பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

எளிதாக சம்பாதிப்பது எப்படி


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011  

பணம் சம்பாதிப்பதற்கு ஏராளமான தொழில்கள் உள்ளன. எல்லா தொழில்களிலும் சில ரிஸ்க் இருக்கும். எந்த தொழிலும் மனசாட்சிப்படி நேர்மையாக தொழில் செய்தால் வருமானம் குறைவாக இருக்கும். ஆனால் நிலைக்கும். குறுக்கு வழியில் சம்பாதித்தால் சீக்கிரம் பணக்காரனாகிவிடலாம். ஆனால் நிலைக்காது. இரண்டும் நடக்க வேண்டும் என்றால் தேர்வு செய்ய வேண்டிய தொழில் பாதிரியார் தொழில். இப்போது இந்த தொழிலில்தான் நீங்கள் எந்த தகிடுதத்தம் செய்தாலும் சிறைக்கு போகாமல் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாம்.  

பேச்சுத்திறமை இருந்தால் போதும். உதாரணமாக மோகன் சி லாசரஸ், தினகரன் போன்றோர். இதைப் பதிவு செய்யக் காரணம் எனது நண்பரின் அனுபவம் ஒன்று.  

காவல்துறையில் பணிபுரியும் முத்து என்ற நண்பர் இந்துவாக இருந்தாலும் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவர். அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த கிறிஸ்தவா் ஒருவரைப் பார்க்க ஒரு பாதிரியார் அடிக்கடி வருவார். இவரும் அவருடன் சாதாரணமாக பழகினார். ஒருநாள் இவர் வீட்டுக்கு வந்து உங்கள் குடும்பத்துக்காக ஜெபிக்கிறேன். குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி இவர் வீட்டுக்கு வந்து ஜெபித்து விட்டு சென்றார். இப்படியே அடிக்கடி வந்து ஜெபம் செய்து விட்டு போனார். நமக்காக ஜெபிக்கிறாரே. இவருக்கு நாம் எதுவும் செய்யவில்லையே என்று ரூ.ஐம்பது கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்டவுடன் ஆண்டவரே இந்த பணம் இவருக்கு பலமடங்காக பெருக வேண்டும் என்று இவருக்காக சிறப்பு ஜெபம் செய்தார். அப்போது பழைய டிவிஎஸ்.பிப்டி வண்டியில் வந்து கொண்டிருந்தார். ஒருநாள் ஜெபம் செய்து விட்டு வருமானத்தில் பத்தில் ஒருபங்கை கொடுக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. அதுபோல் கொடுத்தால் உங்கள் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும். என்று தூண்டில் போட்டுள்ளார். அப்போது இவர் வாங்கிய சம்பளம் ஐந்தாயிரம் ரூபாய். இவரும் மறுமுறை ஜெபம் செய்தபோது ஐநூறு ரூபாய் கொடுத்துள்ளார். ஐநூறு ரூபாய் கிடைத்தவுடன் மிகவும் சந்தோஷமாக பெரிய ஜபம் செய்து சென்றிருக்கிறார். பல மாதங்கள் இப்படியே தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள் புத்தம் புதிய யமஹா பைக்கில் வந்து இறங்கியிருக்கிறார். வண்டி எண் கூட பதிவு செய்யப்படவில்லை. பாதிரியாரிடம் வண்டி என்ன விலை என்று விசாரித்து விட்டு பிரதர் பைனான்சில் வாங்கினீர்களா. எவ்வளவு தவணை கட்டுகிறீர்கள் என்று கேட்க அவர்நோ நோ ரெடி கேஷ் கொடுத்து வாங்கினேன் என்று சொல்லியிருக்கிறார். இப்போதுதான் இவருக்கு உறைத்தது. நாம் அரசு ஊழியராக இருந்தும் நம்மால் ரெடிகேஷில் வண்டி வாங்க முடியவில்லை. இவர் வாங்குகிறார் என்றால் இவருக்கு வருமானம் எவ்வளவு. எப்படி வருகிறது என்று யோசிக்க ஆரம்பித்து அதன் பின் பணம் கொடுப்பதையே நிறுத்தி விட்டார

 இப்படித்தான் மக்கள் ஏமாறுகிறார்கள். ஏழை கிறிஸ்தவர்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். இந்த ஏமாற்று பேர்வழிகள் வசதியாக வாழ்கிறார்கள். இப்போது எளிதாக பணக்காரணாகும் வழி தெரிந்து விட்டதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக