பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

நோவாவின் கதை அபத்தங்கள்


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012 

ஆதாம் ஏவாள் கட்டுக்கதையின் தொடர்ச்சியாக நோவாவின் கதை வருகிறது. கிறிஸ்தவ பாதிரிகள் இந்தக் கதையை தங்கள் பிரசங்கத்தில் அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அபத்தங்களாக இருக்கும். மூளை சலவை செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இதை உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இப்போது பைபிள் வசனங்களைப் பாருங்கள்.  

அதிகாரம் 06 3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். 5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, 6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. 7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

 தான் படைத்தவற்றிற்காக வருத்தப்படுகிறார். ஏன் அவர்கள் அக்கிரமங்கள் செய்யாமல் மாற்ற முடியாதா? என்ன அக்கிரமங்கள் செய்தார்கள் என்று சொல்லப்படவில்லை. சரி மனிதர்கள் அக்கிரமங்கள் செய்ததற்காக எல்லா ஜீவராசிகளையும் அழிக்க வேண்டுமா? 8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. 9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். 10 நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான். 11 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. 12 தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். 13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது. அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது. நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.


14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு. அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு. 15 நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும். 16 நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும். 17 வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன். பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். 18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும் உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். 19 சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடனே உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். 20 ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்தில் வரக்கடவது. 21 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார். 22 நோவா அப்படியே செய்தான். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். அதிகாரம் 07 1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். 2 பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், 3 ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். 4 இன்னும் ஏழுநாள் சென்றபின், நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் நிக்கிரகம்பண்ணுவேன் என்றார். 5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

6 ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான். 7 ஜலப்பிரளயத்திற்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். 8 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், 9 ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன. 10 ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. 11 நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன. 12 நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. 13 அன்றைத்தனிமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். 14 அவர்களோடு ஜாதிஜாதியான சகல விதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவவிதமான பட்சிகளும் பிரவேசித்தன. 15 இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்சமான ஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன. 16 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன. அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். 17 ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியன்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று. அது பூமிக்குமேல் மிதந்தது. 18 ஜலம் வெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று. பேழையானது ஜலத்தின்மேல் மிதந்தது. 19 ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம்
மூடப்பட்டன. 20 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. 21 அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும் எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. 22 வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. 23 மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின. நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. 24 ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது

இந்தக் கதையில் கர்த்தர் செய்யச் சொல்லி இருக்கும் பெட்டியின் நீளம் 450 அடி அகலம் 75 அடி உயரம் 45 அடி. இந்த அளவுள்ள பெட்டிக்குள் எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு ஜோடி. சுத்தமான(?) பிராணிகளில் ஏழு ஜோடி . 150 நாட்களுக்கு தேவையான அவைகளுக்கான உணவு இவற்றுடன் ஒரு பெட்டிக்குள் இருக்க முடியுமா? சிங்கம், புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் எதை 5 மாதங்களுக்கு சாப்பிட்டு இருக்கும்? ஜோடியாக பெட்டிக்குள் இருந்த சைவ விலங்குகள் எல்லாவற்றையும் அசைவ விலங்குகள் சாப்பிட்டு இருக்குமே. பெட்டிக்குள் நோவாவின் குடும்பத்தினர் சுகமாக இருக்க வெளியே நீரில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் இறந்து மிதந்து கொண்டு அல்லவா இருந்திருக்கும். இதை செய்ய எப்படி கர்த்தருக்கு மனம் வந்தது? அதிகாரம்.8 14 இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. 15 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: 16 நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். 17 உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு. அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார். 18 அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள். 19 பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன. 20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாய்ப் பலியிட்டான். கர்த்தர் இங்கே நோவா செய்யும் உயிர்பலியை ஏற்றுக்கொள்கிறார். பெட்டிக்குள் இருந்த ஒவ்வொரு ஜோடிகளில் சிங்கம்,புலி சாப்பிட்டு எஞ்சிய? சுத்தமான பறவை, விலங்குகளை பலியிடுகிறான். ஏற்கனவே ஆதாமின் மகன் ஆபேல் கொடுத்த பிராணிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார். காயீன் தன் தம்பியைக் கொலை செய்ததற்கு அவனைத் தண்டிக்கவில்லை.(அல்லாவாக இருந்திருந்தால் உடனே காயீனைக் கொன்றிருப்பார்)    

21 (நோவா கொடுத்த தகனபலி)சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை. மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது. நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. 22 பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார் அதிகாரம்.9 10 உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். 11 இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். இன்று வரை கர்த்தர் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. இனி நீரினால் பிரளயத்தை உண்டாக்கி அழிக்க மாட்டேன் என்று கொடுத்த வாக்குறுதி காற்றில் கரைந்து போய்விட்டது. சுனாமி அவ்வப்போது வந்து கொண்டுதானே இருக்கிறது.அவர் உள்ளத்தில் சொன்னதைக் கண்டுபிடித்தவர் யார்? 20 நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். 21 அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். 22 அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். 23 அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. 24 நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, 25 கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். 26 சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். 27 யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார். அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான். கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார். 28 ஜலப்பிரளத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்தான். உத்தமனாகிய நோவா திராட்சைரசம் குடித்து போதையில் கிடக்கிறான். கானானை நோவா ஏன் சபிக்கிறான் என்று முதலில் எனக்கு புரியவில்லை. வேறொரு தளத்தில் அவன் மகன் ஓரினபுணர்ச்சி கொள்கிறான். அதனால் சபிக்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கானானின் பரம்பரைதான் கானானியர். பிற்காலத்தில் கர்த்தர் அவர்களை வேட்டையாட உத்தரவிடுகிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக