பின்பற்றுபவர்கள்

திங்கள், 12 அக்டோபர், 2015

தாவீது என்னும் மகான்.



திங்கள், 3 அக்டோபர், 2011  

கிறிஸ்தவர்கள் தங்களின் ஹீரோவாக, மகானாக கோலியாத்-தை கவணில் கல் வைத்து அடித்து கொன்ற தாவீதை நினைத்து அவன் பெயரை வைத்துக் கொள்பவர்கள் ஏராளம். தாவீதா? அந்த பெயரில் எந்த கிறிஸ்தவரையும் கேள்விப்பட்டதில்லையே என குழம்பாதீர்கள். டேவிட்டை தான் தமிழில் தாவீது என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். உண்மையில் கிறிஸ்தவர்களின் ஞானம் புல்லரிக்க வைக்கிறது. ஜீசஸ் என்ற பெயரை இயேசு என்றும், ஜூடு என்ற பெயரை வளனார் என்றும், தாமஸ் என்பதை தோமா என்றும் ஜான் என்ற பெயரை யோவான் என்றும் தங்கள் இஷ்டத்திற்கு மொழி பெயர்த்து தங்கள் தமிழ்ப்பற்றையும், தமிழ் புலமையையும் காட்டியுள்ளனர். ஒரு வேளை பல மொழிகள் பேசும் தூய ஆவி மொழி பெயர்த்திருக்குமோ என்னவோ? ஆனால் முஸ்லீம்களுக்கு இந்தத் திறமை இல்லை. அவர்கள் அரபு பெயர்களை மொழி பெயர்க்காமல் விட்டு விட்டார்கள்.

 இப்போது தாவீது கதைக்கு வருவோம். சம்பவங்களை சுருக்கமாக கூறுகிறேன். 2.சாமு.2-1 -ல் கர்த்தருடன் நேரில் பேசுகிறான். தாவீது கர்த்தரை நோக்கி நான் யுதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்போஎன்றார். எவ்விடத்திற்கு போகலாம் என்று கேட்டதற்கு எப்ரோனுக்கு போ என்றார். (சாமுவேல் -2 11-2 முதல்) ஒரு நாள் சாயங்காலம் தாவீது அரண்மனை உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தபோது குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டான். அவள் மிக அழகாக இருந்தாள். அவள் யார் என்று விசாரித்தான். அவள் ஏத்தியனான உரியாவின் மனைவி என்றார்கள். அவளை அழைத்துவரச் சொன்னான். அவர்கள் அழைத்து வந்தார்கள். அவளுடன் சயனித்தான் (உறவு கொண்டான்) அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்தப்படுத்திக்கொண்டு அவள் வீட்டுக்கு போனாள். தான் கர்ப்பவதியாகி (தாவீது மூலம்) விட்டதாக ஆள் அனுப்பி தெரிவித்தாள். தாவீது ஆள் அனுப்பி உரியாவை அழைத்து வரச் செய்தான். உரியாவிடம்நீ பாதசுத்தி செய்து கொண்டு உன் வீட்டுக்கு போஎன்றான். அரண்மனையிலிருந்து நிறைய பதார்த்தங்களையும் அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். ஆனால் உரியா வீட்டு்க்கு போகாமல் அரண்மனை வாயிலில் வீரர்களுடன் தங்கிக் கொண்டான். இவ்விபரம் தாவீதுக்கு சொல்லப்பட்டது. தாவீது மீண்டும் உரியாவை அழைத்து அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து படைத்தளபதி யோவாபிடம் கொடுக்குமாறு சொன்னான். அக்கடிதத்தில் மும்முரமாய் நடக்கிற போர் முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனை விட்டு பி்ன்வாங்குங்கள்என்று எழுதியிருந்தான். அவ்வாறே யோவாப் அவனை யுத்த களத்தில் நிறுத்தி உரியா யுத்த களத்தில் செத்தான். தன் புருஷன் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் அவன் மனைவி தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் முடிந்த பின்பு தாவீது அவளை அரண்மனைக்கு வரவழைத்து மனைவியாக்கிக் கொண்டான். பத்சேபாள் ஆண் குழந்தையைப் பெற்றாள்.  

தாவீது செய்த இக்காரியம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததாக இருந்தது. அவர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் வந்துஒரு பட்டணத்தில் ஒரு ஐஸ்வரியவானும் தரித்திரனும் இருந்தார்கள். ஐஸ்வரியவானிடம் ஏராளமான ஆடு, மாடுகள் இருந்தன. தரித்திரனிடத்தில் ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் இருந்தது. அந்த ஆட்டுக்குட்டியை தன் மகளைப் போல் வளர்த்து வந்தான். ஒரு வழிப்போக்கன் ஐஸ்வரியவானின் வீட்டுக்கு வர அவன் தன் ஆட்டு மந்தைகளிலிருந்து ஒரு ஆட்டை பிடிக்காமல் தரித்திரனிடமிருந்த ஆட்டு்குட்டியை பிடித்து சமைத்துக் கொடுத்தான்என்றான். உடனே தாவீதுஇந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்திற்கு பாத்திரன்என்றான். அதற்கு நாத்தான்அது நீதான். உனக்கு கர்த்தர் ஏராளமான மனைவிகளையும், செல்வத்தையும் கொடுத்திருக்கிறார். போதாவிட்டால் இன்னும் தந்திருப்பார். ஆனால் நீ கர்த்தருக்கு விரோதமான காரியத்தை செய்து விட்டாய்

 அதனால் கர்த்தர் உனக்கு சொல்வது என்னவென்றால், ” உன் ஸ்திரீகளை அடுத்தவனுக்கு கொடுப்பேன். அவன் இஸ்ரவேலர்களுக்கு முன்பாகவும், சுரியனுக்கு முன்பாகவும் உன் ஸ்திரீகளுடன் சயனிப்பான். நீ ஒளிப்பிடத்திலே செய்தாய். அவன் எல்லோருக்கும் முன்பாக செய்வான்என்றார். உடனே தாவீது நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்றான். நாத்தான்உன் பாவம் மன்னிக்கப்பட்டது. ஆனால் நீ செய்த பாவத்தின் அடையாளமான குழந்தை சாகக்கடவதுஎன்றார். கர்த்தர் அந்த குழந்தையை அடித்தார். அது வியாதிப்பட்டு கேவலமாக இருந்தது. தாவீது அந்தக் குழந்தை பிழைக்கும் பொருட்டு பிரார்த்தனை செய்தும் உண்ணாமலும், குளிக்காமலும் தரையில் விழுந்து கிடந்தான். மூப்பர்கள் எழுப்பியும் எழவில்லை. அந்தக் குழந்தை ஏழாம் நாள் இறந்தது

குழந்தை இறந்ததை எப்படி சொல்வது. தாவீது தாங்கிக் கொள்வானோ? என்று வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசுவதை புரிந்து கொண்ட தாவீது எழுந்து குளித்து, ஆடைஅணிந்து உணவு உட்கொண்டான். அவர்கள் ஏன் என்று விசாரித்தபோது குழந்தை பிழைக்க வேண்டும் என்பதற்காக என்னை வருத்திக்கொண்டு இருந்தேன் இறந்த பின் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதை திரும்பி வரப் பண்ணக்கூடுமோ? என்றான். பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடததில் போய், அவளோடே சயனித்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அதற்கு சாலமோன் என்று பெயரிட்டனர். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். இவர்தான் சாலமோன் ராஜா. இவர்தான் இரண்டு பேர் சொந்தம் கொண்டாடிய குழந்தையை இரண்டாக வெட்டி பங்கிட்டு கொடுக்கக் கூறி உண்மையான தாயைக் கண்டுபிடித்த நியாயவான். இவருக்கு ஆயிரம் பெண்டாட்டிகள். 999 வப்பாட்டிகள். இந்தக் கதையை ஆராய்ந்து பாருங்கள். தாவீதுடன் நேருக்கு நேர் பேசும் கர்த்தர் தாவீதை நேரடியாக அறிவுரை கூறாமல் நாத்தானை அனுப்புகிறார். அவன் உரியாவின் மனைவியுடன் உறவு வைத்துக்கொண்டபோதே தண்டிக்காமல் குழந்தை பிறந்தவுடன் தான் அவன் செய்தது பொல்லாப்பானதாக கூறுகிறார். சாதாரணமான குற்றமான? ஓய்வு நாளில் வேலை செய்தவனையும், உடன்படிக்கை பெட்டியை தாங்கி பிடித்தவனையும் உடனடியாக கொன்ற கர்த்தர் தாவீதை மன்னித்துவிட்டு குழந்தையை அடித்து சாகடிக்கிறார். தாவீது செய்த பாவத்திற்கு குழந்தைக்கு தண்டனையா? நமக்கு சாதாரணமான குற்றங்கள் எல்லாம் கர்த்தருக்கு கிரிமினல் குற்றங்கள். நாம் கிரிமினல் குற்றங்களாக நினைப்பது எல்லாம் கர்த்தருக்கு சாதாரணமானவை போலும். அதனால் தான் சாதாரண குற்றங்களுக்கு உடனடி மரணதண்டனையும், கற்பழிப்பு கொலை குற்றங்களுக்கு பாவ மன்னிப்பும் வழங்குகிறார் போலும். அதனால் தான் நம் பாதிரிகளும் கற்பழிப்பு கொலை குற்றங்களை தாராளமாக செய்கிறார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக