பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 செப்டம்பர், 2023

அங்கிகள், லுங்கிகளின் சில கேள்விகளுக்கு பதிலடி

      இந்து மத தத்துவங்கள் புரியாத கூமுட்டைகள் இந்து மதத்தையும் கடவுள்களையும் வாய்க்கு வந்தபடி குறைகூறிவருகின்றனர். மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளுக்கும் உறவுகளைக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  சிவனின் மகன் முருகன். துணைவி சக்தி முருகனின் அண்ணன் விநாயகர், தம்பி ஐயப்பன், தாய் மாமன் நாராயணன் என வைத்துக்கொண்டு உறவை சொல்லி அழைப்பது என உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். மகான்கள் தங்கள் பாடல்களில் சிவனின் துணைவியே, பார்வதியின் கணவனே, வள்ளியின் கணவனே, பெருமாளின் தங்கையே, முருகனின் மாமனே என உறவை கூறி பாடி ஆனந்தப்பட்டு உள்ளனர்.

           இறைவன் ஏகனாக இருக்கிறான். அனேகனாக இருக்கிறான். ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் உருவம் உடையவனாகவும், உருவம் அற்றவனாகவும், அருவுருவாகவும் இருக்கிறான். பனிக்கட்டிக்கு உருவம் உண்டு. ஆனால் தண்ணீராக மாறினால் பார்க்க முடியும் குறிப்பிட்ட வடிவம் கிடையாது. அதே நீர் ஆவியானால் உருவம் கிடையாது. அது போல் கடவுள் உருவத்துடனும் இருக்கிறார். உருவம் இல்லாமலும் இருக்கிறார். அருஉருவாகவும் இருக்கிறார். எந்த வடிவில் வழிபட்டாலும் ஒரே இறைவனைதான் வணங்குகிறோம். அவரவர் மனநிலைக்கேற்றபடி அவர்கள் விரும்பிய தெய்வத்தை வணங்குவதற்காக பல தெய்வ வழிபாட்டினை நம் முன்னோர்கள் உருவாக்கி உள்ளனர். பசிக்காக யாரும் தினசரி அரிசியை மட்டுமே சாப்பிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் அரிசியிலேயே இட்லி, தோசை, ஆப்பம், புட்டு என பல வித உணவுகளை செய்துதான் சாப்பிடுகிறோம். உணவிற்கே இத்தனை வகை தேவைப்படும்போது ஆன்மீகத்துக்கு பல கடவுள்கள் தேவைப்படாதா?

         பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் கடவுள் அவர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எல்லா உயிர்களிலும் பரம்பொருள் சிவன் இருக்கின்றார். அதனால் மரம் செடி விலங்குகள் பறவைகள் எல்லாவற்றிலும் இருக்கும் இறைவனை வழிபடுகிறோம். சித்தர்கள் செடி கொடிகளிலும் உயிர் இருப்பதால் அவற்றை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதற்கு கூட அவற்றை மந்திரங்கள் கூறி வழிபட்டு அனுமதி பெற்று பறிக்க கூறுகின்றனர். பைரவ வழிபாடு செய்பவர்களை நாய்கள் கடிக்காது. சிவமந்திரங்களை தொடர்ந்து ஜெபித்து வருபவர்களை எந்த கொடிய விலங்கும் தொந்தரவு செய்யாது என்பதை காடுகளில் தவம் செய்யும் சன்யாசிகளை பார்த்தால் தெரியும்.   சிவலிங்க தத்துவமே லிங் கம். ஒடுங்கி விரிவது என்று பொருள். சிவலிங்கம் அருஉருவின் அடையாளம். உயிர்கள் இறைவனுக்குள் ஒடுங்கி மீண்டும் இறைவன் திருவுளப்படி வெளிப்படும். பயறுவகைகளை காற்றுப்புகாத புட்டியில் அடைத்து வைத்தாலும் சில காலங்களுக்கு பின் உள்ளே வண்டுகள் உருவாவது போல் உயிர்களை பிறப்பிக்கிறார்.  கடவுளைப்போல் இந்த உலகம் பிரபஞ்சமும் அனாதி. அவற்றுக்கு ஆரம்பம் முடிவு கிடையாது. ஆன்மா அழிவில்லாதது. மீண்டும் மீண்டும் கர்மவினைகளுக்கேற்ப பிறவிகளை அடைகிறது. பாவம் செய்தால் கஷ்டங்கள், பிரச்னைகளையும், புண்ணியம் செய்தால் நல்ல ஆரோக்கியமான வாழ்வு வளங்களையும் பெறலாம் என அறிவுறுத்தி தர்மம் செய்வதற்கு முக்கியத்துவம் தருகிறது.  

         நம் முன்னோர்கள் ஒரு கோவிலை வைத்து பல ஆயிரம் மக்கள் பிழைக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். செல்வம் ஒரே இடத்தில் தங்காமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்  என்பதற்காக இறைவனை நம்மைப் போன்றே காலை துயில் எழுவது  குளிக்க (அபிஷேகம்) செய்வது,  அலங்காரம் செய்வது,  உணவு (நைவேத்தியம்) படைப்பது,  இரவு துயில் கொள்வது போன்ற வழிபாட்டு முறையை உருவாக்கி உள்ளனர். இந்த வழிபாட்டு முறையில் ஈடுபடும்போது மனம் ஒருமைப்படுகிறது. அமைதி அடைகிறது.  ஒரே மாதத்தில் பல விழாக்களை பாரம்பரிய ஆடல் பாடல்களுடன் கொண்டாட செய்து மகிழ்ச்சியாக வாழ வைத்துள்ளனர்.

           கோவிலில் விளக்கேற்றுவது முதல் பள்ளியறை பூஜை வரை நாம் வழிபடும் முறையில் ஏராளமான மக்கள் பிழைக்க முடிகிறது. அகல்விளக்கு, திரி, எண்ணெய், நெய், பத்தி, சுடம், கற்பூரம், புஷ்பம், மாப்பொடி மஞ்சள்பொடி, திரவியபொடி பால் தயிர் தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பட்டாடை வஸ்திரங்கள், ஹோம பொருட்கள் போன்றவற்றை தயாரிப்பவர்கள், மொத்த வியாபாரம் சில்லரை விற்பனை செய்பவர்கள் என ஒரு கோவில் ஏராளமானவர்களின் வாழ்க்கையை வளமாக்குகிறது. ஆபிரகாமிய மத வழிபாட்டு முறையினால் ஒரு மெழுகுவர்த்தி தயாரிப்பவர்கூட பலனடைய முடியாது.

       காமத்திற்காக கடவுளுக்கு துணைகளை உருவாக்கவில்லை. மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதற்காக சிவனையும் சக்தியையும் சேர்த்து அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனையும் நாராயணனையும் சேர்த்து சங்கரநாராயணராகவும் வழிபடுகிறோம்.  எங்கும் நிறைந்த பரம்பொருளை நாங்கள் விரும்பிய வடிவில் ஒருசிற்பத்தை  செய்து அதில் ஆவாகனம் செய்து அமரச்செய்து வழிபடுகிறோம். இந்த கடவுள்களின் சக்தி உண்மை என்பதற்கு சிவனை வழிபடும் சன்யாசி தீயின்மேல் அமர்ந்திருப்பதையும், கைலாய மலையின் கடுங்குளிரில் இடுப்பில் ஒரு சிறு துணியுடன் உணவே கிடைக்காத பனியால் சுழப்பட்ட குகைகளில் சில சன்யாசிகள் வாழ்வதையும் தற்போதும் காணலாம். பாம்பு கடித்தவர்களை மந்திரங்கள் கூறி பார்வை பார்த்து இப்போதும் குணமாக்கி வருகின்றனா்.

       ஐயப்பன் பிறப்பை கொச்சைப்படுத்துகின்றனர். பைபிளில் தாவீது பத்சேபாளை ரேப்பண்ணி பிள்ளை பிறந்த மாதிரி இந்து மதத்தில் கிடையாது. மகிஷி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தையால்தான் மரணம் வேண்டும் என்று வரம் வாங்கியதால் (அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில்) அவளை அழிக்க இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை தோன்ற செய்கின்றனர்.  சிவபெருமானால் நெற்றிக்கண்ணில் முருகனை தோன்றச் செய்தது போல் ஐயப்பனை தோன்ற செய்திருக்க முடியும். மகிஷி தவம் செய்த பெற்ற வரத்திற்காக அவள் கேட்டபடி தோன்றச்செய்தார்.  சிவன் காமனை எரித்தவர். அவர் காமத்தில் ஐயப்பனை பெற்றார் என்று கூறுவது அபத்தம்.

              ஏராளமான ரிஷிகள், மகான்கள்  எத்தனையோ அற்புதங்கள் செய்து மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். சமீப காலத்தில் வாழ்ந்த ரமணர், ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதை, சுவாமி விவேகானந்தர்,  காஞ்சி பெரியவர்,  யோகிராம் சுரத்குமார், ராம்பாபு ஸ்வாமிகள், பூண்டிமகான், சுட்டுக்கோல் மாயாண்டி,  தேவதாஸ் சுவாமிகள், சுவாமி தோப்பு ஐயா வைகுண்டர், வள்ளலார் போன்றோர் மக்களின் துயர் தீர்த்து செய்த அற்புதங்கள் ஏராளமாக யூடியூபில் உள்ளது.  இதை எல்லாம் நம்பாத கூமுட்டைகள் 2000 வருடம் முன்பு நடந்ததாக கூறப்படும் இஸ்ரவேல் கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு சொந்த நாட்டின்  உண்மைகளை உணராமல் வாழ்க்கையை  வீணாக்குகிறார்கள்.  பாரத மண்ணில் பிறப்பதற்கு ஒவ்வொருவரும் தவம் செய்து கொண்டு இருக்கும்போது இங்கு பிறந்து புனித ஸ்தலங்கள், கோவில்களை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்து சிவசிவ என்று சொல்ல இயலாத தீவினையாளர்களாக வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்குகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக