பின்பற்றுபவர்கள்

புதன், 17 ஜூன், 2020

கல்லை வணங்குகிறோமா?

       ஆபிரகாமிய மத மூடர்கள் மற்றும் திக பகுத்தறிவு குஞ்சுகள் இந்துக்கள் கல்லை / சிலையை வணங்குகின்றோம் என்று மேதாவித்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்து மத தத்துவங்கள் அறியா மூடர்களுக்கு சரியான பதில் தரவேண்டியது நம் கடமை. அதற்கான விளக்கங்களை நாமும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு

             நாம் எவரும் கல்லே எனக்கு அதைக் கொடு இதைக்கொடு என்று கேட்கவில்லை. தெய்வத்தின் பெயரைக் கூறிதான் வணங்குகிறோம். ஒரு கல் கடவுளாக மாறுவது எளிதானது அல்ல. ஒரு சிற்பி ஆண் தெய்வத்திற்கு ஆண் கல்லையும் பெண் தெய்வத்திற்கு பெண் கல்லையும் தோ்வு செய்கிறார். அதன் பிறகு விரதமிருந்து அந்த சிற்பத்தை செய்யும் வேலையை செய்ய துவங்குகிறார். சிற்பம் முடிவுற்றவுடன் கண்கள் மட்டும் திறக்காமல் இருக்கும். பிரதிஷ்டை செய்யும் அன்று இறைவனை ஆவாகனம் செய்து மருந்து சாத்தி கண் திறந்த பிறகுதான் அது கடவுளாகிறது. 

           கல் பேசுமா? நடக்குமா? என்று உளறும் மூடர்கள் ஆந்திராவில் பானக நரசிம்மர் சிலை எப்படி பானகரம் குடிக்கிறது என்று பார்க்க வேண்டும். திருப்புறம்பியம் பிள்ளையார் எப்படி தேனை உறிஞ்சிக்கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். சிக்கலில் முருகன் அம்பாளிடம் வேல்வாங்கும்போது முருகனுக்கு வியர்வை பெருக்கெடுப்பதை பார்க்க வேண்டும். கேரளபுரம் பிள்ளையார் எப்படி ஆறுமாதம் கருப்பாக இருந்து பின் ஆறு மாதத்திற்கு வெள்ளையாக மாறுகிறார் என்று பார்க்க வேண்டும். 


                இறைவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்பது நம் தத்துவம். அவன் இல்லாத வஸ்து இல்லை. ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இறைவன் மீது பக்தி கொள்வதற்கு ஒரு உருவம் தேவைப்படுகிறது. அதனால்தான் இறைவனுக்கு உருவம் கொடுத்து வழிபடுகிறோம். இறைவனுக்கு உருவம் இல்லாமல் வழிபடும் சில கோவில்களும் உண்டு.  சிவன் அரு உருவமாக இருப்பதால் லிங்க வடிவில் வணங்குகிறோம். மேலும் இறைவனை சிற்பமாக வழிபடும்போது அபிஷேகம் அலங்காரம் செய்வது என நம் மனத்தை இறைவன் மீது ஒருமுகப்படுத்தப்படும்போது மனம் அமைதி அடைகிறது. அதனால்தான் சித்தர்கள் ஞானிகள் இப்படி ஒரு வழிபாட்டு முறையை தந்தருளியிருக்கின்றனர். 


             சாத்தான் மீது கல் எறிவது மூடத்தனம் இல்லை. கொலைசெய்யப்பட்டு இறந்துபோன ஏசு படத்தை வீட்டில்  வைத்தால் மூடத்தனம் இல்லை. சமாதியில் மலர் அலங்காரம் செய்து தயிர்வடை,  முரசொலி வைத்து மரியாதை செய்வது பகுத்தறிவாம். செத்துப்போனவனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது மாலைபோடுவது பகுத்தறிவாம். இறைவனுக்கு அதை இந்துக்கள் செய்தால் மூட நம்பிக்கையாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக