திங்கள், 29 ஆகஸ்ட், 2011
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கச் சொல்லும் (சங்கீதம்.34.8) இவ்வசனத்தை சுவர்கள் தோறும் பார்த்திருப்பீர்கள். நானும் பைபிளைப் படித்து அவரை ருசித்துப் பார்த்தேன். மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால் ஊசா தேவனுடைய (உடன்படிக்கை) பெட்டியை கைநீட்டி பிடித்தான். கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபம் மூண்டது. அவனை அடித்தார். அவன் பெட்டியண்டையில் செத்தான்.(சாமு.11 6-7) அதாவது இஸ்ரவேலர்களுடன் கர்த்தர் ஏற்படுத்திய உடன்படிக்கை ( பிற தெய்வங்களை வணங்கக்கூடாது, சிலை வணக்கம் கூடாது etc) யைக் கொண்ட பெட்டியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததற்காக அவன் வேற்று இனம் என்பதனால் அவன் மீது கோபம் வந்து கர்த்தரே கொன்றுவிடுகிறார். அவன் செய்தது கிரிமினல் குற்றமா?
எலிசா (தீர்க்கதரிசி) பெத்தேலுக்கு நடந்து போகும் வழியில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து அவனைப் பார்த்து, ”மொட்டைத் தலையா ஏறிப்போ” என்று சொல்லி நிந்தித்தார்கள். அப்போது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான். உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து , அவர்களில் 42 பிள்ளைகளைப் பீறிப்போட்டன. (2 ராஜா 2.23-24) கேலி செய்ததற்காக கரடிகளை அனுப்பி குழந்தைகளைக் கொல்கிறார் கர்த்தர்.
இஸ்ரவேல் புத்திரர்கள் வனாந்திரத்தில் இருக்கையில் ஓய்வு நாளில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்தும் சபையோர் அனைவரிடத்துக்கும் கொண்டு வந்தார்கள். அவனுக்கு செய்ய வேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால் அவனைக் காவலில் வைத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி ” அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலை செய்யப்பட வேண்டும். சபையோர் எல்லோரும் அவனைப் பாளையத்திற்கு புறம்பே கல்லெறியக்கடவர்கள்” என்றார். அப்பொழுது சபையார் எல்லோரும் கர்த்தர் மோசேக்கு கட்டளை யிட்டபடியே அவனைப் பாளையத்திற்கு புறம்பே கொண்டு போய்க் கல்லெறிந்தார்கள். அவன் செத்தான். (எண்ணாகமம்.15 32-36 )
ஓய்வு நாளில் வேலை செய்வது கிரிமினல் குற்றமா? அதற்கு மரண தண்டனையா? அப்படியானால் மேலே கூறப்பட்டுள்ள கர்த்தர் நல்லவர் என்பதை எப்படி ருசி பார்ப்பது. யாராவது பாதிரியார்களிடம் கேட்டு ருசியுங்கள். மேலே உள்ள வசனத்தை ஆராய்ந்த போது அவ்வசனம் அயோக்கியன் தாவீது சொன்ன வார்த்தை.
ஒரு அயோக்கியன் மற்றோரு அயோக்கியனைத்தானே நல்லவன் என்று சொல்லுவான். நல்லவர்கள் அயோக்கியர்களிடம் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று விலகி விடுவார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் அயோக்கியன் தாவீதை ஒரு மாபெரும் மனிதனாக கதை விடுவர். ஒரு கஞ்சா ஆசாமியை காலணா இல்லாமல் கல்கத்தாவில் விட்டாலும் அங்கே ஒரு கஞ்சா ஆசாமியை நட்பாக்கி கஞ்சா அடித்துவிடுவான். இதைத்தான் இனம் இனத்தோடு என்பார்கள். அதேபோல் தான் தாவீதும் கர்த்தரும். மோசே கூட்டத்தாருடன் கர்த்தர் செய்த திருவிளையாடல்களை அவ்வப்போது வெளியிடுகிறேன்.கருத்தர் செய்த அக்கிரமங்களை எல்லாம் நியாயப்படுத்தி கிறிஸ்தவர்கள் பேசுகின்றனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக