பைபிளில் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கு சொல்ல வேண்டியது என்ன என்றால் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரங்கள் ஆரம்பிகின்றன.
இஸ்ரவேல் புத்திரர்களுக்கு மோசே மூலம் கர்த்தர் உத்தரவு பிறப்பிக்கிறார். உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் சொல்லவில்லை. இஸ்ரவேல் யார். யாகோபு என்பவனின் பெயரை இஸ்ரவேல் என கர்த்தர் மாற்றுகிறார். இவனுக்கு இரண்டு மனைவி. அவர்களுக்கு இரண்டு வேலைக்காரிகள். இந்த கதையே ஆபாசமாக உள்ளது. முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. அவள் தன் வேலைக்காரி மூலம் பிள்ளை கொடுக்க சொல்கிறாள். அவனும் பிள்ளை கொடுக்கிறான். இரண்டாவது மனைவி சில குழந்தை பெற்றபின் அவளின் கற்பத்தை கர்த்தர் அடைத்து விடுகிறார். அவளும் அவள் வேலைகாரி மூலம் குழந்தை கொடுக்க சொல்கிறாள். அவளிடமும் உறவுகொண்டு பிள்ளை பிறக்கிறது. இவர்களின் வம்சம்தான் இஸ்ரவேல் வம்சம். இவர்களை தேனும் பாலும் ஓடுகிற நாட்டிற்கு கூட்டி போகிறேன் என்று வழியில் உள்ள கானானியர், எகிப்தியர், எப்பூசியர் என பல வம்சதவர்களை கொன்று கொள்ளை அடித்து வழிநடத்துகிறார் கருணை மயமான கர்த்தர். விரிவாக EVILBIBLE.COM.இல் பாருங்கள்.
புதிய ஏற்பாட்டிலும் இஸ்ரவேலர்களுக்கு ரட்சகராக ஏசு பிறந்தார். என்று உள்ளது. ஏசுவும் காணாமல் போன ஆட்டுக்குட்டியாகிய இஸ்ரவேலர்களுக்காகதான் அனுப்பபட்டிருகிரேன் என்கிறார். தன் சீடர்களை இஸ்ரவேலர்கள் தேசங்களுக்கு மட்டும் செல்லுங்கள். புற ஜாதியார் தேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்கிறார்.
ஆனால் பவுல்தான் உலகம் முழுவதும் ஏசுவுக்காக பொய் சொல்லியாவது பிரசங்கம் பண்ண சொல்கிறார். ஏசு சொன்னதை விட்டுவிட்டு பவுல் சொன்ன படி எல்லா பித்தலாட்டமும் செய்து கொண்டிருகின்றனர். மேற்படி இஸ்ரவேல் எனப்படுவர்கள் தற்போது இஸ்ரேல் நாட்டில் வாழும் யூதர்கள்தான். ஆனால் அவர்கள் ஏசுவை பின்பற்றவில்லை. யூதர்களை நெறிபடுத்த முயன்ற ஏசுவால் அதை நிறைவேற்ற முடியவில்லை. காசையோ அப்பத்தையோ பைகளில் வைத்து கொள்ளாமல் பறவை கலைபோல் உணவை சேர்த்து வைத்து கொள்ளாமல் வாழ் பண ஆசையே எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு சென்றிகிறார். அப்படிப்பட்ட ஒரு நபரைகூட அவரால் உருவாக்க முடியவில்லை. இங்குள்ள பாதிரிகள் இஸ்ரவேலர்கள் என்றால் தேவ ஜனங்கள் என்று புருடா விடுகிறார்கள். இங்குள்ள முட்டாள்களும் அதை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இங்குள்ள எந்த ஜாதியினரும் இஸ்ரவேலர்கள் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குலதெய்வம், சடங்குகள், சம்பிரதாயங்கள் உண்டு. எனவே இஸ்ரவேலர்கள் ஏசுவை வணங்கட்டும். நாம் நம் தெய்வங்களை வணங்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக