பின்பற்றுபவர்கள்

சனி, 10 அக்டோபர், 2015

ஜொராவர்சிங் , பதே சிங் தெரியுமா?



இவர்களை பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்காது. இவர்களைப் பற்றி வரலாற்று பாடபுத்தகத்தில் பாடங்கள் ஏதும் இல்லை. சுதந்திரம் அடைந்தும் நம் கையாலாகாத காங்கிரஸ் உண்மையான தேசபக்தர்களின் சரித்திரங்களை பாடதிட்டத்தில் சேர்க்காமல் நம்மை அடக்கி ஆண்ட வெள்ளையனுக்கு அதிக மரியாதை கொடுத்து கர்சன்பிரபு, ரிப்பன்பிரபு என்று பிரபு அடைமொழி கொடுத்து பாடதிட்டத்தில் வைத்துள்ளது. முஸ்லீம் கொடுங்கோலர்களை பெரிய சாதனையாளர்கள் போல் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. ஆனால் யாருடைய வரலாறு தேசபக்தியை தேசஉணர்வைத் தூண்டுமோ அவர்களைப் பற்றிய வரலாறு இல்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.  

இவர்கள் இருவரும் சீக்கிய குரு கோவிந்த சிம்மனின் மகன்கள். ஜொராவர்சிங்கின் வயது 14 பதேசிங்கின் வயது 6. முஸ்லீமாக மதம் மாற மறுத்ததற்காக வாசிர்கான் என்ற கவர்னர் 26.12.1705 அன்று இருவரையும் உயிருடன் கல்லறை வைத்துக் கட்டினான். இறுதிவரை மதம் மாறினால் உயிர் பிழைக்கலாம் என்று வாய்ப்பளித்தும் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட மாபெரும் வீரர்கள். இருவருக்கும் கல்லறை கட்டிக்கொண்டிருக்கும்போது தம்பியின் கழுத்துக்கு செங்கல் உயர்ந்து விட்டது. இப்போது அண்ணன் ஜொராவர் கண்கலங்கினான். அண்ணா உனக்கு உயிர்மேல் ஆசை வந்துவிட்டதா என்று தம்பி கேட்கிறான். ஜொராவர் கூறுகிறான். என்னை விட சிறியவனான நீ எனக்கு முன் உயிர்துறக்கிறாயே என்றுதான் கண்கலங்கினேன் 

உலக வரலாற்றிலேயே மிக இளம் வயது தியாகிகள் இவர்கள்தான். சீக்கியர்கள் இவர்களுக்கு ஒரு குருத்வாரா கட்டியுள்ளனர். ஐந்து ஆண்டுகள் கழித்து பாண்டாசிங் பகதூர் சீக்கிய வீரர் படையுடன் போரில் வாசிர்கானை கொன்று பழி தீர்த்தார்.  

ஒரு ஹிந்து குடும்பம். எம்மதமும் சம்மதம் என்று நினைப்பவர்கள். அவர்கள் தங்கள் பையனை கிறிஸ்தவ சர்ச்சில் நடத்தப்படும் VBS (vocational Bible study) வகுப்பிற்கு வருடந்தோறும் அனுப்பி வந்திருக்கிறார்கள். அவன் சேவாபாரதி அமைப்பினரால் நடத்தப்படும் இந்து சமய வகுப்பிற்கு சென்று வந்திருக்கிறான். அந்த வகுப்பில் ஜொராவர் சிங் , பதேசிங் வீர வரலாற்றை உணர்ச்சிபுர்வமாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். அதைக் கேட்டவுடன் இனிமேல் கிறிஸ்தவ சர்ச்சுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்து விட்டான். கிறிஸ்தவ பைபிள் வகுப்பு நடத்தும் பெண்மணி வழக்கம் போல் சர்ச்சுக்கு அழைத்துச் செல்ல வந்தபோது வரமாட்டேன் என்று மறுத்திருக்கிறான். அந்தப் பெண்மணி மீண்டும் மீண்டும் வற்புறுத்த அவன் பெற்றோரும் அந்தப் பெண்மணியுடன் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அவன் அந்தப் பெண்மணியிடம் சற்று பொறுங்கள். இதோ வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து பைபிளையும் தீப்பெட்டியையும் எடுத்து வந்து அந்தப் பெண்மணியின் முன்னாலேயே பைபிளைக் கொழுத்திவிட்டான். ”இனிமேலும் நான் வரவேண்டுமா?” என்று கேட்க அந்தப்பெண்மணி நொந்துபோய் போனவள் அதன் பின் அவனை அழைக்க வரவேயில்லை.  

இந்த இளம் சிறுவர்களிடம் உள்ள மனதிடம் கூட கிறிஸ்தவ கடவுள் ஏசுவுக்கு இல்லை. மரணத்தைக் கண்டவுடன் கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறி அழுகிறார். அவர் மனிதராக பிறந்தாராம். அதனால் மனிதரைப் போல் அழுதாராம். மூன்றாம் நாள் இந்த வீடு கட்டப்படும் என்று தான் உயிர்த்தெழப்போவதையும் முன்கூட்டியே கூறினாராம். 3ம் நாள் உயிர்த்தெழப் போகிறவர் மரணத்தைக் கண்டு ஏன் கதறி அழவேண்டும்?  முடிவெட்டினால் மீண்டும் முளைத்து விடுவது போல் கையை வெட்டினால் மீண்டும் முளைக்கும் என்றால் கையை வெட்ட பயப்படுவீர்களா?. ஆனால் தான் மீண்டும் உயிருடன் வரப்போவது தெரிந்தும் ஏசு கதறி அழுகிறார். மரணபயம் இதய பலவீனமான கோழைகளுக்குத்தான் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக