பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

திருவண்ணாமலையில் ஆன்மீக அனுபவம்


12 ஆகஸ்ட், 2012

 வெகு நாட்களாக திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு அண்ணாமலையார் 2008ல்தான் அருள்புரிந்தார். என் தங்கை அண்ணாமலைக்கு சென்றால் என்னை அழைத்து போ என்று சொல்ல இருவரும் திருவண்ணாமலைக்கு கிளம்பினோம். அங்கிருந்த ஒரு நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு மாலை 6 மணி அளவில் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

 நடந்து பழக்கமில்லாததாலும் உடல் சரியாக ஒத்துழைக்காததாலும் ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டு இருந்து விட்டு காலை மூன்று மணி அளவில்தான் குபேர லிங்கத்தை தரிசித்து விட்டு மேலும் நடந்து வந்தோம். அப்போது பிளாட்பாரத்தில் சன்யாசி போன்ற தோற்றம் உடைய ஒருவர் ருத்ராட்சம், ஸ்படிகமணி, சாளக்கிராமம் போன்ற ஆன்மீக பொருட்களை ஒரு மேஜையில் பரப்பி விற்பனை செய்ய வைத்திருந்தார். அவர் அருகில் பிளாட்பாரத்தில் சற்று ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தோம்.  

அவர் திடீரென்று சற்று கடையைப் பார்த்துக்கொள்ளுங்கள் நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்றார். நாங்களும் அவர் சாப்பிட்டுவிட்டு வருவதற்காக காத்துக்கொண்டிருந்தோம்.

 இருபது நிமிடமாகியும் அவர் வரவில்லை. என் தங்கையோஇன்னும் எவ்வளவு நேரம்தான் இருப்பது. கிளம்புவோம்என்றார். நான், ”நம்மிடம் இதை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் அப்படியே போட்டுவிட்டு சென்றால் யாராவது திருடி சென்றுவிட்டால் அந்த பாவம் நம்மைச் சேரும். சற்று பொறுப்போம்என்றேன். மீண்டும் மீண்டும் என் தங்கை கிளம்ப வேண்டும் என்று கூற ஆரம்பிக்க கண்ணை மூடிபகவானே இது என்ன சோதனை? ” என்று வேண்டு அடுத்த வினாடி அவர் வந்து விட்டார்.  

அதிகாலை அந்த நேரத்தில் பக்கத்தில் கடைகள் ஏதும் இல்லாத இடத்தில் அவர் எங்கு சென்று சாப்பிட்டார் என்று தெரியாது. அதன் பின் உங்களை அதிகம் காக்க வைத்துவிட்டேனோ என்றவர் நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியன். என்னிடம் ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஆண்களைப் போல் ருத்ராட்சத்தை கழுத்தில் பெண்களும் எப்போதும் அணியக்கூடிய ருத்ராட்சம் உள்ளது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றார். இல்லை சுவாமி என்றேன். மூன்றுமுக ருத்ராட்சம் ஒன்றை என் தங்கையிடம் கொடுத்து இதை எப்போதும் கழுத்தில் அணிந்திரு. தாலியில் கோர்த்து போட்டுக்கொள்ளலாம்என்றார். என் தங்கையோ என் கணவர் விரும்ப மாட்டார். வேண்டாம் சாமிஎன்றாள். நான் அதைக் கொடுங்கள் என் மனைவிக்கு அணிவிக்கிறேன்என்று அவரிடம் வாங்கி அதை என் மனைவிக்கு அணிவித்தேன். அதை அணிந்ததால்தானோ என்னவோ ஒரு பெரும் ஆபத்திலிருந்து என் மனைவி காப்பாற்றப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக