9 ஆகஸ்ட், 2011
பாகிஸ்தானில் மத்திய பஞ்சாப் மாகாணத்தில் புனிதமான ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உணவு உண்டதற்காக 25 பேர் கைது செய்து 72 மணி நேரம் சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவிலும் ஒரு முஸ்லிம் அல்லாதவர் உட்பட நான்கு அரசு அலுவலர்கள் நோன்பிருக்காததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பொது இடங்களில் புகை பிடிப்பது, உணவு உண்பது, குடிப்பது ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. பொது இடங்களில் உணவு உண்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய தனி குழுவை அமைத்துள்ளது.
முஸ்லீம் சகோதரர்களே இது நியாயமா என்று நீங்களே சொல்லுங்கள். சாப்பிடுவது குற்றமா? நீங்கள் விரமிருப்பதற்காக மற்றவர்களும் சாப்பிடக்கூடாது என்பது எந்த விதத்தில் சரி. தான் பட்டினியாக இருந்தாலும் மற்றவர்களுக்கு உணவளித்து உபசரி்ப்பது தான் மனித பண்பு. இந்து மதத்தைப் பொருத்தவரை விரதமிருப்பது, விரதமிருக்காமல் இருப்பது அவரவர் விருப்பம். நான் விரதமிருக்கிறேன் என்பதற்காக என் குடும்பத்தினரை பட்டினியாக இருக்க சொல்வதை விட பாவம் வேறு எதுவுமில்லை.
ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உண்ணக்கூடாது என்றால் ஒட்டுமொத்தமாக ஓட்டல்களை மூடிவிடச் சொல்லிவிடலாமே. ஏன் அங்கு சாப்பிடுகிறவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்? வாழ்நாளிலேயே உண்ணாவிரதம் இருந்திராத இந்துக்கள் பலர் இருக்கின்றனர். இந்து தெய்வங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி விரதம் இருக்க சொல்லவில்லை.
இந்தக் கட்டளை மனித நேயமுள்ள செயலாகத் தெரியவில்லை. இங்குள்ள மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் முன்னேற்ற கழகம் போன்ற அமைப்புகள் பாகிஸ்தானின் மனித நேயமற்ற உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திக் காட்டுவார்களா? உண்மையில் அல்லா கருணையாளன்தான். ரமலான் மாதத்தில் நோன்பு நேரத்தில் சாப்பிடுகிறவர்களின் கழுத்தை அறுக்க சொல்லவில்லை. இந்துக்கள் எதற்கும் ரமலான் நோன்பிருந்து பழகிக் கொள்வது நல்லது. அன்னை சோனியாவின் காங்கிரஸ் ஆதரவில் வருங்காலத்தில் ஷரியா சட்டம் அமல் படுத்தப்படலாம். அதற்கு இப்போதே தயார் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக