுக்கு வரும்.
பதில் :-
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, ஏழாம் நாளை ஒரு விசேஷ நோக்கத்திற்காக யெகோவா தேர்ந்தெடுத்தார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். “கடவுள் ஏழாம் நாளை ஆசீர்வதிக்கத் தொடங்கி அதைப் புனிதமாக்கினார்” என்று ஆதியாகமம் 2:3 சொல்கிறது. யெகோவா ஏன் அந்நாளைப் புனிதமாக்கினார்? ஏனென்றால், பூமிக்குரிய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க அந்நாளை அவர் தேர்ந்தெடுத்தார். கீழ்ப்படிதலுள்ள ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியில் வாழ்ந்து அதிலுள்ள எல்லாவற்றையும் பராமரிக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. (ஆதி. 1:28) அந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் யெகோவா தேவனும்(பைபிளில் கடவுளுடைய பெயர்) ‘ஓய்வுநாளுக்கு எஜமானரான’ இயேசு கிறிஸ்துவும் ‘இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார்கள்.’ (மத். 12:8) ஆகவே, யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கும்வரை அவரது ஓய்வுநாள் நீடிக்கும்; ஆம், கிறிஸ்துவின் ஆயிரமாண்டு ஆட்சியின் முடிவுவரை அது நீடிக்கும்.
முதல்ல ஆதாம் ஏவாள் கட்டுக்கதைய எழுதினது யாரு? அதை எப்படி உண்மைன்னு நம்பறீங்க. இந்து மதத்தில் ஆன்மாவுக்கு அழிவில்லை. பதி,பசு,பாசம் மூன்றுக்கும் ஆதி அந்தம் கிடையாது என்கிறது. பைபிள் கட்டுக்கதையின்படி உலகம் படைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று கணக்கிட்டு பாருங்கள். பைபிள் முழுக்க உள்ள முட்டாள்தனத்தை இந்த லிங்க்கில் படித்து பாருங்கள். www.evilbible.com
பதிலளிநீக்குதம்பி இப்போ ஆதம் ஏவாள் கதை கட்டுக்கதைனு நீங்க நெனைச்சா நீங்க நம்புற மனிதன் உருவாக்க தத்துவம் என்ன? பரிணாமம் கோட்பாடா? அதுல குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் னு சொல்றீங்க அந்த குரங்குகளுக்கு உறவுகளில் ஒதுங்கு முறை இருந்துச்சா? உங்க முன்னோர்கள் எப்படி யார் கூட வேணும்னாலும் மேட்டர் போட்டுக்கிட்டாங்க னு நீங்க ஒத்துக்குவீங்களா
நீக்குஒரு காற்று புகாத பாட்டிலில் சிறிது தானியங்கள் அல்லது பயறுகளை போட்டு அடைத்து வைத்து விட்டால் சில மாதங்கள் கழித்து அவற்றில் புழுக்கள் வண்டுகள் வந்திருப்பதை காணலாம். அவை எப்படி வந்தன? அது போல்தான் இறைவன் உலக உயிர்களைப் படைததுள்ளார். அவருக்கும் அவரால் படைக்கப்பட்டவற்றிற்கும ஆதி அந்தம் கிடையாது.
நீக்கு