என் நண்பரின் வீட்டில் பூமர் என்ற பொல்லாத நாய் இருந்தது. தெருவில் செல்பவர்களை எல்லாம் பார்த்துக்குரைத்துக்கொண்டே இருக்கும். வீட்டு கதவில் கை வைத்து விட முடியாது. கடித்துவிடும். அவர்கள் வீட்டிற்கு ஒரு சன்யாசி பிச்சை கேட்டு வந்தார். வீட்டு வாசலில் நின்ற நண்பர் ”நாய் இருக்கிறது. தள்ளி நில்லுங்கள் என்றிருக்கிறார். அப்போது நாயும் வந்துவிட்டது. அப்போது அவர் ”இந்த நாயா? இது என்னை ஒன்றும் செய்யாது. போ.போ” என்றிருக்கிறார். அது உடனே வீட்டுக்குள் ஓடிப்போய்விட்டது. அப்போது எங்களுக்கு இளம் வயது. அந்த சன்யாசியின் மகத்துவம் புரியவில்லை.
ஒருமுறை தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சண்டை போட்டுக்கொண்டிருந்த நாய்களில் ஒன்று நேராக வந்து என் காலைக் கடித்தது. அதற்கு வைத்தியம் பார்த்தேன். இதுபோல் நாய்களிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள என்ன செய்வது? இந்து மதம் எல்லாவற்றுக்கும் வழி கண்டு பிடித்து வைத்துள்ளது. நீங்கள் பைரவர் வழிபாடு செய்பவராக இருந்தால் நிச்சயமாக உங்களை நாய் கடிக்காது. மேலும் முருகன், சிவன் வழிபாடு செய்பவர்களையும் விலங்குகள் ஒன்றும் செய்யாது. பாம்பு நம் மேல் ஏறிச் சென்றாலும் கடிக்காது. ஒரு நண்பர் தினசரி கந்தசஷ்டி சொல்பவர். அவர் தினசரி வாக்கிங் செல்லும்போது எந்த நாயும் குரைக்காது. மற்றொரு நண்பர் அவரிடம் சில தெருக்களில் நாய் தொந்தரவு அதிகம் உள்ளது. அதனால் அவ்வழியே நான் செல்வதில்லை என்றிருக்கிறார். நான் சஷ்டி கவசம் சொல்வதால் என்னை எந்த நாயும் ஒன்றும் செய்வதில்லை. வேண்டுமானால் நீங்களும் சொல்லிப் பாருங்கள் என்றிருக்கிறார். நீங்கள் வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டால் தெருவில் இருக்கும் நாய்களுக்கு உங்களைப் பார்த்து குரைக்க வேண்டும் என்றோ கடிக்க வேண்டும் என்றோ தோன்றாது. ஏதோ கோவிலுக்கு சென்றோம். கும்பிடு போட்டுவிட்டு வந்தோம் என்பது வழிபாடு ஆகாது. விளக்கேற்றி மந்திரங்களாக இருந்தால் குறைந்தது 108 அல்லது பாடல்கள் பாடி தூப, தீபம் காட்டி தினசரி வணங்கி வர வேண்டும். இது அனுபவ பூர்வ உண்மை. செய்து பார்த்து பலன் பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக