பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

மகான் யோகிராம்சுரத்குமார்


12 ஆகஸ்ட், 2011 

மிகச் சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த மகான்களில் சாய்பாபாவைப் போல பிரசித்தி பெற்ற மகான் ஸ்ரீயோகி ராம் சுரத்குமார். விசிறிச் சாமியார் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். விசிறிச் சாமியாருக்கு லட்சக்கணக்கில் பக்தகோடி விசிறிகள்

 கையில் ஒரு விசிறியை எப்போதும் வைத்துக்கொண்டு அவ்வப்போது விசிறிக்கொண்டே இருப்பார். கொட்டாங்கச்சி (சிரட்டை) யில் உணவு உண்பார். மிக எளிமையாக வாழ்ந்தவர். ஆணவம் என்பது சிறிதும் இல்லாதவர். பெரும்பாலானவர்கள் தங்களைத் தாங்களே உயர்வாக எண்ணுவது உண்டு. இவரோ தன்னை மிகத் தாழ்த்தி தன்னை பிச்சைக்காரன் என்றே சொல்லிக் கொள்வார். நான்தான் இறுதித்தூதன். நான் சொன்னவற்றை ஏற்காவிட்டால் நரகம் என்று எவரையும் பயமுறுத்தவில்லை. என் நண்பன் ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். சற்று வசதி படைத்தவன். ஆனால் அவனின் மனைவியாக வந்தவர் யோகிராம் சுரத்குமாரின் விசிறி. திருமணமான புதிதில் இருவரும் காரில் வெளியுர் சென்றனர். நடுவழியில் கார் நின்று விட்டது. இவர் காரை சரி செய்ய முயன்றார். என்ன செய்தும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. இப்போது போல் செல்போன் வசதி எல்லாம் அப்போது இல்லை. என்ன செய்வது என்று திகைத்தவர் தன் மனைவியிடம்என்னவோ சொல்வாயே? சுரத்குமாரா? சரத்குமாரா? அவரைக் கூப்பிட்டு வண்டியை ஸ்டார்ட் ஆக வை பார்ப்போம்என்று கூறினார். அவர் மனைவியோகிராம் சுரத்குமார் பெயரைச் சொல்லி ஸ்டார்ட் செய்யுங்கள் வண்டி ஸ்டார்ட் ஆகும்என்று கூற இவரும் நம்பிக்கையில்லாமல் யோகிராம் பெயரைச் சொல்லி ஸ்டார்ட் செய்ய வண்டி ஸடார்ட் ஆகி விட்டது. அது முதல் இவரும் யோகிராம் சுரத்குமாரின் விசிறி ஆகிவிட்டார். இவரால் பலன் அடைந்தவர்கள் ஏராளம். குருமகராஜின் அருள்மொழி சுவாமி ராமதாசின் திருவடியின் கீழிலிருந்து இந்தப் பிச்சைக்காரன் ராம நாமத்தைக் கற்றுக்கொண்டான். ராம நாமத்தை மறக்க வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் இந்தப் பிச்சைக்காரன் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொள்கிறான். நீங்கள் என்ன செய்தாலும், எங்கே இருந்தாலும், ஆஞ்சனேய - மாருதியைப் போல் இராமனையே நினைத்து உலகில் உங்கள் செயல்களைச் செய்யுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் நாம் பிரச்னைகளை எதிர்படுகிறோம். - இன்று ஒன்று, நாளை மற்றொன்று, அடுத்த நாள் மற்றொன்று. தெய்வத்தின் நாமத்தை நினையாவிட்டால் இப்பிரச்சனைகளை எதிர்படுவதன் காரணமாக நாம் அடிக்கடி நிராசையும், ஏமாற்றமும், மனச்சோர்வும் அடைகிறோம். எனவே, ராமா என்னும் தெய்வீக நாமத்தை மறவாதீர் என்று இந்தப் பிச்சைக்காரன் உங்களைப் பணிந்து வேண்டுகிறான். சிலர் சிவ நாமத்தை நினைக்க விரும்புவார்கள். இதுவும் நன்றே. சிலர் கணபதியின் நாமத்தை நினைக்க விரும்புவார்கள். இதுவும் நன்றே. நீங்கள் எந்த நாமத்தையோ, ரூபத்தையோ விரும்பினாலும் இந்தப் பிச்சைக்காரன் கேட்பதைக் கொடுங்கள். தெய்வத்தை ஒருபோதும் மறவாதிருங்கள். உலகில் வாழும் வரை, பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நாம் ஆண்டவனின் நாமத்தை நினைத்தால் உள்ளத்தில் உறுதியோடு இருப்போம். சில நேரங்களில் சில பிரச்சினைகளால் , நாம் சிறிது பாதிக்கப்படலாம். அப்பொழுதும் கூட, தெய்வ நம்பிக்கையுடைய ஒருவரை விட , ராம நாமத்தை நினைவில் வைத்திருப்பவரை விட, நமக்குத் தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டால் அந்தப் பிரச்சினைகளால் நமக்கு ஏற்படும் வேதனையின் அளவு அதிகமாக இருக்கும்.  

இந்தப் பிச்சைக்காரன் எப்போதும் யாசிக்கின்றான் - உணவுக்காக, ஆடைகளுக்காக, தன் மேல் பாடல்கள் உருவாக்க, தனக்காக வீடு கட்டிக் கொடுக்க, வீடு வாங்கி அளிக்க, தனக்கு சிறு குடிலுக்காக, இது , அது ன்று பல பொருள்கள். இதையும் உங்களிடம் இப்பிச்சைக்காரன் யாசிக்கிறான். நீங்கள் இந்தப் பிச்சைக்காரன் யாசித்ததை எல்லாம் எப்போதும் கொடுத்து வருகிறீர்கள். எனவே இறைவன் திருநாமத்தை மறவாதீர்கள் என்று இந்தப் பிச்சைக்காரன் யாசிக்கிறான். உலகம் முழுவதும் எல்லோர்க்கும் இந்தத் தெய்வீகத் திருநாமம் எப்பொழுதும் பெரும் துணையாக விளங்கியிருக்கிறது. நீங்கள் கபீர், துளசி, சுர்தாசர்...... அப்பர் சுவாமிகள், மாணிக்க வாசக சுவாமிகள் ஆகியோரின் பாடல்களைப் படிக்கிறீர்கள். அவர்கள் எவ்வாறு நமச்சிவாயத்தை வலியுறுத்தினார்கள் என்று அறிகிறீர்கள். அதை மறவாதீர்கள். அதுவே உங்கள் இதயம் - அதுவே உங்கள் ஆன்மா - ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ராமன், சிவன், கிருஷ்ணன், எந்த நாமத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் ஒன்றே. நீங்கள் விரும்பும் நாமத்தோடு, ரூபத்தோடு இறைவனை நினைத்திருங்கள்

 பெரும் மழை பெய்யும் பொழுதும் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு, ஆலையிலும், வயல் வெளியிலும், சந்தைக் கடையிலும் , நாம் நம் வேலைகளைச் செய்கிறோம். மேலும் மேலும் செய்கிறோம். இது போலவே பல பிரச்சினைகள் நம்மைச் சுழ்ந்து கொள்கி்ன்றன. பலத்த மழை பெய்யும் போது உதவும் குடையைப் போன்றது ஆண்டவனின் திருநாமம். இத்திருநாமத்தை பற்றிக் கொண்டே உலகில் உங்கள் பணிகளைச் செய்து கொண்டே இருங்கள்.  

இந்தப் பிச்சைக்காரன் உங்களிடம் பிச்சை கேட்கிறான். உங்களிடம் யாசித்ததை எல்லாம் இவன் அடைந்திருக்கிறான். எனவேஆண்டவன் திருநாமத்தை மறவாதீர்கள்என்று இவன் வேண்டும் பொழுது, உங்களில் ஒருவரேனும் மறுக்க மாட்டீர்கள் எனக் கருதுகின்றான். இங்கே வந்திருப்போர் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று இந்தப் பிச்சைக்காரன் தன் தந்தையிடம் வேண்டிக் கொள்கிறான். என் தெயவம் ராமன் உங்களை ஆசீர்வதிக்கிறான். என் தந்தை உங்களை ஆசீர்வதிக்கிறார். அருணாசலேஸ்வரர் உங்களை ஆசீர்வதிக்கிறார். அது எந்த நாமம் ஆயினும் சரி. அது பற்றிக் கவலை இல்லை. உங்கள் அனைவருக்கும் என் தந்தையின் எல்லா ஆசீர்வாதங்களும்!. நல்லது. அது தான் முடிவு. அதுதான் எல்லாம்.

1 கருத்து: